வணக்கம். இன்னைக்கு நாம பார்க்க போற பதிவு சிற்றிலக்கியங்களின் அறிவியல். தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள இலக்கிய வகைகள்ல ஒன்றுதான் சிற்றிலக்கியம். சிற்றிலக்கியங்களை பிரபந்தங்கள் அப்படின்னு சொல்லி அழைக்கிறது உண்டு. வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி 16 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பிரபந்த மரபியல் அப்படிங்கிற பாட்டியல் நூல். இதுலெல்லாம் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் அப்படின்னு சொல்லப்பட்டிருக்கு. சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியர் காலத்தில் தோன்றினாலும் கூட 15ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை மேலோங்கி வளர்ந்ததா சொல்லப்படுது. இந்த காலத்துல நாயகர்கள் ஆட்சி செய்தாங்க. அதனால நாயகர் காலத்தை சிற்றிலக்கிய காலம் அப்படின்னு சொல்றதும் உண்டு. இந்த 96 வகை சிற்றிலக்கியங்கள்ல அங்கங்கே சில அறிவியல் கருத்துக்களும் இடம்பெறுகின்றன. அந்த கருத்துக்களைதான் இந்த பதிவுல நாம பார்க்க போறோம். பதிவுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்மளுடைய சேனல் யுன் அபிஷயல் கற்பூம் தமிழலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நான் தமிழ்நதி. சிற்றிலக்கியங்கள் தோன்றி வளர்ந்த வரலாற்ற முனைவர் நவி ஜெயராமன் அவர்கள் இயற்கையான ஒரு நிகழ்வோட ஒப்பிட்டு பேசுறாரு. தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து தங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டு ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாக துளிர்த்து ஏழாம் நூற்றாண்டில் கோவையாக செடியாகி எட்டாம் நூற்றாண்டில் உலா மரமாகி ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாக கிளைத்து 11 ஆம் நூற்றாண்டில் சதகமாகவும் பரணியாகவும் அரும்பி 12 ஆம் நூற்றாண்டில் பிள்ளை தமிழான மொட்டாகி 14ஆம் நூற்றாண்டில் பல்லாக காய்த்து 18ஆம் நூற்றாண்டில் குறவஞ்சியாக கணிந்தது அப்படின்னு எழுதி இருக்கிறாரு. இலக்கியங்கள்ல் 96 வகை இருந்தாலும் ஆற்றுப்படை கோவை உலா சதகம் பல்லு குறவஞ்சி இந்த மாதிரி சில இலக்கியங்களை குறிப்பிட்டு சிறப்பா காட்டுறது உண்டு. இலக்கியங்கள்ல் தெய்வம், மன்னன், வள்ளல்கள், மக்கள்ல சிறந்தவர்களை பாட்டுடை தலைவராக கொண்டு அவர்களுடைய வாழ்க்கை கூறுகள் பாடப்படுறது உண்டு. அந்த வகையில அங்கங்கே சில அறிவியல் சிந்தனையும் இடம் பெற்றிருக்கு. அந்த மாதிரி சிற்றிலக்கியங்கள்ல இடம்பெற்ற அறிவியல் கருத்துக்களை இந்த பதிவுல நாம பார்ப்போம். அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ். உற்றிலக்கிய வகைகள்ல ஒன்றுதான் பிள்ளைத்தமிழ். பாட்டுடை தலைவரை குழந்தையா பாவித்து 10 பருவங்கள்ல் பாடுறதுதான் இந்த பிள்ளைத்தமிழ். சிவஞான முனிவர் அமுதாம்பிகை பிள்ளை தமிழ்ல ஊசல் பருவத்தில மகர குலைகளும் ஊசலாட பங்கைய மடமாதர் நோக்கி இரு வேவேமாட்ட பூசலில் பாய்ந்திலது இவ்வூசல் அப்படின்னு சொல்லி பாடி இருக்கிறாரு. அமுதாம்பிகை ஊசல் ஆடக்கூடிய நிகழ்வைதான் இந்த பாடல்ல குறிப்பிட்டு சொல்றாரு. அதாவது அமுதாம்பிகை ஆடக்கூடிய ஊசலுடைய கயிறு நீளமா இருக்கிறதுனால அது மெதுவா ஆடுகிறது அப்படின்னும் அவள் காதுல அணிந்திருக்கக்கூடிய குண்டலம் குறைவான நீளத்தில இருக்கிறதுனால