வணக்கம் இன்னைக்கு நாம பார்க்கக்கூடிய பதிவு ஐந்தினைப் பகுப்பும் சூழலியலும் தமிழருடைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஐந்தினைப் பகுப்பும் சூழலியலும் இந்த கட்டுரையை நாம ஆராய்ந்து பார்க்கலாம் தமிழர் வரலாற்றுல நிலம் அப்படிங்கறது ஒரு முக்கிய பங்காற்றது தமிழர் வரலாற்றைக் கூற எழுந்த இலக்கியங்கள் கூட அம்மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியின் அடிப்படையில்தான் அவங்களுடைய வாழ்க்கை வரலாற்றையும் வாழ்க்கை முறையினையும் எடுத்துக் கூறுகின்றன அந்த வகையில லெமுரியா அப்படிங்கிற குமரி கண்டத்துலதான் மனித இனம் தோன்றியது அப்படின்னும் அங்கு வாழ்ந்த மக்களால பேசப்பட்ட மொழிதான் ஆதித் தமிழ் மொழி அப்படின்னும் அந்த கண்டம் அழிவுக்கு உள்ளானபோது அங்கு வாழ்ந்த மக்களே ஒரு குழுக்களா தனித்தனியா வாழ ஆரம்பிச்சாங்க அப்படிங்கறதும் ஆய்வாளர்களுடைய கருத்தா இருக்குது அப்படி மக்கள் குழுக்களா வாழ ஆரம்பிச்ச காலகட்டத்துல அவங்க வாழக்கூடிய நிலத்தின் தன்மையை பொறுத்து அதற்கு பெயரிட்டு வழங்க ஆரம்பிச்சிருக்காங்க இப்படித்தான் ஐந்திணை பகுப்பும் நிகழ்ந்துள்ளது இப்ப ஐந்திணை பகுப்பினையும் அதன் சூழலியலையும் இந்த பகுதியில பார்க்கலாம் பதிவுக்குள்ள போறதுக்கு முன்னாடி முன்னாடி நம்மளுடைய சேனல் யுஎன் அபிஷியல் கற்போம் தமிழை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க அண்ட் தமிழ் நதி ஐந்திணை பகுப்பு நிலம் அப்படிங்கறது நாம் வாழக்கூடிய இடமோ இல்லைன்னா ஒருத்தரால ஆளப்படக்கூடிய இடமோ இல்லை அதை தாண்டி மனித வாழ்வியல்ல இருக்கக்கூடிய வரலாற்றினையும் வாழ்வியல் பண்பாடுகளையும் சுமந்து நிற்கக்கூடிய ஒரு பெட்டகமா இருக்குது இந்த நிலங்கள் அப்படி இருக்கக்கூடிய நிலங்களை ரெண்டு வகையா பிரிக்கலாம் ஒன்று பண்பாட்டு எல்லை இரண்டாவது நிலவியல் எல்லை அந்த வகையில பண்பாட்டு எல்லை அப்படிங்கறது என்ன அப்படின்னா மக்கள் ஒரு குழுக்களா வாழ்றது உண்டு அப்படி வாழும்போது அவங்களுக்குன்னு ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு மரபுகளை பின்பற்றுவது உண்டு அந்த மக்கள் வாழக்கூடிய நிலங்களை தான் நம்ம பண்பாட்டுக் கூறுகள் அப்படின்னு சொல்லுவோம் இரண்டாவது நிலவியல் எல்லை இயற்கை எல்லைகளாலோ இல்லைன்னா அரசியல் அதிகார வரம்புகளால் தீர்மானிக்கப்படக்கூடியது தான் இந்த நிலவியல் எல்லை அப்படின்னு சொல்லுவாங்க பண்பாட்டு எல்லை அப்படிங்கறது பண்பாட்டு மரபுகளை பின்பற்றக்கூடிய ஒரு குழுக்கள் சார்ந்ததா உள்ளது அப்படிங்கறத சொன்னேன் இந்த பண்பாட்டு எல்லை அடிப்படையில்தான் நிலங்களை ஐந்து திணைகளா பிரிக்கிறாங்க குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பதாகும் ஐந்து திணைகளுக்கும் முதல் பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்றவாறு வரையறுக்கப்பட்டுள்ளது முதல் பொருள் என்பது நிலமும் பொழுதும் அப்படின்னு சொல்றாங்க கருப்பொருள் அப்படிங்கறது இந்த ஐந்து திணைகளையும் வாழக்கூடிய மக்கள் அவர்கள் செய்யக்கூடிய