உலோகவியல்#பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்#ulogaviyal#Dr.S.Prabavathi

UG-Tamil vaguppu1,096 words

Full Transcript

அனைவருக்கும் வணக்கம். யூஜி தமிழ் வகுப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன். இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது பழந்தமிழ் இலக்கியங்களில் உலோகவியல் சிந்தனைகள். ஆதி மனிதர்களின் வளர்ச்சி வரலாற்றை அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளை கொண்டே மதிப்பிடுகின்றன. இதனால்தான் அவர்கள் வாழ்ந்த காலத்தை பழைய கற்காலம் புதிய கற்காலம் உலோக காலம் என பிரித்து ஆராய்க்கின்றனர். உலோக பயன்பாட்டின் முதல் காலமாக செம்பு காலம் கருதப்படுகிறது. அதனை தொடர்ந்துதான் ஈயம், வெண்கலம், இரும்பு போன்ற உலோகங்கள் வந்தன. உலோகங்களின் வகைகள். உலோகங்களை இரும்பு உலோகம், இரும்பு அல்லாத உலோகம், கலப்பு உலோகம் அப்படின்னு மூணா வகைப்படுத்துறாங்க. இந்த இரும்பு உலோகம்னு சொல்றதுல தேனிரும்பு, வார்பெரும்பு இதெல்லாம் அடங்கும். இரும்பு அல்லாத உலோகம்ன்னு சொல்றதுல தாமிரம், அலுமினியம் போன்றவை அடங்குது. கலப்பு உலோகம் அப்படின்றதுல பித்தலை, வெண்களம் போன்றவை அடங்கும். தமிழர்கள் இந்த மாதிரி சில குறிப்பிட்ட உலோகங்களை சொல்றதுக்கு பொன் அல்லது மாழை அப்படின்ற சொற்களை வந்து பயன்படுத்தி இருக்கறாங்க. ஆங்கிலத்தில மெட்டல்ன்ு சொல்லக்கூடிய அந்த சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லாக பொன் அப்படின்ற சொல்லை பயன்படுத்தி இருக்காங்க. இது வந்து இன்னைக்கு குறிக்கக்கூடிய தங்கத்தை குறிப்பதுஅல்ல. இந்த பொன் என்ற சொல் வந்து இன்னைக்கு நம்ம வழக்கத்தில இருக்கக்கூடிய தங்கத்தை குறிப்பதாக இல்லாம எல்லாவிதமான உலோகங்களை குறிப்பதாக இருக்கு. சன்றா தூண்டில் பொன்மீன் விழுங்கியற்று அப்படின்னு திருவள்ளுவருடைய 931வது திருக்குறள்ல வரக்கூடிய அந்த பொன் அப்படின்ற அது வந்து எதை குறிக்குது அப்படின்னு பாத்தீங்கன்னா இரும்பை குறிக்குது. அதே மாதிரி சுடச்சுடரும் பொன்போல் அப்படின்னு ஒரு இடத்துல பொன் அப்படின்னு சொல்லிட்டு ஒரு உலோகத்தை குறிப்பிடுறார் அது எந்த உலோகம்னு பாத்தீங்கன்னா இன்னைக்கு நம்ம சொல்லக்கூடிய தங்கம் அததான் வந்து சுடச்சுட ஒளி தரக்கூடியது இந்த பொண் அப்படின்னு சொல்லிட்டு தங்கத்தை குறிப்பிடுறாரு. தங்கம்ன்றது ரொம்ப அரிதா கிடைக்கக்கூடிய உலோகமாக அந்த காலத்தில இருந்துச்சு. இந்த இந்த உலோகத்தை உருக்கி நகை செய்யக்கூடிய தொழிலாளர்களை வந்து பொற்கொள்ளர், கம்மியர், தட்டார் அப்படின்ற பெயர்கள்ல அழைச்சாங்க. பலப்பழப்பா வெளிர் நிறத்தில இருந்த உலோகத்திற்கு வெண்பொன் அதாவது வெள்ளி அப்படின்னும் சிவப்பேர் இருந்த உலோகத்திற்கு செம்பு அப்படின்னும் பெயர் வச்சாங்க. இதே மாதிரிதான் இதுக்கு அடுத்தது வந்து கரும்பொண் அப்படின்னு சொல்லிட்டு ஒரு பேர் வச்சிருக்காங்க. இந்த கரும்பொண் அப்படின்றது எது அப்படின்னு பாத்தீங்கன்னா இரும்பைத்தான் அவங்க கரும்பொன்னு சொல்றாங்க. இது கருமையான நிறத்தில இருக்கறதுனால இது கரும்பொண் அப்படின்னு அழைக்கப்பட்டுச்சு. இந்த இரும்பை வந்து இரும்பொண் அப்படின்ற பெயரிலயும் அழைச்சிருக்காங்க. அப்படின்னா என்னன்னா பெரிய பயன்பாடு உடைய பொன் அப்படின்ற பொருள்ல இந்த இரும்பொன் அப்படின்ற சொல் இரும்பை குறிப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கு. இன்றைய அகழ்வாய்வுகளினுடைய முடிவின்படி இரும்பு காலம் அப்படின்றது 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டது அப்படின்னு நிறுவி இருக்காங்க சங்க இலக்கியங்கள்ல இந்த இரும்பை இரும்பு தொழில்ல ஈடுபட்டவங்களை கொல்லர் கருங்கை கொள்ளர் அப்படின்ற பெயர்கள்ல் அழைச்சிருக்கறாங்க ஒரு புறநாூற்று பாடல்ல அருங்குரும்பு உடுத்த காண பேரையில் கருங்கை கொள்ளன் செந்தி மாட்டிய இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என அப்படின்ற ஒரு பாடல் யாராலயும் நெருங்கி கைப்பற்ற முடியாத அளவுக்கு சின்ன சின்ன அரண்களால சூழப்பட்டிருக்கக்கூடிய இந்த பெரிய கான பேரியையில் சொல்லக்கூடிய அந்த பெரிய அரண் வந்து எப்படி எப்படி இருக்கு அப்படின்னா ரொம்ப வலிமையான கையை உடைய இந்த கொல்லன் வந்து பட்டரையில வந்து ஒரு இரும்பை வந்து செய்யறான் அந்த செந்தியில் இருக்கக்கூடிய இரும்பை செய்றான் அது இரும்பை செய்யும் பொழுது அதுல ஊற்றப்பட்ட நீரை வந்து நம்ம எப்படி வந்து திருப்பி எடுக்க முடியாதோ அதே மாதிரி உக்கிர பெருவழுதி கிட்ட இருந்து இந்த எயிலை நம்மால் கைப்பற்ற ற முடியாது என்பதாக இந்த பாடலடிகள் விளக்குகின்றன. இதிலிருந்து கொள்ளர்கள் எப்படிப்பட்ட வேலையை செய்தார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் புறநாூற்றில் வேல்வடித்து கொடுத்தல் கொள்ளற்கு கடனே என்ற பாடலடி நம் எல்லோரும் அறிந்தது. வேலை வடித்து கொடுக்கும் இரும்பு தொழிலை செய்பவர்கள் தான் இந்த கொள்ளர்கள் என்பதை இதன் மூலமும் நம் அறிந்து கொள்ளலாம். இந்த கொள்ளர்கள் வேலை செய்த இடங்களை கொற்றை என்ற பெயரில் அழைத்தனர். இதனை புறநானூற்று பாடல் 95ன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். சங்க காலத்தில் போர்க்கருவிகளாக மட்டுமல்லாமல் வேளாண்மை சார்ந்த தொழிற்கருவிகளாகவும் இந்த இரும்பு பயன்படுத்தப்பட்டது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. கொல்லன் தனது பணிகளை செய்வதற்கு நெருப்பூட்டுவதற்கு துருத்தியை பயன்படுத்தினான் என்பதையும் மென்தோல் மிதியுலை கொல்லன் என்ற பெருமானாற்றுப்படை பாடல் அடி உணர்த்துகின்றது. பொருநராற்றுப்படையில் மயிறகுறை கருவி என்ற தொடர் இடம்பெற்றுள்ளது இது கத்தரிக்கோல் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது. இதை போலவே மையறி கத்திரிகை என்று சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றது. இவ்வாறு இரும்பு சங்க காலத்தில் எவ்வங்களில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான மிகப்பெரும் சான்றாதாரமாக சங்க இலக்கியங்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் விளங்குகின்றன என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இனி அடுத்த உலோகமான எக்கினை பற்றி பார்க்கலாம். எகு என்பது ஒரு கலப்பு உலோகம். இரும்புடன் கார்பன் எனும் கரிமம் சேர்த்த பின்பு இதன் வலிமையும் வளையாத தன்மையும் கூடும். மக்னிஸ் நிக்கல் போன்ற கனிமங்களும் இதற்குடன் சேர்க்கப்பட்டு வல்லிரும்பான எக் உருவாக்கப்படுகிறது. பண்டை தமிழர்கள் வேல் எனும் ஆயுதத்தை இந்த எக் என்றே அழைத்தனர். எக்கு விலங்கு தடக்கை மலையன் காணத்து என்ற குறுந்தொகை பாடலடி இதனை விளக்குகின்றது. இதுபோல் ஒளிரி இளைய எகு ஏந்தி என்ற புறநானூற்று அடியும் இதற்கு சான்றாக அமைகின்றது. எகு படை அறுத்த கொயசுவர் புறவியோடு என்ற பதிற்று பத்து செய்யுலடி எக்கில் செய்த படையால் கத்தரித்து ஒழுங்கமைக்கப்பட்ட குதிரையின் பிடரி மயிறு என எக்கின் பயன்பாட்டை குறிப்பிடுவதை காண முடிகின்றது. அடுத்து தங்கம். தங்கத்தை கொண்டு தொழில் செய்வோர் பொன்சை கொள்ளர், பொன்வினைஞர், பொற்கொள்ளர், தட்டார் என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர். இவர்கள் நேர்த்தியான அணிவகைகளை செய்தனர். மணிமுடி, பதக்கம், தோல் அணி, குண்டலம், காதணி, கைவலை பட்டம், பாதக்கின்னி, சதங்கை, சிலம்பு, கழல், மேகலை, காஞ்சி, அரைஞான், மோதிரம், நுதலணி, தலைக்கோலம், தலைப்பாலை, கிம்புரி ஆகிய அணிவகைகளை பண்டை தமிழர்கள் அணிந்துள்ளனர். இவை யாவும் தங்கத்தை உருக்கி அதில் சிலவற்றை சேர்த்து செய்யப்பட்ட அணிகலன்கள் ஆகும். புறநாூற்றில் மட்டும் பொன் என்பதற்கு கழஞ்சு எனும் சொல் ஆளப்பட்டு வந்திருக்கிறது. மரம் பாடிய பாடினியுமே ஏர்டைய விழக்கழஞ்சின் சீருடைய இழை பெற்றிசினே என்ற புறநானூற்று பாடலடி இதற்கு சான்றாக விளங்குகின்றது. சிலப்பதிகாரத்தில் புகழ் பெற்ற அடியான பொன்சை கொள்ளன் தன் சொல் கேட்ட யானோ அரசன் யானே கல்வன் என்ற அடியும் பொன்னால் ஆகிய வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களை செய்யக்கூடிய கொல்லன் என்பதை குறிக்கின்றது. கம்பராமாயணத்தில் இடம்பெற்ற பொன்னின் பிரிது ஆகிய பொற்கலனே என்று பொன்னால் ஆகிய கலன்களை பற்றி இது குறிப்பிடுகின்றது. அதுபோல் திருக்குறளில் சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோக்கிற்பவர்கு தம்மைத் தாமே வருத்திக்கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோர்பவர்களை எந்த துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடசுட ஒளிவிடும் பொன்னை போல அவர்கள் புகழ் பெற்றே உயர்வார்கள் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார். இதுவரை நாம் சான்றாக பார்த்த பாடல்கள் வழி தங்கத்தின் தன்மையினையும் அதை கொண்டு செய்யப்படக்கூடிய அணிகலன்களை பற்றியும் பார்த்தோம். அடுத்து வெள்ளி. வெள்ளியினுடைய பயன்பாடு சங்ககால தமிழர்களிடம் இருந்துள்ளது. வெள்ளி விழுத்தோடி மென்கருப்பு உலக்கை என்று அகனாநூற்று பாடலடி இதற்கு சான்றாகின்றது. வெள்ளி பூநிட்ட கருப்பு உலக்கை பற்றிய குறிப்பினை இது கொடுக்கின்றது. வெள்ளியால் செய்யப்பட்ட அணிகலன்களும் வீட்டு பயன்பாட்டு பொருட்களும் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. ஹராப்பா முகஜதாரோக் நாகரீக காலத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய வெண்களத்தால்ான நாட்டிய மங்கையினுடைய உருவம் உட்பட பல வெண்கல பொருட்கள் கிடைத்துள்ளன. அதேபோல ஆதிச்சநல்லூரில் பல வெண்கல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் வளையல், சிலம்பு மோதிரம் முதலியன குறிப்பிடத்தக்கவை. கண்ணை கவரும் விதத்தில் பல விலங்குகளின் உருவங்களும் இந்த உலோகத்தால் செய்யப்பட்டுள்ளன. ஆடு, சேவல், மான், நாய், எருது, புலி முதலிய உருவங்கள் வெங்கலத்தால் செய்யப்பட்டுள்ளன. மேலும் வீட்டிற்கு தேவையான வெண்கள பாத்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பு குறுந்தொகை பாடல் மூலம் அறிய முடிகின்றது. அதாவது வெண்ணீரை சேமித்து வைக்கக்கூடிய சேமச் செப்பு என்பது பற்றிய குறிப்பினை குறுந்தொகை 277வது பாடல் நமக்கு காட்டுகின்றது. சமய எழுச்சி காலத்தில் வந்து வெண்களத்தாலான தெய்வத்திரு திருவுருவங்கள் எல்லாம் கோவில்களின் உற்சவ மூர்த்திகளாக செய்யப்பட்டன. செம்பு செப்பு என்றும் தாமிரம் என்றும் செம்பு என்றும் பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. மிகவும் மென்மையானதாகவும் தகடாக அடிக்க கூடியதாகவும் கம்பியாக நீட்டக்கூடியதாகவும் மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின்கடத்தியாகவும் இது விளங்குகிறது. இதன் மேற்பரப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதால் இதனை செம்பொன் என்று அழைத்தார்கள். கட்டுமான பொருளாகவும் பல்வேறு கலப்பு உலோகங்களின் பகுதி பொருளாகவும் நாணயங்கள் தயாரிப்பிலும் இந்த செம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நெடுநல் வாடையில் வரக்கூடிய செம்பு இயன்றன செய்வுறு நெடுஞ்சுவர் என்ற தொடர் செம்பால் செய்யப்பட்டது போல கட்டப்பட்ட நெடிய சுவர் எனும் பொருள்பட விளங்குகிறது. ஆதிச்சநல்லூர் மேல் சித்தாம்பூர் கொடுமணல் முதலான இடங்களில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் பல செம்பு பாத்திரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேல் சித்தாம்பூர் அகழ்வாய்வில் கிடைத்த மயில் பொம்மை ஒன்று இரும்பு காலத்தை சார்ந்ததாக கருதப்படுகிறது. செம்பினை பயன்படுத்தி பொற்காசுகளை அடித்து தரும் பணியை அரண்முனைகளுக்கு பொன் அணிகளன்களை செய்யக்கூடிய தட்டார்களே செய்திருக்கின்றனர். இந்த காசு செய்யும் தட்டார் அக்கசாலையர் என்று அழைக்கப்பட்டனர். அந்த காசு அடிக்கும் இடம் அக்கசாலை எனப்பட்டது. நாணயங்கள் செய்யும் அக்கசாலைகள் போடிநாயக்கனூர் மற்றும் காஞ்சிபுரத்தில் கண்டறியப்பட்டுள்ளன. சோழர்கள் மற்றும் பாண்டியர்கால நாணயங்கள் செம்பால் செய்யப்பட்டவையே ஆகும். மூணாம் நூற்றாண்டை சார்ந்த பாண்டியனின் செப்பு காசின் பின்புறம் மீன் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. முன்புறம் தமிழ் பிராமி எழுத்து பொரியும் வரையப்பட்டுள்ளது. இவ்வாறு பழந்தமிழர்கள் இரும்பு உள்ளிட்ட அனைத்து உலோகங்களையும் உருக்கிய பின்னரே கருவிகள் செய்தனர். இந்த உலோகங்களை உருக்குவதற்கு அவர்கள் வைத்திருந்த தொழிற்கு கூடங்கள் பல வகைகளில் அமைக்கப்பட்டிருந்தன. ஒன்று ஊது உலை இன்னொன்று மிதி உலை இன்னொன்று துருத்தி உலை. இத்தகு உலைக்கூடங்கள் தமிழகத்தில் இருந்துள்ளன என்பதின் வழி சங்ககால தமிழர்கள் உலோக பயன்பாட்டில் எந்த அளவுக்கு சிறந்து விளங்கி இருந்தனர் என்பதை அறியலாம். இரும்பு, எக்கு, பொன், வெள்ளி, செம்பு என பல்வேறு உலோகங்களை தம்முடைய தேவைகளுக்கு ஏற்ப கருவிகளாகவும் புழங்கு பொருட்களாகவும் மாற்றி பயன்படுத்தியுள்ளனர் என்பதை இலக்கியச் சான்றுகள் வழி இப்பாடத்தில் அறிந்து கொண்டோம். அடுத்த வகுப்பில், வேறொரு பாடத்தோடு உங்களை சந்திக்கின்றேன். நன்றி வணக்கம்.

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

உலோகவியல்#பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்#ul...