விரைவாக ஆடுகிறது அப்படின்னும் தன்னுடைய பாடல்ல பாடி இருக்கிறாரு. இததான் கலிலியோ பூசலுடைய நீளம் குறித்த ஆய்வுல பூசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும் அப்படின்னும் பூசல் நீளம் அதிகமா இருந்துச்சுன்னா மெதுவாக ஆடும் அப்படின்னும் ஆய்வின் முடிவுல சொல்லி இருக்கிறாரு. இப்படி ஆய்வின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகளை பல தமிழர்கள் தங்களுடைய அனுபவத்தின் வாயிலாகவே தமிழ் பாடல்கள்ல் வெளிப்படுத்தி இருக்கிறாங்க. அடுத்ததா முக்குடர் பல்லு. சிற்றிலக்கிய வகைகள்ல் ஒன்று பள்ளி இலக்கியம். விவசாய தொழில் செய்யக்கூடிய மக்களை பாடக்கூடியதுதான் பள்ளி இலக்கியங்கள். முக்குடர் பள்ளி இலக்கியத்தில வானிலை அறிவியல் குறித்து செய்திகளை நம்மளால பார்க்க முடியும். மலை வருவதற்கான அறிகுறி குறித்து முக்குடர் பல்லுல இடம்பெற்ற பாடல் ஒன்று கூறுகிறது. ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே அப்படிங்கிறது இந்த பாடல். மலையாள மின்னல் அப்படிங்கிறது மலையாளம் பேசக்கூடிய மக்கள் அதாவது கேரளம் இருக்கக்கூடிய மேற்கு திசையிலையும் ஈழ மின்னல் அப்படிங்கிறது ஈழம்ங்கிறது இலங்கையை சொல்றாங்க. இலங்கை இருக்கக்கூடிய தென்திசை ரெண்டும் சேர்ந்த மாதிரி தென்மேற்கு திசையில மின்னல் வெட்டுது. அதனால கண்டிப்பா மழை வரும் அப்படிங்கிறது இந்த பாடல்ல பாடப்பட்டிருக்கு. இன்னைக்கும் தென்மேற்கு திசையில மின்னல் வெட்டுனா மழை வரும் அப்படிங்கிறது வாநிலை குறித்த ஒரு செய்தி. அது அன்னைக்கே பல தமிழர்கள் தங்களுடைய பாடல்ல பாடி இருக்கறாங்க. முக்குடர் பல்லுல வேலான் அறிவியல் குறித்த நிறைய செய்திகளும் காணப்படுகின்றன. நெல்லினுடைய வண்ணம், வடிவம், இயல்பு, சுவை இதற்கு ஏத்த மாதிரி நெல்லுக்கு பெயரிட்டும் அழைச்சு வந்திருக்காங்க. பொக்குடர் பல்லுல 150க்கும் மேற்பட்ட நெல்லினுடைய வகைகள் கூறப்பட்டிருக்கு. புக்குடர் பல்லுல வேலான் அறிவியல் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன அப்படின்னு நான் சொன்னேன். அதற்கு சான்றா ஒரு செய்தியை நான் சொல்றேன். நெல் கதிர் பிடிப்பதற்கு முன்னாடி வெயில் மிகுதியா இருந்துச்சு அப்படின்னா ஒளிச்சேர்க்கை மிகுதியா நடைபெறுமாம். இதனால நெல்லினுடைய மணிகள் அதிக அளவில உற்பத்தி யாகுறதோட அதற்கு பூச்சி தாக்குதலோ நோய் தாக்குதலோ ஏற்படாம பாதுகாக்க முடியுமாம். சித்திரை மாதத்துல அதிகமா வெயில் இருக்கிறதுனால அந்த காலத்துல எந்த நெல்லை பயிரிட்டா பலனடிக்கும் அப்படிங்கறத தெரிஞ்சுக்கிட்டு அதை பயிரிட ஆரம்பிச்சாங்க. அந்த நெல் வகைக்கு காலம் சார்ந்தும் பெயரிட ஆரம்பிச்சாங்க. அதாவது சித்திரை மாதத்துல பயிரிடுறதுனால அந்த நெல்லுக்கு சித்திரைக்காளி சித்திரை வண்ணன் அப்படின்னு சொல்லி பெயரிட்டு அழைச்சிருக்காங்க. இது மட்டும் இல்லாம விலை உயர்ந்த பொருட்களை நம்ம சொல்லக்கூடிய பவளம், முத்து இந்த மாதிரியான பெயர்களை நெல்லுக்கும் வச்சு அழைச்சு வந்திருக்காங்க. செம்பவளச்சம்பா, மாணிக்க சம்பா, மாணிக்க மாலை, முத்துச் சம்பா அப்படின்னு சொல்லிட்டு நெல்லுக்கும் விலை உயர்ந்த பொருட்களுடைய பெயர்களை சூட்டி மகிழ்ந்திருக்காங்க பண்டைய தமிழர்கள். வானத்தில தோன்றக்கூடிய நட்சத்திரங்களை கணக்கிட்டு ஏர்பூட்டி உழுததற்கான செய்திகளும் முக்குடர் பல்லுல இடம்பெற்றிருக்கு. அதாவது பல