இணைய நூலகம்/inaya nookagam/ digital library/ virtual library

web Tamil Nanban1,419 words

Full Transcript

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் வெப்தம் நண்பன். இன்னைக்கு நாம் பார்க்க போறது இணைய நூலகம் என்கிற தலைப்பிலான காணொளி. இதை பார்கறதுக்கு முன்னாடி நம்ம சேனல் வரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பாத்துருக்கோம் மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க. பக்கத்துல இருக்கற பெல் பட்டனை கிளிக் பண்ணுங்க. அப்பதான் போடக்கூடிய ஒவ்வொரு வீடியோவும் உடனுக்குடன் உங்களை வந்து சேரும். சரி வாங்க வீடியோக்குள்ள போலாம். ஒரு காலத்துல பாத்தீங்கன்னா ஓலைச்சுவடிகள் எழுதிட்டு இருந்தாங்க. அதுக்கு பிறகு அந்த பாடல்களை இலக்கண இலக்கியங்களை எல்லாம் சேகரிச்சு வச்சிருந்தாங்க. அதற்கு பிறகு பார்த்தீங்க அப்படின்னா அச்சயந்திரங்கள் வந்த பிறகு காகிதம் அச்சிடும்மை இதை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா வந்து அந்த ஓலைச்சுவடிகள் இருந்த பாடல்கள் எல்லாம் வந்து அச்சில கொண்டு வந்தாங்க புத்தகமா மாத்துனாங்க கடந்த இரண்டு நூற்றாண்டுகள்ல் பாத்தீங்கன்னா இதனால நிறைய நூல்கள் வந்து அச்சிடப்பட்டு அத எல்லாமே சேகரிக்கப்பட ஆரம்பிச்ச அதுக்கு பிறகு பாத்தீங்கன்னா அரசாங்கமே இந்த நூல்களை எல்லாம் வந்து சேகரிச்சு நூலகங்கள் அப்படின்ற ஒன்னை உருவாக்கி அதுல இந்த நூல்களை கொண்டு போய் வச்சாங்க அதனால பொது பொதுமக்கள்ல இருந்து, மாணவர்கள்ல இருந்து, ஆசிரியர்ல இருந்து எல்லாருமே அந்த நூலகத்துக்கு போயிட்டு தங்களுக்கு தேவையான நூல்களை எடுத்து படிச்சு அறிவை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாச்சு. இதனால தேசிய நூலகம், மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்கள், கிராம நூலகங்கள் இந்த மாதிரி நிறைய நூலகங்கள் உருவாக ஆரம்பிச்சது. இதுமட்டுமில்லாம பார்த்தீங்க அப்படின்னா இந்த 20ஆம் நூற்றாண்டின் இறுதியில பாத்தீங்கன்னா நிறைய புத்தகங்கள் பதிப்பிக்க பதிப்பிக்க பதிப்பிக்க ஏகப்பட்ட அச்சு புத்தகங்கள் ஏகப்பட்ட புத்தக கண்காட்சிகள் எல்லாருட்டையும் போய் புத்தகங்கள் சேர்ந்தது ஆனா இதற்கு மாற்றாக இன்னொன்று வருமா அப்படின்னு யாருமே கற்பனை கூட பண்ணி பார்க்கல ஆனால் வந்தது அதன் பெயர்தான் இணைய நூலகம் இணைய நூலகம் பற்றி பார்க்கறதுக்கு முன்னாடி அந்த இணைய நூல்கள் அதாவது மின்நூல்கள் சொல்றாங்க இல்லையா இபுக்ஸ் அந்த இபுக்ஸ் எப்படி எப்படி உருவாக்குறாங்க? என்ன மாதிரியான கருவிகள் எல்லாம் அது பயன்படுது அப்படின்றதை பாத்துரலாம். அதாவது மின்னணுவியல் அல்லது எண்முறை பதிப்பு முறையிலதான் இந்த மின்னூல்களை உருவாக்குறாங்க. இதை கம்ப்யூட்டர்ன்னு சொல்லப்படுகிற கணினியில பல வகை கணினி சொல்லப்படுற டேப்லெட்ல திறன்பேசின்னு சொல்லப்படுகிற ஸ்மார்ட்போன்ல இந்த மாதிரி பல் பல்வேறு விதமான கருவிகளிலும் இந்த மின்னூல்களை படிக்கலாம். இது எல்லாமே டிஜிட்டல் முறையில உருவாக்கப்படுகிறது. என்னென்ன டிஜிட்டல் முறைகள் இருக்கு எப்படி எல்லாம் உருவாக்குறாங்க அந்தஃார்மட் என்னஃபைல்ஃார்மட் சொல்லுவாங்க இல்லையா அது என்னன்னு பார்த்தீங்கன்னா ஐந்து விதமானஃைல்ஃார்மட்ல உருவாக்குறாங்க ஒன்னு பிடிஎப் புக்ஃார்மட் அதாவது மின்னூல் அப்படின்னு சொல்லுவோம். ரெண்டாவது எச்டிஎம்எல்ஃர்மட் மீயுரை நூல் எடிஎம்எல் புக்ன்றத மீரை நூல்னு சொல்றாங்க. மூணாவதுஃிளிப் புக் அதாவது புரட்டும் நூல். நான்காவது ஈபப் அதாவது மென்நூல் ஐந்தாவது மொபி அதாவது கிண்டில் நூல் இந்த ஐந்து விதமானஃைல்ஃார்மட்ல இந்த இபுக்ஸ்ஸ வந்து உருவாக்குறாங்க. ஆனா பொதுவாக இணையதளத்தில் பயன்படுத்தக்கூடிய அந்த வடிவம் எதுன்னு பாத்தீங்கன்னா போர்ட்டபிள் டாக்குமெண்ட்ஃார்மட் சொல்லப்படுகிற பிடிஎப் பாார்மட். இந்த பிடிஎப் பாார்மட் வந்து இன்றைக்கு நாம பயன்படுத்திட்டு இருக்கிற எல்லா செல்போனுக்கும் வந்து கம்பர்டபிலா இருக்கு. எல்லா கணினிக்கும் கம்பர்டபிலா இருக்கறதுனால பொருந்தி இருக்கறதுனால இதை அதிகமாக பயன்படுத்துறாங்க. ஆனா சில வகை மின்னூல்கள்ல பாத்தீங்கன்னா படங்கள் ஒளி ஒளி எல்லாம் இருக்கும். அதெல்லாம் வந்து ஈபப் அதே மாதிரி மோபி இந்த ரெண்டுஃபார்மட்ல வந்து கொண்டு வராங்க இன்றைக்கு இருக்கக்கூடிய அந்த வடிவத்தை இதுக்கு முன்னாடி இருந்த தலைமுறை எல்லாம் ஏத்துக்கிட்டாங்களா அவங்க பயன்படுத்துறாங்களானா நிச்சயமாக ஏன்னா ஒரு காலத்துல ஓலைச்சூடிகளை புரட்டுனவங்க எல்லாமே பின்னாடி புத்தகங்களை புரட்ட ஆரம்பிச்சாங்க அதை பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க ஏன்னா அதைவிட அது கொஞ்சம் எளிமையா இருந்தது அதுபோலவே போன தலைமுறை இப்ப இருக்கற இளைய தலைமுறை பயன்படுத்தக்கூடிய அந்த பிடிஎப் பார்மட் புத்தகங்களை பயன்படுத்த ஆரம்பிச்சட்டாங்க ஏன்னா புத்தகங்களை புரட்டினா எப்படி இருக்குமோ அதே மாதிரி அந்த புத்தகங்களை போட்டோவா எடுத்து பிடிஎா மாத்தி இன்றைக்கு இருக்கிற செல்போன்லையும் கம்ப்யூட்டர்லயும் பார்க்கற மாதிரி கொண்டு வந்திருக்காங்க அதனால அந்த பழைய புத்தகங்களை எப்படி புரட்டுவோமோ அதே மாதிரி நம்ம செல்போனையும் புரட்டுனோம் அப்படின்னா அந்த செல்போனை புரட்டும்போது அந்த புத்தகத்தை புரட்டுற மாதிரி சத்தத்தோடயே இன்றைக்கு புத்தகங்கள் வந்துருச்சு அதே மாதிரி அந்த புக் சவுண்டு புரட்டுற சவுண்டே வரும். அதனால இன்றைக்கு இருக்கிற தலைமுறை பயன்படுத்துற அதே டெக்னாலஜிய இதுக்கு முந்தைய தலைமுறையினரும் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. அதனால எல்லா தலைமுறையும் ஏற்றுக்கொண்ட இந்த இபுக் அப்படின்ற ஒருஃார்மட் இன்றைக்கு பிரபலமாக மாறிவிட்டது. மின் நூல் பார்த்தோம். அடுத்து மின் நூலகம் அதாவது எலக்ட்ரானிக் லைப்ரின்னு சொல்றாங்க. இந்த மின் நூலகங்கள்ன்றது ஏற்கனவே சொன்ன முறையிலதான். முன்ன என்ன பண்ணுவோம் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை ஒரு நூலகம்ன்ற ஒரு இடத்துல கொண்டு போய் வைப்போம். எல்லாரும் போய் அங்க படிப்பாங்க. இப்ப இந்த மின்னூலகம்ன்றதும் மின்நூல்களை படங்களை ஆவணங்களை எல்லாத்தையும் ஒரு கணினியில கொண்டு போய் போட்டு வைப்பாங்க. அதுதான் அந்த லைப்ரரி. இப்போ சாதாரணமா நாம அச்சிட்ட புத்தகங்களை வைக்கிற லைப்ரரில குறிப்பிட்ட நேரத்துக்கு தான் நம்ம போக முடியும். குறிப்பிட்ட அளவு ஆட்கள் தான் போய் அதுக்குள்ள உட்கார்ந்து படிக்க முடியும் புத்தகங்கள் எடுக்க முடியும் அப்படின்ற கட்டுப்பாடுகள் எல்லாம் இருக்கு. ஆனா இந்த மின்னூலகங்கள்ல பாத்தீங்கன்னா நீங்க எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இணையவாசதி இருந்துச்சுன்னா எடுத்து படிக்கலாம். எவ்வளவு பேர் வேணாலும் எடுத்து படிக்கலாம். எல்லாமே டிஜிட்டல் கண்டென்ட் அப்படின்ற முறையில் தான் உருவாக்கி இருப்பாங்க. அதனால இது பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கிறது. அடுத்து நாம் பார்க்க போறது தமிழ் இணைய கல்வி குழுமம் அதாவது தமிழ் வர்ச்சுவல் யூனிவர்சிட்டி www.tambu org அப்படின்ற இணையதளம் மூலமாக இதை நாம் பெறலாம். இந்த தமிழ் இணைய கல்வி குழுமம் அப்படின்றது ஏற்கனவே தமிழ் இணைய பல்கலைக்கழகம் அப்படின்ற பெயரில இருந்தது. இன்றைக்கு இருக்கிற இந்த தமிழ் இணைய கல்வி கழகத்தில பார்த்தீங்கன்னா ஒரு மின்னூலகம் இருக்கு. இந்த மின்னூலகத்தில பார்த்தீங்கன்னா சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இருக்கக்கூடிய எல்லாவிதமான நூல்களையும் வந்து பதிப்பிச்சிருக்காங்க. இந்த சங்க இலக்கிய நூல்கள்ல் பார்த்தீங்க அப்படின்னா ஒவ்வொரு பாடலுக்கும் அதற்கான குறிப்புகளோட குறிப்பு சொற்களோட வந்து கொடுத்திருக்காங்க. அதை தேடி பெறக்கூடிய வசியோடம் கொடுத்திருக்காங்க இதுமட்டுமில்லாம பாத்தீங்க அப்படின்னா தமிழ் கத்துக்க விருப்பப்படுற யார் வேண்டுமானாலும் இந்த தமிழ் இணைய கல்வி கழகத்தின் மூலமாக தமிழ் பட்டச்சான்று பட்டய சான்று போன்றதெல்லாம் பெற்று பயன்படுவதற்கான வழிமுறை எல்லாமே இந்த தமிழ் இணைய கல்வி கழகத்தில் கொடுத்திருக்காங்க. அது சார்ந்த பாடல்கள் எல்லாமே மின்னூல்களாகத்தான் இந்த தமிழ் இணைய கல்வி குழுமம் கொடுத்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து நாம் பார்க்க போறது மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம். இந்த திட்டம் பாத்தீங்கன்னா ப்ராஜெக்ட் மதுரை அப்படின்ற பெயரில் அழைக்கப்படுது. இது இணையதளத்தில இலவசமாக நூல்களை வெளியிடக்கூடிய ஒரு திறந்த தன்னார்வ உலகலாவிய முயற்சி அப்படின்னு சொல்லலாம். 1998 பொங்கல் தினத்தன்னைக்கு தான் வந்து தொடங்கி இருக்காங்க. இதுல பார்த்தீங்க அப்படின்னா எந்த ஒரு அரசாங்கமோ தனியார் நிறுவனமோ இதுக்கான எந்த உதவிகளும் வந்து செய்யலன்னு சொல்றாங்க. இது வியாபார நோக்கம் இல்லாம வாலன்டியர்ஸ் வச்சுக்கிட்டு அதாவது தன்னார்வு நிறுவனங்கள் மாதிரி தன்னார்வ முயற்சி உடைய யார் வேண்டுமானாலும் இதுக்கு வந்து உதவிகளை செய்யலாம்ன்ற முறையில தான் வந்து அந்த ஆர்வளர்களை ஒருங்கிணைச்சு இதை வந்து செஞ்சிுட்டு வராங்க இது உலகில வந்து வெவ்வேறு நாடுகள்ல இந்த மாதிரி நிறைய வந்து நடத்தி இருக்காங்க இந்த திட்டத்துக்கு முன்னூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் தமிழ் ஆர்வளர்கள் ஒன்று கூடி உலகலாவி அளவில சேர்த்து நடத்திட்டு இருக்காங்க இது ஒரு நல்ல ஒரு சக்சஸ்புல் ஸ்கீம் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி ஒரு வெற்றி அடைந்த ஒரு திட்டம் கிட்டத்தட்ட 270க்கும் மேற்பட்ட மின்னூல்களை இவங்க வெளியிட்டுருக்காங்கன் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தினுடைய தலைவர் யாருன்னு பார்த்தோம்ன்னா சுவிட்சர்லாந்தில் இருக்கக்கூடிய முனைவர் கூ கல்யாணசுந்தரம் அப்படின்றவர்தான். இந்த தொகுப்பு திட்டத்தில சங்க இலக்கியங்கள் தொடங்கி இக்கால இலக்கியங்கள் வரைக்கும் நிறைய நூல்களை இவங்க பதிப்பிச்சிருக்காங்க. உரை நூல்களை பதிப்பிச்சிருக்காங்க என்றது குறிப்பிடத்தக்கது. இந்த ப்ராஜெக்ட் மதுரை அப்படின்றது உலகலாவிய அளவில இருக்குன்னு சொன்ன அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகள்ல் வாழக்கூடிய தமிழர்கள் எல்லாமே இந்த மின்னூலகத்தை பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள் அப்படின்றதை நினைவுல வச்சுக்கங்க. அடுத்து பாத்தீங்கன்னா சென்னை நூலகம் www.chenlலை.com அப்படின்ற வெப்சைட் பாத்தீங்கன்னா திரு கோ சந்திரசேகரன் அப்படின்ற ஒரு தனி மனிதனுடைய முயற்சியால் உருவானது. வணிக நோக்கத்தில் இயங்கக்கூடிய ஒரு நூலகம் தான் காசு கட்டிதான் நீங்க இதை படிக்க முடியும். இதுல பார்த்தீங்க அப்படின்னா நிறைய நூல்கள் சங்க இலக்கியங்கள் தொடங்கி இக்கால இலக்கியம் வரைக்கும் நிறைய நூல்களை இவங்க ஒரு குறி முறையில அதாவது யூனிகோட் முறையில வந்து கொடுத்திருக்காங்க. எட்டு தொகை 10 பாட்டு 11 கீழ்கணக்கு தொடங்கி பல நூல்களை இவங்க வந்து தேடி சேகரிச்சு இந்த வெப்சைட்ல வந்து கொடுத்துட்டு இருக்காங்க அதனால கம்பர் திருஞான சம்பந்தர் திருகூடராசப்பர் இந்த மாதிரி ஆசிரியர்கள் அடிப்படையிலும் படைப்புகளை ஒருங்கிணைச்சு கொடுத்திருக்காங்க அதே மாதிரி பிடிஎ ஆகவும் கொடுத்திருக்காங்க இதுல உறுப்பினரா சேர்றவங்களுக்கு இந்த பிடிஎப் எல்லாம் டவுன்லோட் பண்ணி படிக்கறதுக்கான வசதி வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்திருக்காங்க அடுத்து பாத்தீங்கன்னா நூலக திட்டம் அதாவதுநூலகம்org என்று சொல்லக்கூடிய இந்த வெப்சைட் பாத்தீங்கன்னா இது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்து ஆவணங்களையும் மின்வடிவில இணையத்தில பேணி பாதுகாத்து வைப்பதற்கான லாப நோக்கம் இல்லாத ஒரு தன்னார்வளர்டைய முயற்சி அப்படின்னு சொல்லி சொல்லணும். இதுல யார் வேண்டுமானாலும் உங்களுடைய பங்களிப்பாக ஒரு நூலை மின்னூலாக மாத்தி கொடுக்கலாம் அப்படின்ற தகவலையும் அவங்க கொடுக்கறாங்க. குறிப்பா சொல்லணும்னா ஈழ தமிழ்நூல்களை மின்னூலாக்கி பாதுகாத்து வழங்கக்கூடிய ஒரு நூலக திட்டம் அப்படின்னு இத சொல்லணும். என்ன பெயர் வைக்கலாம்னு சொல்லி பாத்தீங்கன்னா இணைய ஈழ நூலகம்னே இந்த நூலகத்தை அழைக்கலாம். ஏன்னா அந்த ஈழம் தார்ந்த தமிழ் நூல்களை தான் நிறைய இதுல நம்ம பார்க்க முடியுது. இது மட்டுமில்லாம தமிழ் மரபு அறக்கட்டளைன்ு சொல்லப்படக்கூடிய தமிழ்ஹெரிitேage.orgஜ அப்படின்ற இந்த நிறுவனம் பாத்தீங்கன்னா ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் 2001ல தொடங்கப்பட்டது. இதுலயுமே நிறைய ஓலைச்சுடிகள் எல்லாம் சேகரிச்சு பழைய புத்தகங்களை சேகரிச்சு அது மின்னூலாக வந்து மாத்திட்டு வம். அடுத்து நாம்ம பார்க்க போறது பாத்தீங்கன்னா ஓபன் ரீடிங் ரூம். ஓபன் ட்ரேடிங்ரம்.com அப்படின்ற இந்த வெப்சைட் மூலமா நீங்க உள்ள போயிட்டு நிறைய தமிழ் நூல்களை இந்த நூலகத்தில இருந்து எடுத்து படிக்கலாம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய தமிழ் நூல்களை இவங்க மெண்ணூல் வடிவத்துல இலவசமா கொடுக்குறாங்கன்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஓபன் ரீடிங் ரூம் அப்படின்ற இந்த வெப்சைட்ட்குள்ள போனீங்கன்னா பிரண்ட் பேஜ் அதாவது முகப்பு பக்கத்துல அரசியல் சிறுகதை, நாடகம், நாவல், கவிதை, வரலாறு இந்த மாதிரி மின்னூல்களை அப்படியே அந்த தொகுப்பை வந்து அப்படியே பட்டியில் இட்டுருக்காங்க. உங்களுக்கு எது வேணுமோ அதை கிளிக் பண்ணி நீங்க அதுக்குள்ள போய் படிச்சுக்கலாம். சங்க இலக்கியங்கள் நாட்டுப்புற இலக்கியங்கள் பக்தி இலக்கியங்கள் இந்த மாதிரி பல தமிழ் இலக்கிய நூல்கள் எல்லாமே அழகா வந்து தொகுத்து கொடுத்திருக்காங்க குறிப்பிட்ட சில புத்தகங்களை பதிவிரக்கம் செய்து படிக்கக்கூடிய வசதி வாய்ப்பையும் கொடுத்திருக்காங்க. இதுல நீங்க உறுப்பினரா இருக்கறதுக்கு எந்த கணக்கும் தொடங்க வேண்டியதில்லை. தனியா எந்த மென்பொருளையும் தரவரக்கம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. புத்தகத்துடைய பக்கங்களை அடுத்தடுத்து நீங்க எப்படி வாசிப்பீங்களோ அதே மாதிரி வாசிச்சிட்டு போலாம். கிட்டத்தட்ட 2300 படைப்புகள் இங்க வந்து வாசிக்க கிடைக்குது அப்படின்னு சொல்றாங்க. சிங்கப்பூர் வாழ் தமிழர் அதே மாதிரி மூத்த பத்திரிகையாளர் இருக்கக்கூடிய ரமேஷ் சக்கரபாணி அப்படின்றவர்தான் இந்த இணையத்தளத்தை நடத்திட்டு வராரு. இலவச இணைய நூலகம் அப்படின்னுதான் இதை வந்து அவர் குறிப்பிடுறார். இப்படி இதுபோல பல மின்னூல்கள் தமிழகம் மட்டும்ல்ல உலகம் முழுக்க இருக்கு அதே மாதிரி பலர் நடத்திட்டு வராங்க. இலவசமாகவும் காசு கொடுத்து படிக்கிற மாதிரி இதெல்லாமே வந்து இன்றைய தலைமுறைக்கு தமிழை கத்துகிற ஆர்வத்தை தூண்டும். அதே மாதிரி தமிழ் நூல்களை தேடி ரொம்ப கஷ்டப்பட்டு போய் படிக்க விருப்பம் இல்லாதவர்களை இந்த பக்கம் அழிச்சிட்டு வந்து எல்லாமே ஒரே இடத்துல இங்கேயே இருக்கு படிங்க அப்படின்றதுக்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுக்குது. இது பாத்தீங்கன்னா புத்தகம் பதிப்பிக்கறவங்களுக்கும் ஒரு நல்ல அம்சமாக இருக்கு. ஏன்னா புத்தகம் பதிப்புக்குன்னா அது நிறைய செலவாகும். இந்த மாதிரி இபுக்கா போடும்போது அதனுடைய செலவு ரொம்ப ரொம்ப குறைவு அப்படின்றனால இதன் மூலமாக நிறைய எழுத்தாளர்கள் உருவாகறதுக்கான வாய்ப்பையும் இந்த இணைய புத்தகம் இணைய நூலகம்றது உருவாக்கி கொடுத்திருக்கு. சில பேர் சொல்லலாம். இது வந்து நேரடியா தொட்டு படிக்கிற மாதிரி ஒரு அனுபவத்தை கொடுக்கல அப்படின்னு சொல்லிட்டு இது ஒரு குறையாக சிலருக்கு பட்டாலும் கூட கால மாற்றத்தினால் ஏற்பட்ட இந்த ஊடக மாற்றங்கள் எல்லாமே நல்ல மாற்றங்களாக இன்றைக்கு அமைஞ்சிட்டு வருது. நூல்கள் பலவும் அழியாமல் பாதுகாக்கறது்கான ஒரு நல்ல விஷயமாக இது அமைஞ்சிருக்குன்றத நினைவில் வச்சுக்கிட்டு இன்னும் நிறைய நூல்களை நீங்க படிச்சு பயன்பெறணும் அப்படின்ற கருத்தோடு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம். நான் உங்கள் வெப் தமிழ் நண்பன் இதுபோல நிறைய வீடியோக்கள் நம்ம சேனலுக்கு பார்த்து பயன்பெறுங்கள்

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

இணைய நூலகம்/inaya nookagam/ digital library/ virtual libr...