உளவியல்#பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல்#pazhnthamizh ilakkiyangalil ulaviyal#Dr.S.Prabavathi

UG-Tamil vaguppu1,413 words

Full Transcript

அனைவருக்கும் வணக்கம். யூஜி தமிழ் வகுப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன். இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது பழந்தமிழ் இலக்கியங்களில் உளவியல். உளவியல் என்பது மனித நடத்தையை முறைப்படி ஆராயும் ஓர் அறிவியல் ஆகும். முதன்முதல்ல இந்த உளவியலை ஆன்மாவை பற்றிய அறிவியல் அப்படித்தான் எல்லாரும் சொல்லிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம்தான் வில்லியம் ஜேம்ஸ் அப்படின்றவர் உள்ளத்தினுடைய வாழ்க்கையை பற்றிய அறிவியல்தான் இந்த உளவியல் அப்படின்னு சொன்னாரு. சரி இந்த உளவியல் அப்படின்ற வார்த்தைக்கு ஆங்கிலத்துல நம்ம சொல்லக்கூடிய சைக்காலஜி அப்படின்ற இந்த சொல்லுக்கான மூலச்சொல் எங்க இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா கிரேக்கத்துல தான் இருக்கு. சைக்கிலோஜஸ் அப்படின்ற ரெண்டு கிரேக்க சொற்கள் இணைந்துதான் இந்த சைக்காலஜி அப்படின்ற சொல் உருவாகி இருக்கு. இதுல வந்திருக்கிற சைக்கி அப்படின்னா என்ன அர்த்தம்னா ஆன்மா அப்படின்னு அர்த்தம். லோஜஸ் அப்படின்னா அறிவியல் அர்த்தம். அதனாலதான் முதல்ல என்ன பண்ணிருக்காங்க சைக்காலஜி அப்படின்றத ஆன்மாவை பற்றிய அறிவியல் அப்படின்னு நினைச்சிருந்தாங்க அதை வச்சுக்கிட்டுதான் உளவியல் அப்படின்றது மனித உள்ளத்தினுடைய தன்மையையும் அதனுடைய செயல்பாடுகளையும் அதுல வரக்கூடிய நிகழ்ச்சிகளை பற்றிய ஒரு அறிவியல் அப்படின்னு ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி வந்து விளக்கம் கொடுக்குது. ஒவ்வொரு மனுஷனும் தன்னை சார்ந்த நிலையில முரண்பாடுகள் இல்லாத பண்பையும், சமூக அளவில நன்னிலையிலான இணக்கத்தையும் பெற்றிருப்பதுதான் உளநலத்தினுடைய ரெண்டு பெரிய தன்மைகள். அதாவது அவன் சமூகத்திலயும் தனி மனிதனாகவும் முரண்பாடுகள் இல்லாமலும் இணக்கமாக இருக்கிறதும்தான் நல்ல மனநிலையோட ஒரு மனிதன் வாழறான் அப்படின்றதுக்கு அடையாளம். இதுல ஏதாவது ஒன்னு குறைவு ஏற்படும்னா அவனுக்குள்ளார ஏற்படக்கூடிய மனமுறிவு, மன போராட்டம், மன இருக்கும். இது எல்லாமே அவனுடைய நடத்தையை ரொம்பவும் பாதிக்கும். இதனால அவனுடைய தனி மனித வாழ்க்கையும் சமூகம் சார்ந்த வாழ்க்கையும் சிக்கலுக்கு உள்ளாகும். இதனால அவனுடைய செயல்பாடுகள்ல பிறர்வுகள் தோன்றும். இந்த மாதிரியான பிறசிதான் மனப்பிறச்சி அப்படின்னு சொல்லி சொல்றாங்க. இதுதான் உளவியல் பிரச்சினையாக வெளிப்படுது அப்படின்றது உளவியல் ஆய்வாளர்களுடைய கருத்து. உளவியல் ஆய்வாளரான சிக்மன்ட்ஃிரைடு அவருடைய சிந்தனையினுடைய படி நம்மளுடைய மனமானது மூன்று அடுக்குகளை கொண்டதாக குறிப்பிடுறாரு. ஒன்னு நனவு மனம் இன்னொன்னு நனவிலி மனம் இன்னொன்னு ஆழ்மனம். ஒரு நிகழ்ச்சியையோ ஒரு செயலையோ பார்த்த உடனே அதற்கு எதிரா நம்மிடம் தோன்றக்கூடிய ஒரு உணர்ச்சிதான் இந்த நனவு மனத்தினுடைய செயல்பாடா இருக்கும். நனவெளி மனத்தில காணப்படக்கூடிய இந்த சுய வெளிப்பாடுகளையும் உளத்தினுடைய இந்த வடுக்களையும் கலைவதற்காக இந்த மனம் வந்து ஆற்றுப்படுத்தலை தானாகவே மேற்கொள்ள சில வழிமுறைகளை கையாளுது அப்படின்னு சொல்றாங்க அதாவது ஒரு விஷயத்தை பத்தி கற்பனையா எடுத்துக்கிறது கோபம் பேச கோபமா பேசுறது புறம் கூறறது பொய் கூறறது இந்த மாதிரியான மொழி வினை வடிவங்களாகதான் நம் மனத்தினுடைய எண்ணங்கள் எல்லாமே வெளிப்படுது. அதே மாதிரி ஆழ்மன எண்ணங்களும் அதனுடைய நிறைவேறாத ஆசைகள் தான் பெரும்பாலும் கனவுகளாக வெளிப்படுது அப்படின்னு இந்த உளவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுறாங்க. இந்த மாதிரியான போக்குகள் எல்லாமே உருவாகறதுக்கு மனுஷன் உள்ளத்தில் தோன்றக்கூடிய உணர்வுகள்தான் காரணமாக அமையுது. இதையெல்லாம் நல்லா அறிந்திருந்த பழங்கால தமிழர்கள் இந்த உணர்வுகளை எட்டா வகைப்படுத்தி இருக்காங்க. இத தொல்காப்பியர் நகையே, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்ப தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நூறுப்பா வந்து நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டாக இந்த உணர்வுகளை அதாவது உணர்வுகளினுடைய வெளிப்பாடை வகைப்படுத்துது. இந்த நிலையில மனித உணர்வுக்கும் அவனுடைய செயல்பாட்டிற்கும் இடையில இருக்கக்கூடிய காரண காரிய தொடர்புகளை உளவியல் அடிப்படையில வகைப்படுத்தி காண்பிக்கிறாரு. அதாவது நகை அப்படின்ற ஒரு மெய்ப்பாடு தோன்றுதுனா அதற்கான நிலைக்கலன்களாக நான்கு உணர்வுகளை அவரு எடுத்து காமிக்கிறாரு. எல்லல், இளமை, பேதமை, மடன் என்று உள்ளப்பட்ட நகை நான்கு என்பது இந்த நூற்பா. இப்ப நகை அப்படின்ற அதாவது சிரிப்பு அப்படின்றது எப்பெல்லாம் வரும் அப்படின்றத வகைப்படுத்துறாரு. இதே மாதிரி ஒவ்வொரு மெய்ப்பாட்டுக்குமான நிலைக்கலன்களாக நான்கு நான்கை பிரித்து கூறுவார் தொல்காப்பியர். இதனுடைய அடிப்படையில நம்ம பழந்தமிழ் இலக்கியமான சங்க இலக்கியங்கள்ல் என்னென்ன மாதிரியான உணர்ச்சி வெளிப்பாடுகள் இருக்கு அப்படின்றத இனி பார்ப்போம். சங்க இலக்கியங்கள்ல் இருக்கக்கூடிய உளவியல் செய்திகளை அதில இருக்கக்கூடிய கதைமாந்தர்களுடைய கூற்று வழிதான் நம்மளால அறிஞ்சுக்க முடியும். அந்த வகையில தொல்காப்பியர் தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், பாங்கன் இந்த மாதிரியான வரக்கூடிய கதாபாத்திரங்கள் எந்தெந்த இடத்துல எந்த மாதிரியான கூற்றுகளை நிகழ்த்துவாங்க அப்படின்றத பத்தி ஒரு பட்டியல் கொடுத்திருக்காரு. அதனுடைய அடிப்படையில நம்ம ஒவ்வொருத்தருடைய உளவியலையும், அவங்களுடைய மனநிலையையும் நம்மளால புரிஞ்சுக்க முடியும். மாணவர்கள் சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய உங்களுக்கு தெரிந்த எந்த பாடலினுடைய பொருளை வேண்டுமானாலும் இந்த இடத்துல எழுதி அதற்குள்ளார இருக்கக்கூடிய அந்த கூற்றை நிகழ்த்திய கதைமாந்தருவினுடைய மன உணர்வு எப்படி போகுது அப்படின்றத கூட நீங்க தேர்வுல எழுதலாம். ஆனா இந்த இடத்துல இந்த பாடத்துல நம்ம என்ன விஷயத்தை பார்க்க போறோம் அப்படின்னா இந்த மனப்பிறவுக்கு காரணமாக இருக்கக்கூடிய மூன்று விஷயங்களை நான் முன்னாடியே சொல்லி இருந்தேன். ஒன்னு மனமுறிவு இன்னொன்று மன போராட்டம் இன்னொன்று மன இருக்கம். இந்த மூன்றையும் எந்த வகையில இந்த சங்க இலக்கியங்கள்ல் நம்ம பார்க்க முடியுது அப்படின்றதுக்கு ஒரு ஒரு உதாரணத்தோட இந்த பாடத்தை நம்ம பார்க்கலாம். குறுந்தொகையில 25வது பாடல். யாரும் இல்லை தானே கல்வென் தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ அப்படின்னு வரக்கூடிய இந்த பாட்டுல தலைவன் வந்து ஒரு சமயத்துல தலைவியோட ஒன்றாக கூடி இருக்கிறான். அந்த சமயத்துல அந்த இடத்துல யாருமே இல்லை ஒரு குறுகுன்னு சொல்லக்கூடிய ஒரு விதமான கொக்கு மட்டும் அந்த இடத்துல ஆரல் மீனை சாப்பிடுறதுக்காக காத்துக்கிட்டு இருக்குது. அந்த கொக்கும் கூட நாங்க என்ன பண்றோம் நாங்க எப்படி இருக்கோம் அப்படின்றத பார்க்கல. இந்த மாதிரி சமயத்துல தலைவன் அப்போ என்னோட கூடி இருக்கும் பொழுது சொன்ன உறுதி மொழிகள் எல்லாமே பொய்யா போச்சுன்னா நான் என்ன செய்வேன் அப்படின்னு தலைவி மனசு உடைஞ்சு பேசுறதாக இந்த பாடல் அமைஞ்சிருக்கு. அடுத்து மன இருக்கம். நற்றினை 105வது பாடல்ல தலைவனுடைய மன இருக்கம் எப்படி இருக்கு அப்படின்றத இந்த பாட்டு காட்சிப்படுத்துது. அதாவது தலைவியோட எப்பவுமே சேர்ந்தே இருக்கணும் அப்படின்னு சொல்லிட்டு ஆசைப்படக்கூடியவன் தலைவன். அதே சமயத்துல பொருளீட்டவும் போகணும். இந்த ரெண்டுத்தையுமே விரும்பக்கூடியவனாக இருந்தாலும் ஒன்னோட ஒன்னு விட்டு கொடுக்க முடியாம அவன் மனசு ரொம்ப தடுமாறும். இந்த இந்த உணர்வை வந்து வெளிப்படுத்தக்கூடிய ஒரு பாடல் வந்து அஞ்சில் ஓதி அரும்படர் உறவே அப்படின்ற அந்த அடியில என்ன சொல்றாங்கன்னா இந்த மனசு வேலைக்காக பொருளீட்டுவதற்காக ரொம்ப தூரமா அவன் பயணம் மேற்கொண்டிருக்கான். ஆனா அவனுடைய மனசு என்ன பண்ணுதுன்னா தலைவியை நோக்கியே போகுது. இத இத அவன் எப்படி சொல்றான் அப்படின்னா மனமே நீ ரொம்ப தூரம் வந்துட்ட ஆனா இவ்வளவு தூரம் வந்ததுக்கு பின்னாடி மறுபடியும் போய் தலைவியை பார்க்கணும் அப்படின்னு நீ நினைக்கிறியே உன்னுடைய இந்த முயற்சி வந்து ரொம்ப நல்ல முயற்சிதான் என்ன வேலை செய்யவிடாம தடுக்குது அப்படின்னு சொல்லிட்டு அவ வெறுப்போட தன்னுடைய நெஞ்சுக்கு கூறுவதாக இந்த பாடல் அமையுது. இதே மாதிரி நற்றினை 75வது பாடல்ல தலைவி மேல விருப்பமடைந்து என்னுடைய நெஞ்சு அவள பார்க்க போனாலும் அவளுடைய பார்வை என்னுடைய நெஞ்சு பிழைக்குமாறு அமையுமா இல்லைன்னா என்னுடைய உள்ளம் உடைய மாதிரி இருக்குமா அப்படின்ற இந்த துயரை நினைத்து அவனுடைய மனம் வந்து இருக்கம் கொள்வதாக இந்த பாடல் அமைகிறது. அடுத்து மனப்போராட்டம். நம்ம விரும்புறதை அடையணும்னு நினைக்கும் பொழுது நம்ம மனசுக்குள்ளார எழக்கூடிய போராட்டம் அதாவது இது சரியா இது தவறா அப்படின்னு நம்ம பரிசீலிக்கும் பொழுது நம்ம மனசுக்குள்ளார இந்த சமுதாயம் அதை என்ன நினைக்கும் அப்படின்னு யோசிச்சு உள்ள எழக்கூடிய அந்த போராட்டம்தான் மன போராட்டம். இதை வந்து உளவியலாளர்கள் மூன்றா வகைப்படுத்துறாங்க. ஒன்னு அணுகுதல் அணுகுதல் போராட்டம் ரண்டு அணுகுதல் விலகுதல் போராட்டம் மூணு விலகுதல் விலகுதல் போராட்டம். இந்த அணுகுதல் அணுகுதல் போராட்டம் அப்படின்னா என்னன்னு பாத்தீங்கன்னா ஒரே நேரத்துல ரெண்டு விதமான விஷயங்கள்ல விருப்பத்தை வைக்கிறது. ரெண்டுமே ரொம்ப ரொம்ப முக்கியமானதா நமக்கு தோணும். இதுல எதை நம்ம அடையணும் எதை நம்ம எடுத்துக்கணும் அப்படின்ற அந்த மனப்போராட்டம் தான் அணுகுதல் அணுகுதல் போராட்டம். இதற்கு அந்த தலைவன் கூற்றா நம்ம பார்த்த அந்த பாடலை கூட நம்ம சான்றா காட்டலாம். அடுத்து அணுகுதல் விலகுதல் போராட்டம். நம்ம ஒன்னு அடைய நினைக்கும் பொழுது இன்னொன்னுத்த இழக்க நேரிடும். இதுதான் வந்து அணுகுதல் விலகுதல் போராட்டம். இந்த பாடல்ல தலைவன் தலைவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி நீண்ட நாள் காலம் கடத்துறான். அதை நினைச்சு தலைவி பேசுவதாக குறுந்தொகையில 102 வது பாட்டு. உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது இருப்பின் எம்மளவை தன்றே அப்படின்னு வரக்கூடிய இந்த பாட்டு. அதாவது தலைவனை நினைக்கும் பொழுது என் நெஞ்சம் வேகுகிறது ஏன்னா அவன் சொன்ன அவன் வந்து என்ன திருமணம் செஞ்சுக்கிறதா சொன்னா இதுவரைக்கும் அவன் வரவே இல்லை அப்படின்றத நினைக்கும் பொழுது எனக்கு என் நெஞ்சம் வேகுகிற மாதிரி இருக்குது. ஒருவேளை அவனை நினைக்காம இருக்கலாம்னு நினைச்சா அதுவும் என்னால முடியல. உள்ளாது இருப்பின் எம் அளவை தன்றே அப்படின்னு அவ வருத்தப்பட்டு சொல்றா. இப்படி எல்லாம் நான் அவனை நினைச்சு வருத்தப்படவும் அவனை சேரணும்னு ஆசைப்படவும் தகுதி உடையவனாக அவன் இல்ல அப்படின்றத இந்த பாடல்ல அவ சொல்றா. உளவியல் அடிப்படையில சொல்லப்பட்ட இந்த மூன்று போராட்டங்கள்ல அணுகுதல் விலகுதல் போராட்டம் தான் மிகக் கடுமையானது அப்படின்றத உளவியலாளர்கள் குறிப்பிடுறாங்க. ஏன்னா இந்த வாழ்க்கையில இன்பமும் துன்பமும் கலந்துதான் இருக்கு. இதற்கிடையிலான போராட்டம்தான் கடுமையா இருக்கு. இந்த போராட்டத்தைதான் இந்த அணுகுதல் விலகுதல் கோட்பாட்டின் வழியா நம்ம தெரிஞ்சுக்கிறோம். அடுத்து விலகுதல் விலகுதல் போராட்டம். அதாவது ஒரு நிகழ்வினால ரெண்டு முடிவுகள் கிடைக்கலாம். அந்த ரெண்டு முடிவுகளையுமே நம்ம விரும்பலனா கூட ஏதாவது ஒரு முடிவை நம்ம ஏத்துக்கிட்டே ஆகணும் அப்படின்ற சூழல்னால விளையக்கூடியதுதான் இந்த விலகுதல் விலகுதல் போராட்டம். இந்த போராட்டத்துக்கு ஆட்பட்டவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னா ரெண்டு தீமைகள்ல ஏதாவது ஒரு தீமையை வந்து தேர்ந்தெடுக்கிற மாதிரி அதாவது குறைவான தீமையை வந்து தேர்ந்தெடுக்கிற மாதிரி இந்த போராட்டம் இருக்கும். எடுத்துக்காட்டா குறுந்தொகையில் வரக்கூடிய ஒரு பாடல் தெற்றன தூற்றலும் பழியே வாழ்த்தலும் பழியே பிரிவு தலைவரினே அப்படின்ற வரிகள்ல தோழி வந்து தலைவனுக்கு வாயில் மறுக்கிறா அந்த சமயத்துல தலைவன் வந்து மடல் ஏறுவேன் அப்படின்னு சொல்றான். இந்த மாதிரி நான் மடல் ஏறுனா இந்த பெண்ணாலதான் இவனுடைய நிலைமை இப்படி ஆச்சு அப்படின்னு இந்த ஊரார்கள் வந்து பழி தூற்றுருவாங்க. அதனால பிரிவை ஏத்து வாழவும் முடியாது. மடல்ஏறி தூற்றவும் இயலாது அப்படின்னு இந்த ரெண்டுத்தையுமே தவிர்த்தே ஆக வேண்டிய நிலைக்கு அந்த தலைவன் ஆளாகி கடைசியில விலகி இருக்கிறதே சரி அப்படின்னு ஒரு முடிவுக்கு வர்றான். இதுதான் விலகுதல் விலகுதல் எனும் உள்ள போராட்டம். உளவியல் அடிப்படையில இந்த மூன்று நிலைகளை இந்த தலைவன் தலைவிய அந்த மாதிரியான மனிதர்களுடைய மனநிலையில் இருந்து நம்ம பார்த்தோம். இதே மாதிரி சங்க இலக்கியங்கள் விலங்குகளுடைய உளவியலையும் நமக்கு எடுத்துச் சொல்லிிருக்கு. குறுந்தொகை 69வது பாடல்ல கருங்கன் தாக்கலை பெரும் பிரிது உற்றென கைமை உய்யா காமர் வந்தி கல்லா வன்பரள் கிளை முதற சேர்த்தி ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே அப்படின்ற இந்த பாடல் தலைவன் வந்து இவளை சந்திக்கிறதுக்காக வர இரவுக்குறியில வரும்பொழுது இந்த மாதிரி இரவு நேரத்தில நீங்க வராதீங்க உங்களுக்கு ஏதாவது தீங்கு உண்டாகும் அப்படின்னு நாங்க வருத்தப்படுறோம் அப்படின்றத தோழி வந்து தலைவி தலைவன் கிட்ட சொல்றா அப்படியான இந்த பாடல்ல என்ன விஷயம் வந்திருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா அந்த தலைவன் எப்படிப்பட்ட நாட்டுக்கு தலைவன் அப்படின்றத இதுல வரக்கூடிய இந்த செய்தி அந்த விலங்குகளுடைய உளவியலை சொல்லக்கூடிய இந்த செய்தி விளக்குது. அதாவது கருப்பான கண்களை கொண்ட தாவும் இயல்வை கொண்ட இந்த ஆண் குரங்கு இறந்து போயிடுச்சு. அந்த ஆண் குரங்கு இறந்ததுனால பிரிவு துன்பத்தை தாங்க முடியாத அந்த பெண் குரங்கு என்ன பண்ணுதுன்னா தன்னுடைய குட்டி இதுவரைக்கும் மரத்துல கிளையில தாவியே பழகாத அந்த சின்ன குட்டியை வந்து என்ன பண்ணுது அதனுடைய சுற்றத்தினரான மற்ற குரங்குகள் கிட்ட ஒப்படைச்சிட்டு ஒரு உயர்ந்த மலையில ஏறி நின்னு அங்கிருந்து குதிச்சு தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்ளுதாம். அப்படிப்பட்ட காதல் நிறைந்த அந்த நாட்டுக்கு அந்த விலங்குகளுக்குள்ளார ஒரு காதல் நிறைந்த அந்த நாட்டுக்கு தலைவனே நீ வந்து நல்லிரவுல வராத அப்படி வந்தன்னா நானும் இந்த மாதிரி உனக்கு ஏதாவது தீங்கு நிந்துச்சுன்னா என்னுடைய நிலையும் இப்படித்தான் ஆகும் அப்படின்றத சொல்றதாக இந்த பாடல் அமைஞ்சிருக்கு. இந்த மாதிரி சங்க இலக்கியங்கள் மனிதர்கள் விலங்குகள் ஆகியவர்களுடைய உளவியலை மிக அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறாங்க. இதுல சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய எல்லா பாடல்களுமே கூட ஒவ்வொரு விதமான தன்னுணர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய பாடல்களாக இருக்கு அதை ஆழ்ந்து படிக்கும் பொழுது நம்ம உணரலாம். இந்த வகுப்புல பழந்தமிழ் இலக்கியங்கள்ல் உளவியல் அப்படின்ற விஷயத்தை நம்ம பார்த்தோம். இனி அடுத்த வகுப்பில வேறொரு பாடத்தோடு உங்களை சந்திக்கின்றேன் நன்றி வணக்கம்

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

உளவியல்#பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல்#pazhnthamizh i...