வானவியல் sem 4 Dr Jayanthi sivasankar

Ug tamil Lessons761 words

Full Transcript

அனைவருக்கும் வணக்கம். யூஜி தமிழ் லெசன் இதுல செமஸ்டர் 4ல இருக்கற வானவியல் அப்படிங்கிற பாடத்தைதான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம். இந்த வானவியல் அப்படின்னு சொல்லும்போது இதுல என்னென்ன தலைப்புகள் எல்லாம் நம்ம பார்க்க போறோம் அப்படின்னா இதுல குறிப்புச் சட்டகத்தோட முக்கியமான நம்ம நோட்ஸ் வடிவத்துல குறிப்புச் சட்டகம் வழியாதான் உங்களுக்கு நான் இதை விளக்க போறேன். இப்போ நம்ம முதல்ல வானவியல்னா என்ன அப்படிங்கற விளக்கத்தை பார்க்க போறோம். அடுத்ததா பாத்தீங்கன்னா இந்த காணொளியில அதனுடைய வரலாறு என்ன? இதுல அறிவியல் புரட்சி செய்தவர்கள் யார் யார்? வானியலில் இருக்கின்ற உபத்துறைகள் என்னென்ன? அடுத்தது தமிழ் இலக்கியங்களில் வானியல் அறிவு என்பது எப்படி எல்லாம் காணப்பட்டது? அப்படிங்கறது. அதுல அவங்க என்ன நிறைய சொல்றாங்க? அதெல்லாம் நான் அடுத்த காணொளியில சொல்றேன். இந்த காணொளியில இதை மட்டும் தான் நம்ம பாக்க போறோம். முதல்ல நம்ம பார்க்க போறது வானியல்னா என்ன அப்படிங்கறத நம்ம நல்லா தெரிஞ்சுக்கணும் இல்லைங்களா அப்போ வானியல்னா என்ன அப்படின்னா நம்மளுடைய பூமி இருக்கு இல்லையா அந்த வளிமண்டலம் காற்று மண்டலம் இருக்கு இல்லையா அதுக்கு அப்பால் இருக்கின்ற வானத்தில் இருக்கிற பொருட்கள்தான் அப்ப என்னென்ன நட்சத்திரங்கள் அதுக்கப்புறமா அங்க இருக்கிற கோள்கள் அதுக்கப்புறம் வால்மீன்கள் அதுக்கப்புறமா வந்து விண்மீன் திறல்கள் இதை பத்திய நிகழ்வுகளும் அங்க இருக்கின்ற காஸ்மிக் பின்னணி கதிர்வீச்சு இதை பத்தி பத்தி எல்லாம் அறிவியல் ஆய்வுதான் நமக்கு வானியல் அப்படின்னு சொல்லப்படுது. அப்போ நமக்கு உடனே தோணும். அந்த காலத்துல எப்படி எல்லாம் வந்து அந்த வானத்தை பத்தி எல்லாம் தெரிஞ்சுண்ு இருப்பாங்க அப்படிங்கறது நமக்கு தோணும் இல்லைங்களா அப்போ அதனுடைய வரலாறு அப்படிங்கறது நமக்கு ரொம்ப முக்கியமா இருக்கு. எனவே இந்த வரலாறை நான் அப்படியே உங்களுக்கு சொல்றேன் நீங்க பார்த்துக்கோங்க. அந்த காலத்துல பாத்தீங்கன்னா வானியல் அப்படிங்கறத அவங்க வெறும் கண்ணால மட்டும்தான் பார்த்திருப்பாங்க. பிறகு பாத்தீங்கன்னா தொலைநோக்கி அப்படிங்கறது கண்டுபிடிச்ச அப்புறமா டெலஸ்கோப் அப்படிங்கறத கண்டுபிடிச்ச அப்புறமா வானியல் ஆய்வுகளை மேற்கொள்றவங்க அதுக்கப்புறம் உயர்ந்த கட்டிடங்கள் அப்புறம் வேற உயர்ந்த இடங்கள் இதுல எல்லாம் போய் இருந்துட்டு அந்த டெலஸ்கோப் மூலமா தன்னுடைய அந்த வெறும் கண்களை வச்சு அந்த டெலஸ்கோப்ல அந்த உற்று நோக்கி அதன் மூலமா வானத்தில் இருக்கின்ற நிகழ்வுகளெல்லாம் அவங்க பாக்க தொடங்கியிருப்பாங்க அதுக்கப்புறமா பூமியில இருக்கிற