தமிழர்கள் வானியல் குறித்த அறிவியலையும் அறிந்து வைத்ததற்கான சான்றுதான் இது. அடுத்ததா திருக்குற்றாள குறவஞ்சி. குறவஞ்சி சிற்றிலக்கிய வகைகள்ல ஒன்று. பீதி உலா வரக்கூடிய தலைவன் மேல காதல் கொண்ட தலைவி ரொம்ப வருத்தத்தில இருக்கும்போது அவளுக்கு குறி சொல்லி அவள வருத்தத்தை போக்குற மாதிரியான ஒரு பாடலை கொண்டுட்டு இருக்கிறதுதான் இந்த குறவிஞ்சி இலக்கியம். குறவிஞ்சி குறி சொல்றது மட்டுமி இல்லாம தன்னுடைய மலைவளம் தன்னுடைய தலைவன் குறித்து தன்னை குறித்து போன்ற செய்திகள் எல்லாத்தையுமே பாடுற மாதிரி இந்த இலக்கியத்தில இடம் பெற்றிருக்கும். குறவஞ்சி குறி சொல்றதுக்கு முன்னாடி தான் வாழக்கூடிய குற்றாள மலையுடைய சிறப்பை சொல்ற மாதிரியான ஒரு பாடல் இடம்பெறும். இந்த பாடல்ல சீரியல் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும். அதாவது வானரங்கள் அப்படிங்கறது குரங்குகள். வான் குரங்கு தன்னுடைய பெண் குரங்குக்கு பழங்களை பறித்து கொடுக்கும் போது அந்த பழங்கள் சிதறியபடி அந்த பெண் குரங்கு சாப்பிடுமா. இந்த பாடல்ல ஒரு உயிரியல் குறித்த அறிவியலை நம்ம பார்க்கலாம். இது மட்டுமி இல்லாம கனக சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பார் அப்படின்னு சொல்லி பாடப்பட்டிருக்கு. அதாவது இந்த குற்றாள மலைக்கு வரக்கூடிய சித்தர்கள் உயிரை பேணக்கூடிய இயற்கை மருத்துவத்தையும் அறிந்து வைத்திருந்தனர் அப்படிங்கறது மாதிரி பாடல்ல இடம் பெற்றிருக்கு. அதாவது மருத்துவ செய்தியும் இடம்பெறுது அப்படின்னு சொல்லி நம்ம சொல்லலாம். அடுத்ததா மூவர்லா. இலக்கிய வகைகள்ல உலா இலக்கிய வகையை சார்ந்ததுதான் இந்த மூவருலா. உலா இலக்கியம் அப்படிங்கறது என்னன்னா மீதி உலா வரக்கூடிய தலைவனை பார்கறதுக்கு நிறைய மக்கள் கூடி இருப்பாங்க. விக்ரமசோழன், குளோத்துங்க சோழன், ராஜராஜ சோழன். இந்த மூன்று மன்னர்களும் உலா வரும்போது கூடி இருக்கக்கூடிய மக்கள்ல பெண்களுடைய பருவத்தின் அடிப்படையில அவங்களை பிரித்து சொல்றது உண்டு. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் அப்படின்னு சொல்லிட்டு பருவங்கள் அடிப்படையில சொல்றது உண்டு. இது வயது அடிப்படையில பிரிக்கப்படும். இப்படி அந்த பெண்களுடைய பருவத்தில அவங்களுக்கு என்ன மாதிரியான எண்ணங்கள் எல்லாம் ஏற்படும் அப்படிங்கிறத இந்த இலக்கியத்தில சொல்லி இருப்பாங்க. பேதை, பேதை அப்படிங்கறது ஐந்து வயதிலிருந்து ஏழு வயது வரைக்கும். பெதும்பை அப்படிங்கறது எட்டு வயது முதல் 11 வயது வரை. மங்கை 12 வயதிலிருந்து 13 வயது வரை அடந்தை 14லிருந்து 19 வயது. அறிவை 20 வயதிலிருந்து 25 வயது. தெரிவே அப்படிங்கறது 26 வயதிலிருந்து 31 வயது வரைக்கும். இப்படி ஐந்து வயதிலிருந்து 31 வயது வரைக்கும் இடம்பெற்ற அந்த பெண்கள் உலக வரக்கூடிய தலைவனை கண்டு அவர்கள் எண்ணக்கூடிய அவர்களுடைய எண்ணங்கள் இங்கு பதிவு செய்யப்படும். இது ஒரு உடல்சார் அறிவியல் பதிவாக நாம கருதலாம். இந்த பதிவுல சிற்றி இலக்கியங்களான அமுதாம்பிகை பிள்ளை தமிழ் முக்கூடர் பல்லு திரு குற்றாள குறவஞ்சி மூவருளா இந்த நாலு இலக்கியங்கள்ல் இடம்பெற்ற அறிவியல் கருத்துக்கள் பத்தி சொல்லி இருக்கேன். இந்த பதிவு இதோட முடிவு பெறுது. மீண்டும் ஒரு தமிழ் உரையாடலுடன் நான் சந்திக்கிறேன் நான் தமிழ் நதி நன்றி.
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact