இணையத் தமிழ் பயன்பாடு#இணையத் தமிழ்#Dr.S. Prabavathi

UG-Tamil vaguppu1,668 words

Full Transcript

அனைவருக்கும் வணக்கம். யூஜி தமிழ் வகுப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன். இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது இணையதமிழ். அறிவியலின் அதிவேக வளர்ச்சியால் இன்றைய உலகமே நம் கைக்குள் சுருங்கி உள்ளது. இந்த அறிவியலின் அதிநவீன கண்டுபிடிப்பே கனிப்பொறியாகும். நம்மால் தரப்படும் உள்ளீடுகளை பெற்றுக்கொண்டு நாம் விரும்பும் தரவுகளை மிக விரைவாக அளிக்கும் மின்னணு சாதனமே கணினி. இந்த கனிப்பொறி கல்வி முதலிடம் பெறுவதற்கு இணையம் என்ற தகவல் தொடர்பு முறையே காரணமாக இருக்கின்றது. தகவல் அறிதலும் தகவல் பரிமாற்றமுமே இந்த இணையத்தின் முக்கிய பணியாக இருக்கின்றது. அவரவர்களுடைய மொழியில இந்த தகவலை பரிமாற்றம் செய்யறதுனாலதான் இந்த இணையம் ரொம்ப வேகமா ரொம்ப எளிமையாகவும் செயல்படுது. இந்த இணையத்தினுடைய பயன்பாடு தமிழர்களுக்கும் கிடைக்கணும் அப்படின்றதுக்காக உருவாக்கப்பட்டதுதான் இணையதமிழ். முதல்ல இணையம்னா என்னன்னு பார்க்கலாம். இன்டர்நெட் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த ஆங்கில சொல்லிருந்துதான் இணையம் அப்படின்ற தமிழ் சொல் உருவாக்கப்பட்டுச்சு. இந்த இன்டர்நெட் அப்படின்ற இந்த சொல்லை வந்து நம்ம ரெண்டா பிரிச்சோம்னா இன்டர்நெட் அப்படின்னு ரெண்டா பிரியும். இந்த இன்டர் அப்படின்ற அந்த சொல்லுக்கு ஒரே தன்மையுடைய பல பொருட்களினுடைய தொகுதியை குறிக்கும். எடுத்துக்காட்டா பல நாடுகளை குறிப்பிடுறதுக்கு இன்டர்நேஷனல் அப்படின்னு சொல்ற மாதிரி பல மாநிலங்களை குறிப்பிடுவதுக்கு இன்டர் ஸ்டேட் அப்படின்னு சொல்ற மாதிரிதான் இந்த இன்டர் அப்படின்றது பல தொகுதிகளை பல பொருட்களுடைய தொகுதிகளை வந்து குறிப்பிட பயன்படுத்தப்படுது. அதே மாதிரி நெட் அப்படின்னா வலைன்னு பொருள் நெட்வொர்க் அப்படின்னு சொல்லும்பொழுது இது ஒரு கட்டமைப்பு அப்படின்ற அதனுடைய ஒரு சுருக்கமாகத்தான் இந்த நெட் அப்படின்ற சொல் பயன்படுத்தப்படுது. அப்படின்னா ஒரு கட்டமைப்புல பல கணிப்பொறிகளை ஒன்றாக இணைச்சு அதை ஒரு பொது நோக்கத்திற்காக பயன்படுத்துறதும் அந்த பொருட்களுக்கு இடையில ஒரு தகவல் பரிமாற்றம் செய்து கொள்றதுமே இந்த நெட்வொர்க் அப்படின்ற இந்த கட்டமைப்பு இப்ப இந்த இரண்டு சொல்லையும் இணைச்சு பார்த்தோம்னா ஒரு கட்டமைப்புகளுக்கான கட்டமைப்பு அப்படின்ற ஒரு பொருளை கொடுக்கும். அதாவது உலகத்துல பல்வேறு பகுதிகள்ல் இருக்கக்கூடிய கணிப்பொறி சார்ந்த கட்டமைப்பையே நம்ம இணையம்னு சொல்றோம். இதுல தனித்தனி கணினிகளையும் இணைத்து நம்ம பயனடைய முடியும். அதே மாதிரி கனிப்பொருள்களுடைய உலகளாவிய வலையமைப்புதான் இந்த இணையம். இது உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான கனிப்பொருள்கள் இந்த இணையத்தில் இணைக்கப்பட்டு தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. அடுத்து இணையத்தினுடைய தோற்றம் பத்தி பார்க்கலாம். இந்த தகவல் தொடர்புக்காக அட்லாண்டிக் கடல்ல 1858ஆம் ஆண்டு ஒரு கேபிள் வந்து நிறுவப்பட்டுச்சு. இது சில நாட்கள் மட்டுமே அங்க செயல்பட்டுச்சு. இதுதான் தகவல் தொடர்பு வரலாற்றில முதல் சாதனையாக அமைஞ்சது. இதுக்கு அப்புறம் 1957ஆம் ஆண்டு சோவியத் யூனியன் வந்து ஸ்புட்னிக் அப்படின்ற செயற்கை கோலை விண்ணில பறக்க விட்டுச்சு. அப்போ இதை பார்த்த அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர் அப்படின்றவர் வந்து என்ன பண்றாருன்னா அர்ப்பா ஏஆர்பிஏ அப்படின்னு சொல்லக்கூடிய ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணையிட்டாரு. இது சில ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவத்ததுறையில கணிப்பொறியினுடைய பயன்பாட்டை மேம்படுத்தக்கூடிய ஆராய்ச்சியில இந்த அற்பா இறங்குச்சு. 1962ல தொடங்கிய இந்த ஆராய்ச்சியில டாக்டர் ஜேசி. ஆர் லிக்லைடர் அப்படின்னு சொல்லக்கூடியவர் இதற்கு தலைமை ஏற்றார். அந்த சமயத்துல போர் வந்து எதிரிகளுடைய குண்டு வீச்சினால இந்த நெட்வொர்க்கினுடைய ஒரு பகுதி வந்து சிதையை நேரிட்டாலும், மீதி பகுதியை எந்த விதமான சிக்கலும் இல்லாம செயல்படணும் அப்படின்றதே இந்த அற்பாவினுடைய நோக்கமாக இருந்துச்சு. இந்த கோட்பாடுகளுடைய அடிப்படையில 1968ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் இயற்பியல் ஆய்வு கூடம் வந்து முதல் சோதனை நெட்வொர்க்கை நிறுவிச்சு. இதன்படி 1969ல அர்ப்பாநெட் த அட்வான்ஸ்டு ரிசர்ச் ப்ராஜெக்ட்ஸ் ஏஜென்சி நெட்வொர்க் அப்படின்றது அமைக்கப்பட்டுச்சு. இதுக்கப்புறம் அர்பாநெட்டினுடைய சிறப்பால பல்கலைக்கழகங்கள் இதனோட இணைஞ்ு செயல்பட தொடங்குச்சு. 1971-ல இருந்து, மின்னஞ்சல் அனுப்பப்பட்டுச்சு. இந்த இணையம் மூலமாக, மின்னஞ்சல் அனுப்பப்படுது. இதுக்கப்புறம், இந்த அர்ப்பா நெட்வொர்க் மூலமாக, இந்த அறிவியல் அறிஞர்கள், தங்களுக்குள்ளார, இந்த கருத்துக்களை, பரிமாதிக்கிறதுக்கான, ஒரு தொடர்பு ஊடகமாக இதை பயன்படுத்த ஆரம்பிச்சாங்க. இதனால 1984ல அர்ப்பாநெட் அப்படின்றது ரெண்டு நெட்வொர்க்லாக பிரியுது. இதுல ஒன்னு வந்து மில்நெட் அப்படின்னும் அது ராணுவத்திற்காகவும் அர்ப்பாநெட் அப்படின்றது உயர்தர ஆராய்ச்சிக்காகவும் பிரிக்கப்பட்டுச்சு. இதுக்கப்புறம் பல பல்கலை கழகங்களும் இந்த அற்பாநெட்டை பயன்படுத்துறாங்க. இதனால அர்ப்பாநெட்டினுடைய செயல்பாடுகள் பரவலாக உலகம் முழுவதும் பரவுது. தொடக்க காலத்துல மின்னஞ்சல் அனுப்புறதுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த இணையம்ன்றது படிப்படியா வளர்ச்சி அடைந்து