தொழில் அங்கு இருக்கிற இருக்கக்கூடிய பறவைகள் விலங்குகள் அப்படின்னு சொல்லிட்டு 14 வகைகளை குறிப்பிடுறது உண்டு மூன்றாவதா உரிப்பொருள் அங்கு வாழக்கூடிய மக்களுடைய இயல்பும் சூழலையும் பொறுத்து இந்த உரிப்பொருள் அமையும் முதல்ல முதல் பொருளை பார்த்துரலாம் நிலமும் பொழுதும் முதல் பொருள் எனப்படும் அப்படின்னு சொல்லுவாங்க நிலம் அப்படிங்கறது ஐந்திணைகள்னு நம்ம சொல்லக்கூடிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை இவற்றிற்குரிய நிலப்பகுதிகள் குறிஞ்சிக்கு மலையும் மலை சார்ந்த இடமும் முள்ளைக்கு காடும் காடு சார்ந்த இடமும் மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் பாலை இந்த நிலத்தை வறண்ட நிலம் அப்படின்னு சொல்லுவாங்க மணலும் மணல் சார்ந்த இடமும்னு சொல்றது உண்டு அதுபோக குறிஞ்சிய முல்லையும் தன்னுடைய இயல்பில் திரிந்து போதல் அதாவது இயல்பான நிலையிலிருந்து வறண்டு போகக்கூடிய ஒரு நிலமா மாறுச்சுன்னா அதையும் பாலை நிலம் அப்படின்னு சொல்லுவாங்க அடுத்ததா பொழுது பொழுது இரண்டு வகை ஒன்று பெரும் பொழுது இரண்டாவது சிறு பொழுது பெரும்பொழுது பெரும்பொழுது அப்படிங்கறது ஒரு ஆண்டின் கூறுபாடு அப்படின்னு சொல்லுவாங்க ஒரு ஆண்டுக்கு உரிய ஆறு பருவங்களையும் பெரும்பொழுதாக காட்டுறதுண்டு ஒவ்வொரு பெரும் பொழுதுக்கும் இரண்டு மாதங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது இளவேனீர் காலம் சித்திரை வைகாசி முதுவேனீர் காலம் ஆணி ஆடி கார்காலம் ஆவணி புரட்டாசி குளிர்காலம் ஐப்பசி கார்த்திகை முன்பணி காலம் மார்கழி தை பின்பணி காலம் மாசி பங்குனி இந்த மாதிரி மாதிரி ஒரு வருடத்துடைய கூறுபாடு ஆறு பெரும் பொழுதுகள் அப்படின்னு சொல்றாங்க வேனீர் காலம் அப்படிங்கறது வெயில் காலம் கார்காலம் அப்படிங்கறது மழைக்காலம் முன்பணிக்காலம் அப்படின்னு சொல்லக்கூடியது மாலை நேரத்துக்கு பின்னாடி பனி விழுற காலத்தை தான் நாம முன்பணிக்காலம் அப்படின்னு சொல்லுவோம் பின்பணிக்காலம் அப்படிங்கறது காலை வேளையில பனி விழக்கூடிய காலத்தை பின்பணிக்காலம் அப்படின்னு சொல்லுவாங்க சிறுபொழுது அப்படிங்கறது ஒரு நாளினுடைய கூறுபாடு இதுவும் ஆறு வகை வைகை காலை நண்பகல் ஏற்பாடு மாலை யாமம் ஒவ்வொரு சிறுபொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது வைகரை இரவு இரண்டு மணியிலிருந்து காலை 6:00 மணி வரைக்கும் காலை நேரம் என்கிறது காலை 6:00 மணியிலிருந்து பகல் 10 மணி வரைக்கும் நண்பகல் அப்படிங்கறது பகல் 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை ஏற்பாடு பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6:00 மணி வரை மாலை மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10 மணி வரை யாமம் இரவு 10 மணியிலிருந்து இருந்து இரவு 2 மணி வரைக்கும் இப்படி ஒரு நாளினுடைய கூறுபாடுகளை சிறுபொழுதா வகைப்படுத்தியுள்ளனர் அடுத்ததா கருப்பொருட்கள் ஒவ்வொரு நிலத்திலயும் அந்த நிலத்தைச் சார்ந்து வாழக்கூடிய