வானவியல் | பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் | Nilaviyal | தமிழ் நதி | UNofficial Tamil

UNofficial Tamil990 words

Full Transcript

வணக்கம். இன்றைய பதிவுல பழந்தமிழ் இலக்கியங்கள்ல வானவியல் சிந்தனைகள். சங்ககால தமிழர்கள் இலக்கிய படைப்புகள் மட்டும் இல்லாம விண்ணின் கோள்கள், காற்று மண்டலம், அவற்றின் இயக்கங்கள், கால அளவுகளை அளவீட்டறிதல். இந்த மாதிரியான வானவியல் அறிவும் பெற்றிருந்தாங்க. பழந்தமிழ் மக்களுக்கு வானவியல் அறிவு இருந்தத உலகிற்கு தெரியப்படுத்தணும் அப்படிங்கறதுக்காகவும் தங்களுக்கு பின் வரக்கூடிய சந்ததியினர் வானவியல் குறித்து தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுக்காகவும் இதை இலக்கியங்கள்ல பதிவு செஞ்சு வச்சாங்க இப்படி பழந்தமிழ் இலக்கியங்கள்ல பதிவு செய்யப்பட்ட வானவியல் கருத்துக்களையும் அதை மக்கள் எப்படி தங்களுடைய வாழ்க்கைக்கு பயன்படுத்துனாங்க அப்படிங்கறதையும் இந்த பதிவுல பார்க்கலாம். பதிவுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்மளுடைய சேனல் யுன் அபிஷயல் கற்பம் தமிழை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நான் தமிழ்நதி. தமிழர்களுக்கு வானத்தை பற்றி ஆராயறதுக்கு ஆர்வம் அதிகமாவே இருந்துச்சு. நிலம் பற்றிய அறிவியலோட விண்ணுக்கும் மண்ணுக்குமான தொடர்பினை தங்களுடைய அனுபவத்தால ஆராய ஆரம்பிச்சாங்க. மனிதர் உயிர் வாழ்றதுக்கு சூரியன் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு மலையும் முக்கியம் அப்படிங்கிறத தெரிஞ்சுகிட்ட பழந்தமிழர்கள் வானத்தை பற்றி அறிவியல் பூர்வமா சிந்திக்க ஆரம்பிச்சாங்க. சங்க காலத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் வானத்தையே தங்களுடைய வீட்டின் மேற்குறையாக கொண்டவர்கள். அதாவது வேயா மாடம் அப்படின்னு சொல்றது. வீட்டினுடைய நடுப்பகுதியில முற்றம் மாதிரி இருக்கும். அதுல மேற்குரை இருக்காது. அங்க இருந்து வானத்தை பார்க்கறதுக்கு ரொம்ப அழகா தெரியறது உண்டு. அந்த சமயத்துல நாள்தோறும் வானத்தில நடக்கக்கூடிய நிகழ்வுகளையும் மாற்றங்களையும் கூர்ந்து கவனித்த தமிழர்கள் அவங்களுடைய கருத்தை கவரக்கூடிய நிகழ்வுகளை மட்டும் பதிவு செய்ய ஆரம்பிச்சாங்க. அப்படி அவங்க இலக்கண இலக்கியங்கள்ல பதிவு செய்த இந்த வானியல் கருத்துக்கள் இன்னைக்கு இருக்கக்கூடிய அறிவியல் வளர்ச்சிக்கு வியப்புக்கு உரியதா இருக்குது. இலக்கியங்கள்ல பதிவு செய்யப்பட்ட வானியல் கருத்துக்களை பார்க்கலாம். முதல்ல திருவாசகத்தில மாணிக்கவாசகர் அண்டப்ப பகுதியின் உண்டை பிறக்கம் அளப்பெரும் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கொன்று நின்று எளி பகரின் 101 கோடியின் மேற்பட விரிந்தன அப்படின்னு பாடுறாரு. அதாவது இந்த உலகமானது உருண்டை வடிவமா இருக்குது அப்படின்னும் இந்த உலகத்துல 100 கோடிக்கும் மேற்பட்ட வான் பொருட்கள் இருக்குது. இந்த வான் வெளியானது விரிந்து கொண்டே போகுது அப்படின்னு