செய்திகளை பெறக்கூடிய ஆற்றல் மிகு சாதனமாக உருவாகுது. இது மாதிரி மேசை கணினிகளுடைய கண்டுபிடிப்பு வந்ததுக்கு பின்னாடி இந்த கனிப்பொறியினுடைய வலையமைப்புன்றது வந்து வேகமா வளர தொடங்குது. இந்த மேசை கனிப்பொறிகளை கொண்டு அமைக்கப்பட்ட வலையமைப்புகளை வந்து குறும்பரப்பு வலையமைப்பு அதாவது லேன் எல்ஏ லேன் லோக்கல் ஏரியா நெட்வொர்க் அப்படின்னு சொல்றாங்க நகர்பரப்பு வலையமைப்பு மேன் எம்ஏ மீடியம் ஏரியா நெட்வொர்க் அப்படின்னு சொல்றதும் பெரும்பரப்பு அப்படின்னு சொல்லக்கூடிய அந்த வலையமைப்புக்கு வேன் வைடு ஏரியா நெட்வொர்க் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த மூன்று விதமான செயல்படும் கூடிய எல்லை வரம்புகளுக்கு ஏற்ப இப்ப வெவ்வேறு அமைப்புகளை கொண்ட கனிப்பொறி வலையமைப்புகள் வந்து வடிவமைக்கப்படுது. இந்த இணையத்தினுடைய கண்பிடிப்புனால கனிப்பொறியில பல்வேறு வளர்ச்சி மாற்றங்கள் உண்டாகுது. அதனால இந்த இணையத்தினுடைய ஆற்றலை பயன்படுத்தக்கூடிய வகையில டிம் நெர்னஸ்லி அப்படின்னு சொல்லக்கூடியவர் இந்த உலகம் தழுவி இணையதளம் அப்படின்னு ஒன்ன உருவாக்குறாரு. இதுதான் wடw அப்படின்னு நம்ம சொல்லக்கூடிய வேர்ல்ட் வைடுவெப் அப்படின்ற நெட்வொர்க். இது ஜெனிவாவில இருக்கக்கூடிய சர்சிஆர் என் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த சோதனை கூடத்தில அறிவுரையாளராக இருந்த டிம் நெர்னஸ்லி அப்படின்றவர் வந்து ஹைப்பர்லிங்க் அதாவது மீ இணைப்பு இது மூலமா உலகளாவிய வலை அமைப்பை உருவாக்க முடியும் அதுல செய்திகளை பரிமாறிக்க முடியும் அப்படின்ற விஷயத்தை வந்து கண்டுபிடிக்கிறாரு. பெர்னஸ்லீ அப்படின்றவர் வந்து 1991ஆம் ஆண்டு இதை தொடங்கி வைக்கிறாரு. தொடக்கத்துல மின்னஞ்சல் அனுப்புறதுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த இணையம் இன்னைக்கு தரவுதளம் இணைய வலைதளம் இணைய இதழ் இணைய வணிகம், இணைய விளையாட்டு, இணைய நூலகம், இணையவழி கல்வி, சமூக வலைதளங்கள் என பல பரிமாணங்கள் கண்டு மனித வளர்ச்சியில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக விளங்குகிறது. அடுத்து இந்தியாவில இந்த இணையத்தினுடைய தோற்றத்தை பத்தி பார்க்கலாம். உலக நாடுகள் பலவற்றிலும் இந்த இணைய சேவை பரவலாக இருந்த காலகட்டத்தில இந்தியாவில முதன்முதலா 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த இணையம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்ல ஆறு நகரங்கள்ல் மட்டுமே இது தொடங்கப்பட்டது. விதேஷ் சஞ்சார் நிகம் லிமிடட் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த இணைய இணைப்பு வழங்கும் சேவையாளராக இந்த ஒரே ஒரு நிறுவனம் தான் முதல்ல இருந்துச்சு. அதுக்கப்புறம் 1998ஆம் ஆண்டிலிருந்து தனியாருக்கும் இதற்கான உரிமம் வழங்கப்பட்டுச்சு. 1999ல வெப்துனியா அப்படின்னு சொல்லக்கூடிய இந்திய மொழிகள்ல முதன் முதல்ல இந்தி மொழியில் தான் இந்த இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுச்சு. அதற்கு பிறகு இந்த இணையத்தினுடைய பயன்பாடு மற்றும் இதனுடைய வளர்ச்சிக்காக 2000ல இந்திய பாராளுமன்றத்தில தொலைத்தொடர்புக்கான வரைமுறை சட்டம் இயற்றப்பட்டது. முதல்ல நாலர கோடியில யாகு அப்படின்னு சொல்லக்கூடிய எம்எஸ்எ நிறுவனம் வந்து இணையச் சேவையை விரிவுபடுத்தியது. 2001ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறை இணையவழி பயணச்சீட்டு பதிவினை தொடங்கி வச்சது. இதுக்கப்புறம் படிப்படியாக வங்கி, விமானசேவை, இணையப் பயன்பாடு அப்படின்னு சொல்லிட்டு இது கொஞ்சம் கொஞ்சமா விரிவடைஞ்சது. இன்னைக்கு இந்தியாவில் இணையசேவை பெரும்பாலான இந்திய மொழிகள்ல பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து இணைய தமிழின் தோற்றம் பத்தி பார்க்கலாம். இந்த உலக நாடுகள்ல பரவி இருக்கக்கூடிய இந்த தமிழர்கள் தங்களுடைய மொழியை மறந்து, தங்களுடைய பண்பாட்டை இழந்து, பல இடங்கள்ல, சிதறி கிடக்கிறாங்க. இவங்க எல்லாரையும் ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு விஷயம் மொழி அப்படின்றது மட்டும்தான். புலம்பெயர்ந்து வாழக்கூடிய இந்த தமிழர்கள் தங்களை ஒன்றிணைத்து கொள்ள தமிழை இணையத்தில் தோற்றம் பெற செய்யணும் அப்படின்ற அந்த முயற்சியில ஈடுபடுறாங்க. அந்த முயற்சியினுடைய விளைவாகத்தான் இன்றைக்கு இணைய பயன்பாட்டில தமிழ் தலைசிறந்து விளங்குது. 1975ல பர்சனல் கம்ப்யூட்டர் சொல்லக்கூடிய இந்த தனிமனித கம்ப்யூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுக்கு பிறகு ஒவ்வொருத்தருக்கும் தங்களுடைய மொழியை கணினியில பார்க்கணும் அப்படின்ற ஆர்வம் ஏற்படுது. இதனால இதற்கான ஆராய்ச்சிகள் 1980கள்ல இருந்தே தொடங்குது. அதாவது தமிழ் எழுத்துருக்களை அதனுடைய குறியாக்க முயற்சிகளை வந்து, உள்ளீடு செய்வதற்கான முறைகளை ஈடுபட ஆரம்பிக்கிறாங்க. இது உலகம் முழுவதில் இருக்கக்கூடிய பல்வேறு தமிழ் அறிஞர்கள் 1984-ல இருந்து 95 வரைக்கும், அவரவர்களுக்கான தனித்தனி குறியீட்டு முறையை வந்து அமைச்சு அந்த எழுத்துருக்களை விசை பலகைகள்ல அமைத்து அதை கணினியில வந்து பதிவு செய்யற வேலைகள்ல ஈடுபட்டாங்க. இதனுடைய விளைவாக முதன்முதல்ல தமிழை இணையத்தில கொண்டு வந்தவர் வந்து சிங்கப்பூரைச் சார்ந்த நா கோவிந்தசாமி அப்படின்றவர்தான். இவர் வந்து 1995ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூர் அதிபர் தொடங்கி வச்ச ஜர்னிவர் வேர்ட்ஸ் ஹோம் அண்ட் நேஷன் அன்ாலஜி ஆப் சிங்கப்பூர் பயற்றி 1984ல இருந்து 95 வரை அப்படின்ற இந்த நான்கு தேசிய மொழி கவிதைக்கான வலைதளத்தில் தான் முதன் முதல்ல இந்த தமிழ் இணையதளத்தை தோற்றுவிக்கிறாங்க. கனியன் அப்படின்ற பெயர்ல அமைஞ்சது இது. இவரே தமிழ் இணையத்தின் தந்தை அப்படின்னும் போற்றப்படுறாரு. அடுத்து இணையச் செயல்பாடு. ஒரு இணையச் செயல்பாடை பெறறதுக்கு நமக்கு என்னென்ன தேவை அப்படின்னு பாத்தீங்கன்னா கனிப்பொறி தொலைபேசி இணைப்பு மோடம். இந்த தொலைபேசி இணைப்பு வழியாக நம்மளுடைய கனிப்பொறியை இந்த மோடத்தினுடைய துணையினால தொலைதூரத்தில் இருக்கக்கூடிய இன்னொரு கனிப்பொறியோட தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த தொலைபேசி இணைப்பு அப்படின்றது வந்து மின்காந்த அலைகளாக இருக்கும். இதை வந்து அனலாக் அப்படின்ற இந்த சமஞ்ய தான் இது ஏத்துக்கும். இந்த மாதிரி தொலைபேசி இணைப்பு மூலமா வரக்கூடிய தகவல்களை டிஜிட்டலாக கணிப்பொதிக்கு அனுப்புவதற்கு தான் இந்த மோடம் அப்படின்ற இந்த கருவி ஒரு மொழிபெயர்ப்பியாக செயல்படுது. ஆனா இன்னைக்கு இந்த தொலைபேசி இணைப்பு மோடம் இது எதுவுமே இல்லாமலே இன்னைக்கு இணையவழி சேவையை நம்மளால பெற முடியும். அந்த அளவிற்கு இந்த தகவல் தொழில்நுட்பம் வேகமா வளர்ச்சி அடைஞ்சிருக்கு. இன்னைக்கு பல நிறுவனங்களும் இந்த இணைய இணைப்புக்கு டேட்டா கார்டை கொடுக்கறாங்க. இந்த டேட்டா கார்டை நம்ம கணிப்பொறியில இணைச்சு பயன்படுத்திக்கலாம். கனிப்பொறி அப்படின்னாலே ஆங்கிலத்தில் தான் இயங்கக்கூடியது அப்படின்னு நிறைய பேர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா ஒரு கணிப்பொறி அப்படின்னா அது எண்கள் அடங்கிய குறியீடுகளை கொண்டுதான் இயங்குது. அதாவது பூஒ அப்படின்னு சொல்லக்கூடிய இந்த இருமை எண்கள் பைனரி நம்பர்ஸ் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த எண்கள் மூலமாகத்தான் இந்த கனிப்பொறி செயல்படுது இதுக்கு ஆங்கிலமோ தமிழோ வேறு எந்த மொழிகளோ தெரியாது. நமக்கு தேவையான எல்லா தரவுகளையும் தகவல்களையும் அது எண்களாகதான் சேமிக்கும். இந்த கனிப்பொறி நாம் கொடுக்கின்ற கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுகின்ற சிந்திக்கும் திறன் அற்ற ஒரு பொறி. அப்போ ஒரு மொழியை நம்ம இந்த கனிப்பொறியில பயன்படுத்தனும் அப்படின்னா அந்த மொழியினுடைய ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை வந்து நிர்ணயிக்கணும். இந்த மாதிரி நிர்ணயிக்க கூடிய முறைக்குதான் குறியீட்டு முறை அப்படின்னு சொல்லுவாங்க. அப்போ ஒரு மொழியை கனிப்பொறியில் பயன்படுத்தனும் அப்படின்னா அந்த மொழிக்கு ஒரு குறியீட்டு முறையும் அதற்கு ஏற்ற ஒரு எழுத்துருவும் இருந்தா போதும் அந்த மொழி கனிப்பொறியில் பயன்படுத்த முடியும். இந்த மாதிரி கனிப்பொறியில தமிழை உருவாக்கணும்னு சொல்லிட்டு இந்த உலகம் முழுசும் பரவி இருக்கக்கூடிய இந்த கணினி தமிழ் வல்லுனர்கள் வந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொள்றாங்க இதனால பல இடங்களலையும் கணினி வல்லுனர்களை ஒன்றிணைச்சு கருத்தரங்குகள் மாநாடுகள் நடத்தி தமிழ் எழுத்துறுக்களை கண்டுபிடிக்கிறாங்க அதை கணினியில பதிவு செய்வதற்கான முறைகளையும் கண்டுபிடிக்கிறாங்க இப்போ இந்த எழுத்துருக்களை கண்டுபிடிச்சாலும் இந்த விசைப்பலகைன்னு சொல்லக்கூடிய இந்த கீபோர்டு வந்து ஒரே மாதிரியான கீபோர்டா இல்லாம ஒரு ஒருத்தர் ஒரு ஒரு முமான கீபோர்ட வந்து பயன்படுத்த ஆரம்பிக்கிறாங்க. இதை முறைப்படுத்துவதுக்கு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ட்டாம் தேதி சென்னையில இரண்டாம் தமிழ் இணைய மாநாடு நடக்குது. இந்த மாநாட்டில ஒரே மாதிரியான விசைப்பலகையை தயாரிக்கணும் அப்படின்னு சொல்லிட்டு மென்பொருள் தயாரிப்பாளர்களுடைய ஆலோசனைப்படி தமிழக அரசு வடிவமை வடிவமைத்து தருது. இந்த சமயத்திலதான் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ்ல தமிழை பயன்படுத்த துவங்குச்சு. தமிழ் மென்பொருள் நிறுவனங்களும் ஆராய்ச்சியாளர்களும் பெரும் எண்ணிக்கையில் தமிழ் எழுத்து வடிவங்களை கணிப்பொறியில் அளிக்க தொடங்கினாங்க. அதே மாதிரி கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ட்ரான்ஸ்லிட்ரேஷன் அப்படின்னு சொல்லக்கூடிய தமிழ் பயன்பாட்டை பொதுமக்களுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்து மின்தமிழ் எழுத்துறு. இந்த ஆங்கில விசை பலகை உலகம் முழுக்க ஒரே அளவில் இருக்கறதுனால தமிழ்லயும் அந்த மாதிரி உருவாக்கணும் அப்படின்ற முயற்சியில ஈடுபட்ட இந்த அரசு யுனிகோட் அப்படின்னு சொல்லக்கூடிய ஒருங்கிணைந்த எழுத்து விசைப்பலகையை உருவாக்குறாங்க இதே மாதிரி மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம் அப்படின்னு சொல்லக்கூடிய மதுரை ப்ராஜெக்ட் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த அமைப்பு மூலமா தமிழ்ல மின்னூல்களை வந்து உருவாக்குறாங்க அதே மாதிரி சென்னை லைப்ரரி அப்படின்னு சொல்லக்கூடிய இணையதல ல பக்கத்திலயும் பல தமிழ் நூல்கள் மின்னுருவாக்கம் செய்யப்படுது. அழகி மயிலை தமிழ் முரசு அஞ்சல் ஆறாம் திணை திருவள்ளுவர் எழில்நிலை தமிழன் கனியன் அப்படின்னு பல எழுத்துக்கள் தமிழுக்காக உருவாக்கப்படுது. இது எல்லாத்தையுமே ஒருங்கிணைச்சு ஒரே எழுத்துற செய்யறதுதான் இன்னைக்கு இருக்கக்கூடிய தமிழ் இணையத்தினுடைய மிகப்பெரிய வேலையாக இருக்கு. அடுத்து இணைய இதழ்கள். இணையத்தில மட்டுமே வரக்கூடிய இந்த இதழ்களை இணைய இதழ்கள் அப்படின்னு சொல்றோம். பத்திரிக்கை, புத்தகம் அப்படின்னு சொல்லிட்டு, நேரடியா இல்லாம இந்த மாதிரி இணைய இதழ்கள் வந்ததுக்கு பிறகு, பல எழுத்தாளர்கள் உருவாகறாங்க. அந்த மாதிரி தமிழ்ல வந்தக்கூடிய வந்த சில இணைய இதழ்களை பார்க்கலாம். தினை.com பதிவுகள்.comஅishhaon.comவarp.comரaral.comவரலாறு.com என பல இணைய எதர்கள் தமிழ்ல இருக்கு. இது வந்து அதிகமா பண செலவில்லாம நிறைய வாசகர்கள் கிட்ட எளிமையா கொண்டு போய் சேர்க்க முடியும். ஒரு நாள் வழி ஆசிரியர் வழி பொருண்மை வழி என பல வகையில நமக்கு தேவையான விஷயங்களை தேடி கண்டுபிடிக்க முடியும். தமிழ்ல வரக்கூடிய நாளிதர்கள் எல்லாமே தம்முடைய தளங்களை இணையதளத்தில் பரவவிட்டுருக்கு. அதனால எளிமையா எல்லா உலகம் புறா பரவி இருக்கக்கூடிய எல்லா மக்களுக்கும் கிடைக்கக்கூடியதாக இந்த இதழ்கள் இருக்கு. அடுத்து உலக நிறுவனங்கள் யாaho.com எம்எஸ்அண்வெப்துனியா கூகுள் இது எல்லாமே தமிழ் செய்தி தளங்களை கொண்டிருக்குது அப்படின்றது தமிழ் மொழிக்கு தரப்படக்கூடிய முக்கியத்துவத்தை காட்டுது. இரம்.com அதிகாலை.com இந்த மாதிரியான வெப்தளங்கள் கூட தமிழ்ல செய்திகளை கொடுக்குது. இன்னைக்கு இருக்கக்கூடிய செய்தி சேனல்களை கூட நம்ம இணையத்தின் வழியா நேரடியா காண முடியுது. தமிழ் இணைய வளர்ச்சியில எளிமையாகவும் அழகாகவும் தனக்கான பக்கத்தை தாங்களே உருவாக்கிக்கிற மாதிரி கொண்டுவரப்பட்டதுதான் பிளாக் ஸ்பாட் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த வலைப்பூக்கள். உலக நாடுகள் மாதிரி இல்லாம Facebook, Twitter எல்லாம் வந்ததுக்கு பின்னாடி கூட இந்த வலைப்பூக்களுக்கான மதிப்பு தமிழ் சூழல்ல அப்படியே இருக்குது அப்படின்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து இணைய அரங்கங்கள். நாம மத்தவங்க கிட்ட சொல்ல நினைக்கக்கூடிய கருத்துக்கள் அல்லது கலந்துரையாட நினைக்கிறத பகிர்ந்துகறதுக்கான ஒரு இணைய அரங்குகள் இந்த இணையதளத்தில காணப்படுது. குறிப்பா கருத்து தமிழ் மையம் இந்த மாதிரியான இணை அரங்குகள் என்ன பரிமாற்றங்களுக்கு மிகவும் துணையாக இருக்கு. இன்னைக்கு என்னென்ன இணையம் சார்ந்த தமிழ் பணிகள் செய்யப்பட்டு வருது அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த விசைப்பலகைன்னு சொல்லக்கூடிய கீபோர்டு வேவேறா இருப்பதுதான் தமிழினுடைய இணைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கு. அந்த தடையை உடைப்பதற்கான முயற்சிகள் தான் இப்போ நடைபெற்று வருது. அதுமட்டுமில்லாம ஆங்கிலத்துல தானாகவே தட்டச்சு செஞ்சத திருத்தக்கூடிய ஆட்டோ கரெக்ஷன் இருக்கிற மாதிரி தமிழ்லயும் தட்டச்சு செய்யும் பொழுது அதை திருத்துவதுக்கான மென்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருது. இனிவரும் காலத்தில இந்த இணைய தமிழ் உலகம் என்பது மேலும் சிறப்பாக வெற்றி நடைபோடும் என்பது உங்களை மாதிரியான இளைஞர்கள் கையில் தான் இருக்கு. இதுவரைக்கும் இணையத்துல தமிழினுடைய நிலை என்ன அப்படின்றத பத்தி நம்ம பார்த்தோம்.

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

இணையத் தமிழ் பயன்பாடு#இணையத் தமிழ்#Dr.S. Prabavathi - You...