உயிரினங்களையும் பொருட்களையும் கருப்பொருட்கள் அப்படின்னு சொல்லி அழைக்கிறாங்க இந்த கருப்பொருட்கள் 14 வகை இதுல மக்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் அப்படின்னு சொல்லி ரெண்டா பிரிப்பாங்க இது பொதுவா மக்கள் அப்படின்னும் சொல்றது உண்டு அப்படி சொன்னா 13 வகையா சுட்டிக்காட்டுவாங்க தெய்வம் மக்கள் உணவு ஊர் நீர் மரம் பூ பறவை விலங்கு பறை யாழ் பண் தொழில் இதை கருப்பொருட்கள் அப்படின்னு சொல்லுவாங்க ஐந்திணைக்குமான கருப்பொருட்களை ஒரு அட்டவணையா உங்களுக்கு இந்த பதிவுல கொடுக்கிறேன் அடுத்ததா உரிப்பொருள் ஒவ்வொரு நிலத்துல வாழக்கூடிய மக்களுடைய ஒழுக்கத்தை உரிப்பொருளா சுட்டிக்காட்டுறாங்க குறிஞ்சிக்கு புணர்தலும் புணர்தல் நிமித்தமும் முல்லைக்கு இருத்தலும் இருத்தல் நிமித்தமும் இருத்தல் அப்படிங்கறது காத்திருத்தல் குறிக்கும் மருதம் ஊடலும் ஊடல் நிமித்தமும் நெய்தல் இறங்கலும் இறங்கல் நிமித்தமும் பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும் இதுவரைக்கும் நம்ம பார்த்தது ஐந்திணை பகுப்பு முறையில பண்பாட்டுக் கூறுகள் சார்ந்த நில அமைப்பு முறையை பார்த்தோம் அடுத்ததா நிலவியல் எல்லை நிலவியல் எல்லை அப்படிங்கறது அதிகாரம் சார்ந்தது அப்படின்னு சொல்லி நான் ஏற்கனவே சொன்னேன் அந்த வகையில நிலவியல் ஒரு நில எல்லையுடைய அமைப்புல அடங்காது எதனால அப்படின்னா அரசர்கள் மாறிக்கிட்டே இருக்கலாம் ஒரு இடத்தை ஆட்சி செய்யக்கூடிய அரசர்கள் மாறிக்கிட்டே இருக்கலாம் இல்லைன்னா அவங்களுடைய எல்லையை விரிவுபடுத்திக்கிட்டே இருக்கலாம் இதனால நிலவியல் எல்லை வந்து நிரந்தரமானது கிடையாது பேரரசர் சிற்றரசர் குறுநில மன்னர்கள் இப்படின்னு சொல்லிட்டு அவங்களுக்கு ஏற்றார் போல நில அமைப்புகள் மாறுபட்டு அமையும் இந்த அடிப்படையில விடுதலைக்கு முன்னாடி நம்ம பார்த்தோம் அப்படின்னா நாம மாகாணங்கள்ல வாழ்ந்துட்டு இருந்தோம் இருக்கக்கூடிய இடங்களை மாகாணங்களை பிரிச்சு வச்சிருந்தாங்க ஆனா விடுதலைக்கு அப்புறமா மக்கள் பேசக்கூடிய மொழியின் அடிப்படையில மாநிலங்களா பிரிஞ்சு வாழ ஆரம்பிச்சாங்க இதைத்தான் நம்ம நிலவியல் எல்லை அப்படின்னு சொல்லுவோம் நிலத்தைப் பொறுத்துதான் அங்க இருக்கக்கூடிய மக்களுடைய வளமும் அமைஞ்சிருக்கு அந்த வகையில தன்னுடைய நிலத்தை பாதுகாக்குறதுக்காக வேல் எடுத்து பகை மன்னர்களுடைய போரிட்ட முப்பாட்டனான முருகனை இன்னைக்கு தமிழ் கடவுளா வணங்கிட்டு இருக்கோம் நீரினை தேக்கி கல்லனை அமைச்சு அதன் மூலமா விவசாயத்தை பெருக்கின கரிகாலச் சோழன் ஆயிரம் ஆண்டுகள் சிறப்புடைய சிற்பத்தால தஞ்சை பெரியார் கோவில் உண்டு பண்ணிய அருண்மொழி சோழன் இப்படி தான் கிட்ட இருக்கக்கூடிய நிலத்தைக் கொண்டு தங்களுடைய வளங்களை பெருக்கிக் கொண்டனர் அன்னைக்கு வாழ்ந்த மக்கள் நிலத்தை மட்டுமே தங்களுடைய போதும் பொருளாகக் கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள் போருக்காகவும் பொருண்மையத்துக்காகவும் தங்களுடைய நிலங்களை விட்டு இடம்பெயர்ந்து வாழக்கூடிய சூழலும் ஏற்பட்டுச்சு