சொல்லி பாடி இருக்காரு. இது எதுக்காக பாடுறாரு அப்படின்னா கடவுள் வந்து இந்த உலகத்தை உருவாக்கினவர். இந்த உலகத்துல நிறைய துகள் இருந்துட்டு இருக்கு. அது எல்லாமே இறைவனுடைய பார்வைக்கு வெறும் தூசு மாதிரி. அதை படைத்த இறைவன் எவ்வளவு பெரியவன் அப்படின்னு சொல்றதுக்காக பாடப்பட்ட பாடல்தான் இது. அடுத்ததா இயற்கையின் அடிப்படையாக இருப்பவை ஐம்பூதங்கள் அப்படின்னட்டு அறிவியல் கண்டுபிடிப்புல மேய்ப்பிக்கப்பட்ட ஒன்று. இதை வந்து பழந்தமிழ் மக்கள் தங்களுடைய இலக்கியங்கள்ல ஏற்கனவே பதிவு செஞ்சிருக்காங்க. ஆற்று வேறு அது இயங்கக்கூடிய வெளிவேறு அந்த வெளிய பெயர்தான் விசும்பு அப்படிங்கிற தெளிவும் தமிழர்கள் கிட்ட இருந்துச்சு. பல தமிழ் இலக்கியங்கள்ல ஐம்பூதங்கள் பற்றி கூறும்போது முதலில் விசும்பு மட்டுமே இருந்தது. அதன் பின்பு சூரிய குடும்பங்கள் தொடங்க ஆரம்பிச்சு அவை சுழலும் போதுதான் தீ உண்டானது அப்படின்னும் தீயிலிருந்து ஒளி பிறந்து சூரிய குடும்பங்கள் உதிர்ந்ததைக்கு அப்புறமா அந்த தீ குழும்பிலிருந்து கோள்கள் உருவானதாகவும் சொல்லப்படுது. அவை சுழலும் போதுதான் காற்று ஏற்பட்டு அந்த காற்றோடு கலந்த கோள்கள்ல இருந்து தண்ணீர் கிடைத்தது அப்படின்னும் அக்கோள்கள் குளிர்ந்ததுக்கு அப்புறமாதான் மண் உண்டானது அப்படின்னும் சொல்லப்படுது. இந்த கருத்து இன்றைய அறிவியலாளர்களாலயும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இது பற்றிய பாடலை தொல்காப்பியம் நிலம், தீ, நீர், வலி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகமாதலின் அப்படின்னு பாடி இருக்காரு. புறநானூரிலையும் ஐம்பூதங்கள் குறித்த பாடல் இடம்பெற்றுள்ளது. மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வலியும் வலிதலையிய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை. அடுத்ததா தமிழர்களுடைய கால கணக்கிட்டு முறை. தமிழர்கள் சூரியன், சந்திரன் இந்த கிரகங்களுடைய இயக்கங்களை கவனித்துதான் நாள்காட்டியை உருவாக்கினர் அப்படிங்கறதற்கு திருக்கணிதம் போன்ற நூல்கள் சான்றாக அமைகின்றன. அதுமட்டுமி இல்லாம மன்னர்கள் நல்ல காரியங்களுக்கு செல்லும்போதோ இல்லனா போருக்கு செல்லும்போதோ நேரத்தை பார்த்து செல்றது வழக்கம். நேரத்தை கணக்கிட்டு சொல்றதுக்காகவே நாளிகை கணக்கர் இருந்துள்ளத நம்ம பல இலக்கியங்கள்ல் பார்த்திருப்போம். அடுத்ததா திசை அறிதல். தமிழர்கள் மிகுதியா கடற்பயணம் செய்தவர்கள். பயண காலங்கள்ல மாலுமிகள் விண்மீன்களையும் சந்திரனையும் பார்த்து திசை அறிந்ததற்கான சான்றுகள் முகஞ்சதார முத்திரைகள் கிடைத்த குறிப்புகள் மூலமா நம்ம அறிஞ்சுக்கலாம். ஞாயிறு. ஞாயிறு அப்படிங்கறது சூரியன். இந்த உலகத்தில் வாழக்கூடிய எல்லா உயிர்களும் சூரியனை சார்ந்து வாழ்ந்து வருகின்றன. காலை நேரத்தில அடிவானில் தோன்றி நன்பகல்ல உச்சிக்கு வந்து பின்பு மாலையில் அடிவானத்தில் சென்று மறைகிறது சூரியன். இந்த சூரியனுடைய இயக்கத்தை நாளியக்கம் அப்படின்னும் சொல்றதுண்டு. ஆதி மனிதன் சூரியனுடைய இயக்கத்தை பார்த்து பயந்து அதை வணங்கவும் ஆரம்பிச்சான். இன்னைக்கு சிவ ஆலயங்கள்ல் இருக்கக்கூடிய சூரியனாருக்கு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடு நடந்துட்டுதான் வருது. அடுத்ததா கோள்கள். கோல் அப்படிங்கறதுக்கு கொள்ளுதல் அப்படிங்கிற ஒரு பொருள் உண்டு. கோள்கள் அனைத்தும் சூரியனிடமிருந்து ஒளியை பெற்று திகழ்றதுனாலதான் இதற்கு கோள்கள் அப்படின்னு சொல்லி பெயர் வச்சிருக்காங்க தமிழர்கள். கோள்களுடைய பெயரை தன்னுடைய நூல்ல திருஞான சம்பந்தர் கோளறு பதிகத்தில் சொல்லும்போது இளமை பெயர்களாகவே வரையறுத்து சொல்லி இருப்பாரு. அதாவது ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும் உடனே ஆசு அரும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவருக்கு மிகவே அப்படின்னு சொல்லி பாடி இருப்பாரு. அதாவது சிவனுடைய நாமத்தை மட்டுமே சொல்லி சிவனுக்கு அடியார்களாக இருக்கக்கூடியவங்களுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது இந்த கிரகங்களால எந்த ஒரு பாதிப்புமே ஏற்படாது அப்படிங்கறதுதான் இந்த பாடலுடைய விளக்கம். அடுத்ததா சந்திரன். சந்திரனுடைய இயக்கத்தை வச்சுதான் மாதங்களை கணக்கிட்டனர் தமிழர்கள். அதனாலதான் மாதத்துக்கு மதி, திங்கள் அப்படிங்கிற பெயர்கள்ல்லாம் வழங்கப்பட்டு வந்தது. திங்கள தீம் கூட்டல் கல் அப்படின்னு சொல்லிட்டு தமிழர்கள் பிரிச்சு சொல்றது உண்டு. தீம் அப்படின்னா இனிமை. கல் அப்படிங்கறது பாலை உணர்த்தக்கூடிய ஒரு சொல். வெண்மையான ஒளியை தருகின்ற மனதிற்கு இன்பம் ஊட்டுகின்ற ஒரு பொருள் அப்படிங்கறதுனாலதான் சந்திரனுக்கு திங்கள் அப்படின்னு பெயரை வச்சிருக்காங்க பழந்தமிழர்கள். இந்த திங்களுடைய இயக்கத்தை அதாவது சந்திரனுடைய இயக்கத்தை வச்சுதான் 12 மாதங்களையே ரெண்டு ரெண்டு மாதங்களா பிரிச்சு ஆறு பருவங்களாவும் கொடுத்திருக்கறாங்க. செவ்வாய் கிரகத்துடைய மேற்பரப்பு சிவந்து காணப்படுகிறது அப்படிங்கிறது இன்னைக்கு இருக்கக்கூடிய அறிவியல் விஞ்ஞானிகளால தொழில்நுட்ப வசதிகளையும் சேர்க்கை கொள் மூலமாகவும் ஆய்ந்து மெய்ப்பிக்கப்பட்ட கருத்து. ஆனா பல ஆண்டுகளுக்கு முன்னாடியே தமிழர்கள் சிவந்தது அப்படிங்கிற பொருளின் படியா செவ்வாய் அப்படிங்கிற சொல்ல இலக்கியங்கள்ல பல இடங்கள்ல் சுட்டி காமிச்சிருக்காங்க. அடுத்ததா வியாலன். கோள்கள்ல வியாலனை குரு அப்படின்னு இலக்கியங்கள்ல் பதிவு செய்யப்பட்டிருக்கு. குருவும் கெழுவும் நிறனாகுமே அப்படின்னு சொல்லிட்டு தொல்காப்பியத்துல குரு அப்படிங்கறது வியாலனை குறிக்க கூடியதாகவும் இந்த கோள் நிறமுடையது அப்படின்னும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமி இல்லாம வியல் எண் கிளவி அகல பொருட்டே அப்படின்னும் சொல்றாரு. அதாவது சூரியனை சுற்றக்கூடிய கோள்களலையே வியாலன்னா மிகப்பெரிய கோல் அப்படிங்கிறது இதற்கான விளக்கம். அடுத்து ஓரை வட்டம். ஓரை அப்படிங்கிறது பின்மின் கூட்டத்தையோ இல்லனா மகளிர் கூட்டத்தையோ குறிக்கக்கூடிய ஒரு சொல். ஒவ்வொரு பகுதியில இருக்கக்கூடிய நட்சத்திர தொகுதிக்கு ஒரு குறிப்பிட்ட வடிவத்தை கொடுத்து அதை பேரிட்டும் அழைச்சு வந்திருக்காங்க. இப்படி அமைகின்ற 12 பகுதிகளும் ஓரைகள் அப்படின்னு சொல்லி அழைக்கப்பட்டுச்சு. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஓரையை கடப்பதாக சொல்லி இதற்கு ஓரை வட்டம் அப்படின்னும் பெயரிட்டு அழைச்சிருக்காங்க. இந்த ஓரைகளுடைய பெயர்களைதான் இன்னைக்கு ராசியின் பெயர்களா வரையறுத்து சொல்றாங்க. இடபம், மிதுனம், அளவன், சிம்மம், துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். இததான் 12 ஓரைகள் அப்படின்னு சொல்றதுண்டு. அடுத்ததா நாள் மீன்கள். கோல் மீன்கள் அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது நட்சத்திரங்கள். நட்சத்திரங்களும் சூரியன் போல கோள்கள் ்தான். ஆனா அதனுடைய ஒளி அதிகமாகவோ இல்லன்னா குறைந்தோ காணப்படுறது உண்டு. வானத்துல கோடிக்கணக்குல நட்சத்திரங்கள் இருந்தாலும் நம்மளுடைய கண்ணுக்கு தெரியறது ஒரு சில நட்சத்திரங்கள் மட்டும்தான். நட்சத்திரங்களுடைய இருப்பிடத்தை வச்சு திசை அறிஞ்சு கடல் வழி பயணம் செஞ்சிருக்காங்க தமிழர்கள். இந்த நட்சத்திரங்கள் இடம் பெயரக்கூடியவை அப்படின்னும் இடம் பெயர்றத தருப்பெயற்சி, ஆறப்பெயற்சி அப்படின்னு சொல்லிட்டு ரெண்டு வகையாவும் கூறறாங்க. நட்சத்திரங்கள் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு நிறம் இருக்கு அப்படின்னும் பொதுவா நட்சத்திரங்கள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், நீளம் இந்த நான்கு நிறத்தில தான் இருக்கும் அப்படின்னும் சொல்லப்படுது. பல விண்மீன்க்கள்ல இருக்கக்கூடிய 27 நான் மீன்களை இன்னைக்கு நம்ம ராசி நட்சத்திரங்கள் அப்படின்னு சொல்லிட்டு அழைச்சிட்டு வரோம். அதாவது அஸ்வினி, பரணி, கார்த்திகை இந்த மாதிரி நட்சத்திரங்களை சொல்றது. இது 27 வகை அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க. இது மட்டுமி இல்லாம இடம்பெயரக்கூடிய நட்சத்திரங்களை வால் நட்சத்திரங்கள் அப்படின்னு பெயரிட்டு இந்த மாதிரியான நட்சத்திரங்களை பார்க்கிறது தூமம் அப்படின்னும் சொல்றாங்க. அதாவது, இப்படி நட்சத்திரங்களை பார்த்தா கெடுதல் விளையும் அப்படிங்கறது, பல தமிழர்களுடைய கருத்தா இருக்குது. பலந்தமிழ் இலக்கியங்கள்ல வானியல் சிந்தனைகள் அப்படிங்கிற இந்த பதிவுல வானத்தில இருக்கக்கூடிய கோள்கள் பற்றி, அதனுடைய இயக்கங்கள் பற்றியும், பழந்தமிழ் இலக்கியங்கள்ல எப்படி எல்லாம் பதிவு செஞ்சிருக்காங்க, மக்களுடைய வாழ்க்கைக்கு அதை எப்படி பயன்படுத்தி இருக்காங்க. இதெல்லாம் பற்றி இந்த பதிவுல பார்த்தோம். இந்த பதிவு இதோட முடிவு பெறுது. மீண்டும் ஒரு தமிழ் உரையாடலுடன் சந்திக்கிறேன். நான் தமிழ் நதி

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

வானவியல் | பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் |...