சூரியன் சந்திரன் அதுக்கப்புறமா வந்து அந்த பிற கோள்கள் இதெல்லாம் வந்து அவங்க ஆய்வு செஞ்சிருக்கணும். பூமிதான் வந்து நடுவுல இருக்கணும் சூரியன், சந்திரன் இந்த கோள்கள் வெண்மீன்கள் இதெல்லாம் வந்து பூமியை சுற்றி வர்றத அந்த காலத்துல நம்பினாங்க. இப்படிதான் இந்த வானியல் பற்றிய ஆய்வு அப்படிங்கறது தொடங்கி இருக்கணும். இதுல நான் உங்களுக்கு முக்கியமா சொல்ல போறது என்னன்னா சாரோசு சுழற்சி அப்படிங்கறது எப்படின்னா என்னன்னா சந்திர கிரகணம் இருக்கு இல்லையா அது ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையில நிகழ்றத பாபிலோனர்கள் தான் கண்டுபிடிச்சாங்க. இதுக்குதான் சாரோசு சுழற்சி அப்படின்னு பேரு. அதே மாதிரி தொலைநோக்கி டெலஸ்கோப் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடியே கிமு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே சீனர்கள் வந்து சூரிய பாதையினுடைய சரிவை வந்து கண்டுபிடிச்சிருக்காங்க. இவைதான் வானியலுடைய வரலாறாகும். அடுத்ததா நம்ம பார்க்க போறது அறிவியல்ல புரட்சி செய்தவர்கள் யார் யார் அப்படிங்கறதுதான் நிக்கலஸ் கோபர்நெகஸ் அப்படிங்கிறவரு கலிலியோ கலிலி அப்படிங்கிறவரு கெப்லர் அப்படிங்கறவர் ஐசக் நியூட்டன் அப்படிங்கறவங்க இதெல்லாம் உங்களுக்கு இரண்டு மதிப்பெண்கள்லயும் கேட்கலாம் அறிவியல் புரட்சி செய்தவர்கள் யார் யாருன்னு இப்போ நான் வந்து வானியலை பத்தி படிக்க போறேன் அப்படின்னா அதுல என்னெல்லாம் துறைகள் இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா வான் உயிரியல் இருக்கு வான் வேதியல் அண்ட வானியல் விண்வெளி இயங்கியல் வான்பொருள் இயக்க அளவியல், வான் இயற்பவியல், அண்டவேதியல், அண்டவியல், அண்ட வானியல், அண்டவியர்பியல், கோல் நில பண்பியல். இந்த துறைகள் எல்லாம் வந்து வானியல் பத்தியே படிக்கறதுக்கான துறைகளாக இருக்கின்றது. தமிழ் இலக்கியங்கள்ல் இருக்கிற வானியல் அறிவு என்ன அப்படிங்கறத நம்ம இப்ப பார்க்க போறோம். இதுல நான் ஆகாயத்தை பத்தி மட்டும்தான் இந்த இதுல சொல்ல போறேன். ஆகாயம் அப்படின்னு சொல்லும்போது ஆகாயத்தை இவங்க என்னென்ன பெயர்கள் எல்லாம் அழைச்சாங்க அப்படின்னு பாத்தீங்கன்னா வந்து காயம் அப்படின்னு அழைச்சாங்க. ஈயம் அப்படின்னு அழைச்சாங்க. ஆகாயம்னா என்னன்னா எந்த ஆதாரமுமே இல்லாம தானே நிற்பதாகும். ஆகாயமானது நீல நிற மேகம் மேகங்களால் மூடப்பட்டதா இருக்கணும். ஆகாயத்தினுடைய மேற்புறத்தில காற்று செல்ல இயலாத பகுதிகளும் இருக்கின்றது. அத காற்றே இல்லாத வெற்றிடமான பகுதியும் இருக்கு. இது நமக்கு எப்படி தெரியுது அப்படின்னு பாத்தீங்கன்னா இங்க ஒரு பாட்டு கொடுத்திருக்காங்க. வரிது நிலைய காயமும் என்றீவை அப்படின்னு புறநானூறு சொல்லுது. வானம் நீங்கிய நீள் நிற விசும்பின் அப்படின்னு மதுரை காஞ்சியானது சொல்றது. விசும்புன்னா நமக்கு வானம் அப்படின்னு பேரு. சோ வானமானது நீல நிறத்தில் இருக்கிறது அப்படிங்கறது நமக்கு இது மதுரை காஞ்சி சொல்லுது. இப்போ வருது நிலைய காயம் அப்படின்னு புறநாானூறு சொல்லுது இல்லையா? இதனுடைய பின்னணி என்னன்னு பார்ப்போமா? பாட்டை வந்து பாடியவர் வந்து உரையூர் முதுகண்ணன் சாத்தனார் அப்படிங்கிற பெரும் புலவர். இவர் ஒரு நாள் என்ன பண்றாரு சூடன் நலங்கில்லி இருக்காரு இல்லையா அவருடைய அசவைக்கு போறாரு. அப்போ மன்னன் வந்து ஒரு பெரிய சிம்மாசனத்தில அமர்ந்துகிட்டு இருக்காரு. அவர்ட்ட போயிட்டு கேட்கிறாரு புலவரே நீங்க பல ஊருக்கு போயிட்டு வரீங்க பல நாட்டு நடப்புகளும் உங்களுக்கு தெரியும். அப்ப சொல்லுங்க எல்லா நாட்டிலயும் எல்லாரும் எப்படி இருக்காங்க? சோழ நாட பத்தியும் அங்க இருக்கற மன்னர்களை பத்தியும் சொல்லுங்களேன் அப்படின்னு சொல்றாரு. உடனே வந்து நம்மளுடைய புலவர் வந்து சொல்றாரு முதுக்கண்ணன் சாதனார் சொல்றாரு. மன்னா உனது பூம்புகார் துறைமுகத்துல பாத்தீங்கன்னா மரக்கலங்கள் நிறைய பெரிய பெரிய கப்பல் எல்லாம் வந்து நிக்குது. அங்க நிறைய பண்டகங்கள் எல்லாம் வந்து இறங்குது. உன்னோட நாட்டோட பெருமைய வந்து உலகத்துல சொல்றதுக்கே வார்த்தைகளே இல்ல. ஆனா சோழ மன்னனுடைய நாட்டுல பாத்தீங்கன்னா நாயர் இருக்கு இல்லையா அந்த சூரிய பகவானுடைய பயணத்தை பத்தியும் அங்க இருக்கிற கோள்கள் பத்தியும் காற்றினுடைய திசையை பத்தியும் காற்றே இல்லாத ஆகாயத்தை பத்தியும் நேர்ல சென்று அளந்து சொல்ற கணிக்க கூடியவங்களும் அந்த நாட்டில இருக்காங்க ஆனா உன்னுடைய வலிமையை அவங்களால கணிக்கவே முடியாது அப்படின்னு அந்த புலவர் சொல்றாரு இந்த பாட்டுலதான் வரிது நிலைய காயமும் என்று இவை அப்படின்னு ங்கிற வார்த்தையானது இடம் பெற்றிருக்கு. இந்த பாட்டு எப்படி ஆரம்பிக்குது அப்படின்னு பாத்தீங்கன்னா சென்னாயிற்று செலவும் அன்னாயிற்று பரிப்பும் பரிப்பு சூழ்ந்த மண்டிலமும் வலிதிரி தரு திசையும் வரிது நிலைய காயமும் என்றிவை சென்று அளந்து அறிந்தோர் போல என்றும் அப்படின்னு சொல்றாரு. அந்த நாட்டில பாத்தீங்கன்னா எல்லாரும் எல்லாத்தையும் அளந்துரலாம். காற்றே இல்லாத பகுதி கூட இருக்கும். அவங்க வந்து வானத்தை கூட போயிட்டு அளந்துட்டு வந்துரலாம். ஆனா உன்னோட வலிமையை அலக்கவே முடியாது அப்படின்னு இந்த புலவர் சொல்றதுன் மூலமா அந்த காலத்துல ஆகாயத்தை பற்றிய அறிவும் அவர்களுக்கு இருந்தது அப்படிங்கிறத நம்மளால தெரிஞ்சுக்க முடியுது. இதனுடைய தொடர்ச்சியை நம்ம அடுத்த வீடியோல பார்க்கலாம். நன்றி மாணவர்களே.

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

வானவியல் sem 4 Dr Jayanthi sivasankar - YouTube Transcrip...