அரசு மாற்றத்தாலும் ஆட்சி மாற்றத்தாலும் தங்களுடைய நிலத்தை மாற்றிக்க கூடிய சூழல் ஏற்பட்டுச்சு தமிழர்களுக்கு இதனால அவங்களுடைய பலம் முழுவதுமா பாதிக்கப்பட்டுச்சு தங்களுக்கான நிலங்கள் பறிக்கப்பட்ட தங்களுடைய வளங்களும் அதனோடே போயிரும் அப்படின்னு புரிஞ்சுகிட்ட தமிழ் மக்கள் நாடு அப்படிங்கறது தங்களுக்கான அறன் அப்படின்னும் அந்த அறன் இல்ல அப்படின்னா நம்மளுக்கான பொருட்கள் எல்லாத்தையுமே நாம இழக்க நேரிடும் அப்படிங்கறதையும் உணர்ந்துகிட்டு தன்மானத்தோடையும் தன் உரிமையோடையும் போராட ஆரம்பிச்சாங்க தாங்கள் வாழ்ந்த நிலத்துக்காக அடுத்ததா ஐந்திணை அடிப்படையில சூழலியலை பார்க்கலாம் முதல்ல குறிஞ்சி குறிஞ்சி நிலத்தினுடைய அகப்பொருள் தலைவனும் தலைவியும் கண்டு கூடுவது இதனை அதனுடைய உரிப்பொருளான புணர்தலும் புணர்தல் நிமித்தமும் அப்படிங்கறது தெளிவுபடுத்தும் புணர்தல் அப்படிங்கறது கூடுதல் அப்படிங்கிற பொருளை உணர்த்தும் தலைவனும் தலைவியும் சந்திப்பதற்கு ஏதுவான குளிர் காலத்தையும் முன்பணி காலத்தையும் பெரும் பொழுதாகவும் யாமத்தை சிறுபொழுதாகவும் இந்நிறத்துக்குரிய பொழுதுகளாக வகுத்துள்ளனர் அடுத்ததா நம்ம பார்க்கக்கூடியது முல்லை முல்லை அப்படிங்கறது காடும் காடு சார்ந்த இடத்தையும் குறிக்கும் முல்லையினுடைய உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் இருத்தல் அப்படிங்கறது காத்திரு தலைவன் வருகைக்காக தலைவி காத்திருக்கக்கூடிய நிகழ்வுகளை அதிகமா முல்லை நிலம் பேசும் தலைவன் வினை முடித்து வரான் வினை முடித்து வரக்கூடிய தலைவன் கார்காலத்தில் வரான் கார்காலம் நீர்வளம் மிகுந்ததாகவும் அதனால உணவு வளம் மிகுந்தும் காணப்படும் இதனால விலங்குகளும் பறவைகளும் தங்களுடைய துணையோடு ரொம்ப சந்தோஷமா திரிஞ்சிட்டு இருக்கும் அதுமட்டும் இல்லாம கார்காலத்துடைய மாலை பொழுதுல முல்லை மலர்கள் மலர்ந்து அதனுடைய மனம் எங்கும் பரவி இருக்கும் இந்த நிகழ்வுகள் எல்லாம் தலைவனை தலைவிகிட்ட சக்கரமாக கொண்டு வந்து சேர்க்கும் அப்படின்னு சொல்றாங்க அதனாலதான் முல்லை நிலத்துக்குடைய பெரும் பொழுதா கார்காலத்தையும் சிறுபொழுதா மாலை நேரத்தையும் பகுத்துள்ளனர் அடுத்ததா மருதம் வயலும் வயல் சார்ந்த இடத்தையும் மருத நிலம் அப்படின்னு சொல்றாங்க மருதத்துக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் ஊடல் அப்படிங்கறது சின்ன சின்ன சண்டையை குறிக்கும் இந்நிலத்துடைய பெரும் பொழுது ஆறு பெரும்பொழுதையும் சொல்றாங்க சிறுபொழுது வைகரை பொழுதை சொல்றாங்க எதனாலன்னு பார்க்கலாம் தலைவன் பரத்தையோட ஆடல் பாடல்கள் சந்தோஷமா இருந்துட்டு வைகரைப் பொழுதுல வீட்டுக்கு வரான் தலைவனுடைய தவறை தெரிந்து கொண்ட தலைவி அவனை வீட்டுக்குள்ள விடாம வெளியிலேயே நிக்க வைக்கிறாள் தலைவனும் தனக்கு தெரிந்த மாதிரி தலைவியை சமாதானப்படுத்த நினைக்கிறான் ஆனா தலைவனுடைய தவறை வேற யாரும் பார்த்திடக்கூடாது அப்படிங்கறதுக்காக வைகரைப் பொழுதிலேயே தலைவனை தன்னுடைய வீட்டுக்குள்ள அனுமதிக்கிறாள் தலைவி இந்த மாதிரி தலைவனுக்கும் தலைவிக்குமான ஊடல் வைகரைப் பொழுதுல நிகழும் யாரும் காணாதவாறு அதனாலதான் மரத்துக்குடைய சிறுபொழுதா வைகரைப் பொழுது சொல்றாங்க தலைவன் தவறு செய்றது அப்படிங்கறது இயல்பான ஒன்று அதனாலதான் இதனுடைய பெரும் பொழுதா ஆறு பொழுதுகளையும் பகுத்துள்ளனர் சிறுபொழுதா வைகரையை சொல்றாங்க அடுத்ததா நம்ம பார்க்கக்கூடியது நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடத்தையும் நெய்தல் அப்படின்னு சொல்றாங்க இந்நிலத்துக்குரிய உரிப்பொருள் இரங்களும் இரங்கள் நிமித்தமும் இரங்கள் அப்படின்னா இரக்கம் நெய்தல் நிலத்தினுடைய பெரும் பொழுதா ஆறு பெரும் பொழுதுகளையும் சொல்லுவாங்க சிறுபொழுதா ஏற்பாடு எதனால அப்படின்னா கதிரவன் மறையக்கூடிய பொழுதுல பறவைகள் எல்லாம் தங்களுடைய துணையை பார்க்கிறதுக்காகவும் தன்னுடைய குஞ்சுகளை பார்க்கிறதுக்காகவும் ஆர்வத்தோடையும் ஏக்கத்தோடையும் பறந்து போகுமாம் இப்படி தனிமை நிலையில் இருக்கக்கூடிய உணர்ச்சிகளைப் பற்றி அதிகமா பேசும் நெய்தல் திணை அதனாலதான் இதனுடைய சிறுபொழுதா ஏற்பாட சொல்றாங்க பெரும்பொழுதா ஆறு பொழுதினையும் சொல்றது உண்டு தன்னுடைய துணையையும் குஞ்சுகளையும் பார்க்கப் போகக்கூடிய அந்த நிலையானது இரக்கம் கொள்ற மாதிரி இருக்கும் அதனாலதான் இதனுடைய உரிப்பொருளாகவும் இரங்களை வைத்திருக்கிறாங்க கடைசியா பாலை நிலத்துடைய சூழலை பார்க்கலாம் அகப்பொருள் நூல் பொருள்கள் எல்லாம் அதிகமா விரித்து பேசப்படக்கூடியது பாலைத்திணைதான் இந்த பாலைத்திணையை நடுநிலைத்தினை அப்படின்னும் சொல்லுவாங்க பாலைத்திணையினுடைய உரிப்பொருள் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் இதனுடைய பெரும் பொழுது இளவேனீர் காலம் முதுவேனீர் காலம் பின்பணிக்காலம் அதாவது வெயில் காலத்தை சொல்றாங்க சிறுபொழுது நண்பகல் நேரம் பாலை நிலம் அப்படிங்கறது வறண்ட நிலமா இருக்கக்கூடியது அங்க வெயில் காலம் அதிகமா இருக்கிறதுனாலயும் நண்பகல் நேரத்துலயும் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சா கூட சில உயிர்களால அந்த வெப்பத்துடைய கொடுமையா துன்பத்தை மட்டும்தான் அனுபவிக்க நேரும் அதே மாதிரிதான் தலைவன் தலைவி சந்தோஷமா வாழ நினைத்தாலும் கூட அவங்களுக்கு இடையே இருக்கக்கூடிய பிரிவு அவங்களுக்கு மேன்மேலும் துன்பத்தை ஏற்படுத்தக் கூடியதா இருக்கும் இந்த ரெண்டையும் மையமிட்டு சொல்றதுனாலதான் பாலை நிலத்தினுடைய உரிப்பொருளா பிரிதலை சொல்றாங்க ஐந்திணைக்கான பகுப்பு முறையையும் ஐந்திணைக்குடைய சூழலையும் இந்த பகுதியில பார்த்தோம் தமிழர்களுடைய திணை பகுப்பு முறையானது அவங்களுடைய பண்பாட்டுக் கூறுகள் அடிப்படையில்தான் அமையும் திணை பகுப்பு முறையை வச்சுதான் தமிழர்களுடைய வரலாற்றையும் பண்பாட்டு முறையையும் அவங்களுடைய வாழ்வியல் கூறுகள் அனைத்தையுமே அறிஞ்சுக்க முடியும் இந்த பதிவு இதோட முடிவு பெறுது மீண்டும் ஒரு தமிழ் உரையாடலுடன் சந்திக்கிறேன் நான் தமிழ்நதி நன்றி
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact