அனைவருக்கும் வணக்கம். யூஜி தமிழ் வகுப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன். இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது இணைய நூலகம். நூலகம் என்பது நம் அறிவை வளர்த்திருக்கக்கூடிய பல்வேறு விதமான நூல்களையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்கக்கூடிய ஒரு இடமாக இருக்கின்றது. இது பொது அமைப்புகள் மூலமாகவும் நிறுவனங்கள் அல்லது தனி நபர்களாலும் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த இணைய நூலகம் அப்படின்றது என்னன்னு பாத்தீங்கன்னா புத்தகங்கள் பத்திரிக்கைகள் ஆடியோ வீடியோ பதிவுகள் மின்னணு முறையில் அணுகக்கூடிய பிற ஆவணங்கள் இது எல்லாத்தையுமே டிஜிட்டல் பொருட்களினுடைய தொகுப்பாக விளங்கக்கூடியதுதான் இந்த இணைய நூலகம். இத டிஜிட்டல் நூலகம் டிஜிட்டல் களஞ்சியம், ஆன்லைன் நூலகம், சுவரிலா நூலகம் அப்படின்னு பல பெயர்கள்ல சொல்றாங்க. இந்த இணைய நூலகங்கள்ல் கிடைக்கக்கூடிய புத்தகங்களை பிடிஎப் புக் அதாவது மின்நூல் அப்படின்னும்ஹடிmம்l புக் மீயுரை நூல் பிளிப் புக் புரட்டும் நூல் ஈபப் புக் மென்னூல் மொபி புக் கிண்டில் நூல் அப்படின்னு பல வடிவங்கள்ல நமக்கு இந்த இணைய நூலகங்கள்ல் புத்தகங்கள் கிடைக்குது. இது எல்லாத்தையுமே நம்ம தரவிரக்கம் செஞ்சு வச்சுக்கிட்டு தேவையான நேரங்கள்ல வாசிக்க முடியும். அடுத்து தமிழ்ல இருக்கக்கூடிய மின் நூலகங்கள் சிலதை பார்க்கலாம். ஒன்னு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ரண்டு மதுரை திட்டம் மூணு தமிழ் இணைய கல்விக்கழக மின்னூலகம் நாலு தமிழ் இணையம் மின்னூலகம் அஞ்சு அண்ணா நூற்றாண்டு மின்னூலகம் ஆறு தமிழ் மரபு அறக்கட்டளை ஏழு நூலகம் டாட்நெட் எட்டு சென்னை லைப்ரரி ஒன்பது திறந்த வாசிப்பகம் முதல்ல ரோஜாமுத்தையா ஆராய்ச்சி நூலகம் இது வந்து 1994ல சிகாகோ பல்கலைக்கழகத்தால தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. இந்த நூலகம் தொடர்ச்சியா பழைய நூல்களையும் ஆய்வேடுகளையும் ஆய்விதழுகளையும் மின்னூலாக்கம் செஞ்சு இறக்குறைய 3ூன் லட்சம் நூல்கள் இங்க இருக்கு. இது இப்போ 2025லதான் இணைய நூலகமாகவும் மாற்றப்பட்டிருக்கு. அடுத்து மதுரை திட்டம் இது வந்து 1998ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் எந்தவித அரசாங்கமோ இல்ல தனியார் நிறுவனத்தினுடைய உதவி இல்லாம எந்த வணிக நோக்கமும் இல்லாம தன்னார்வு தொண்டர்களுடைய சேவையினால உருவாக்கப்பட்டது. இதோட தலைவர் சுவிட்சர்லாந்தில் இருக்கக்கூடிய தமிழரான கூ கல்யாணசுந்தரம். இதுல வந்து ஆயிரக்கணக்கான நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு கிடைக்குது. அடுத்து தமிழ் இணைய கல்விக்கழக மின்னூலகம். தெற்காசிய மொழிகளலயே மிகப்பெரிய மின்னூலகமாக இது இருக்கு. இந்த நூலகத்தில 45000 நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டிருக்கு. 31000 பருவை இதழ்களும் 37000 ஓலைச்சுவடிகளும் மின்னாக்கம் செய்யப்பட்டிருக்கு. இதுல இலக்கண இலக்கிய நூல்கள் ரோமன் வரிவடிவ தமிழ் நூல்கள் அகராதிகள் கலைச்சொர் தொகுப்புகள் ஒளிக்காட்சி தொகுப்புகள் அப்படின்ற வகையில் நிறைய இருக்கு. அதுமட்டுமி இல்லாம தமிழர்களுடைய சமய பண்பாட்டை விளக்கக்கூடிய ஒளி ஒளி காட்சிகளும் இதுல அடங்கி இருக்கு. அதோட உள்ளடக்க தமிழ் மின்னுலகம் அப்படின்ற பெயரில ஒரு தனி பிரிவு அமைக்கப்பட்டு பார்வை திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்த வகையில ஒரு மின்னுலக பகுதி வந்து அமைக்கப்பட்டிருக்கு. அடுத்து தமிழ் மரபு அறக்கட்டளை. இந்த தமிழ் மரபு அறக்கட்டளை என்றது ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம். இது 2001ல தொடங்கப்பட்டுச்சு. ஓலைச்சுவடிகள் இலக்கியங்கள் என பல்லாயிரக்கணக்கான நூல்களையும் இதழ்களையும் கொண்ட ஒரு மின்னூலகமாக இது இயங்கி வருது. அடுத்து நூலகம்.நெட் இது வந்து ஈழ தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த தளத்தில மலையக ஆவணகம், இஸ்லாமிய ஆவணகம், இதழகம், வாசகசாலை, சுவடியகம், நிறுவனங்கள், ஆளுமைகள் அப்படின்ற பல உட்பிரிவுகள்ல வாசகர்கள் எளிமையாக தனக்கு தேவையான நூல்களை கண்டறியும் வகையில பகுத்து வச்சிருக்காங்க. அடுத்து சென்னை மின் நூலகம். இது வந்து கோ சந்திரசேகரன் அப்படின்றவர் 2006 செப்டம்பர் மாசம் உருவாக்குறாரு. இந்த நூலகத்தில சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரைக்கும் பல நூல்கள் இருக்கு எல்லாமே ஒருங்குறி யூனிகோடு சொல்லக்கூடிய அந்த ஒருங்குறியில் இருக்கறதுனால எல்லாருக்கும் எளிமையாக பயன்படக்கூடியதாக இதுல இருக்கற நூல்கள் கிடைக்குது. அடுத்து தேவாரம்.ஜி ஆர்ஜி அப்படின்ற இணையதலை பக்கத்தில 1254 தலைப்புகள்ல 18246 தேவார பாடல்கள் வந்து வெளியிடப்பட்டிருக்கு. இதை வந்து தர்மபுர ஆதினத்துடைய விருப்பத்திற்கு ஏற்ப திரு மாரவன் புலவ சச்சிதானந்தன் திரு முருகவேல் சச்சிதானந்தன் இவங்களுடைய அறிய முயற்சியால 2006 தைப்பொங்கல் அன்னைக்கு இது வெளியிடப்பட்டுச்சு. இந்த மாதிரி தமிழக அரசால தமிழகத்தில் இருக்கக்கூடிய பல பொது நூலகங்கள் மின்மயமாக்கப்பட்டிருக்கு. சான்றா கன்னிமாரா நூலகம் தேவநேய பாவாணர் நூலகம் தஞ்சையில் இருக்கக்கூடிய சரஸ்வதி மகால் நூலகம் தமிழ் பல்கலைக்கழக நூலகம் குபகோணத்தில் இருக்கக்கூடிய அரசினர் கலை கல்லூரி நூலகம் போன்ற புகழ் வாய்ந்த நூலகங்கள் வந்து கணினி மயமாக்கி அந்த அதில இருக்கக்கூடிய நூல்கள் வந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி நூல்களை பாதுகாக்குறது மட்டும் இல்லாம நூலகங்களாக இருக்கிறது மட்டும் இல்லாம எல்லா நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்கள் உட்பட எல்லா நிறுவனங்களும் இன்னைக்கு தனக்கான ஒரு இணையதள பக்கத்தை உருவாக்கி வச்சிருக்காங்க இப்ப ஆராய்ச்சி நிறுவனங்களாக இருக்கும் பட்சத்தில அவைகள் தாங்கள் வெளியிட்ட நூல்களை பற்றியான விவரங்களை வந்து தன்னுடைய இணையதல பக்கத்தில வந்து வெளியிடுறாங்க இந்த மாதிரி நூல் விற்பனை அகம் நூல் அங்காடிகள் கூட இன்றைய இன்றைய காலகட்டத்தில வந்து பல்கி பெருகி இருக்கு இந்த காந்தலகம் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு அங்காடி நூல் அங்காடி இது வந்து மாரவன் புலவை அந்த சச்சிதானந்தம் சசிரேகா பாலசுப்பிரமணியன் இவங்களுடைய முயற்சினால 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுச்சு. இது உலகின் மிகப்பெரிய தமிழ் நூல் அங்காடியாக இருக்கு. இதுல வந்து 40ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மற்றும் சிங்கள நூல்கள் வந்து இடம்பெற்றிருக்கு. இதே மாதிரி பணுவல் மரினா புக்ஸ் போன்ற பல புத்தக விற்பனை அங்காடிகளும் இணையதளத்தில உருவாகி இருக்கிறத நம்மளால பார்க்க முடியுது. அடுத்து மின்னூலக பயன்பாட்டினால வரக்கூடிய நன்மைகளையும் தீமைகளையும் நம்ம பார்க்கலாம். முதல்ல இதனுடைய பயன்பாடுகள் அதாவது நன்மைகளை பத்தி பார்க்கலாம். எவ்வளவு பெரிய பக்கங்கள் கொண்ட புத்தகங்களாக இருந்தா கூட அதை கையடுக்க வடிவுல சுருக்கிட முடியுது. அதே மாதிரி எளிமையாக எங்க வேணாலும் எடுத்துச் சென்று பயன்படுத்த முடியற அளவுக்கு இந்த புத்தகங்கள் இந்த மின்னூல்கள் இருக்கு. அந்த மாதிரி உலகத்துல எந்த பகுதியில இருந்தா கூட அந்த நூல்களை நம்ம நேரடியா அங்கதான் போய் படிக்கணும்ன்ற தேவையில்லாம நம்ம வீட்டில இருந்தே அந்த புத்தகங்களை தரவிரக்கம் செஞ்சு நம்மளால படிக்க முடியுது. அதே மாதிரி அச்சிட்டு வெளியிடப்பட்ட புத்தகங்கள் நிறைய இந்த கரையான்களனால கால ஓட்டத்தில அழிந்து போகறதுக்கான வாய்ப்புகள் மிகுதியாக இருக்கு அதை மின்னூலாக்கம் செய்யும் பொழுது அந்த நூல்கள் அழியாமல் அப்படியே பாதுகாக்கப்படுகிறது. அதே மாதிரி ஒரு நூல வந்து கடன் வாங்கி படிக்கணும் அப்படின்ற அவசியம் வந்து இந்த மின்னுலகத்துல வந்து கிடையாது. அதே மாதிரி இன்னொரு விஷயம் என்னன்னா ஒரே நூலுக்கு எழுதப்பட்ட பல்வேறு உரையாசிரியர்களுடைய உரைகளை கூட நம்மளால ஒரே நேரத்தில இந்த மின்னுலகத்தில வாசிக்க முடியும். இந்த மாதிரி இதனுடைய பயனுக்கு பல காரணங்களை நம்மளால சொல்ல முடியும். அப்ப அப்ப இதனுடைய தீமைக்கு என்னென்ன காரணங்கள் இருக்கு அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த மின்னூலாக வாசிக்கக்கூடிய இன்றைய தலைமுறை குழந்தைகள் அல்லது இளம் தலைமுறை இன்றைக்கு மின்னூள்களாக வாசிப்பவர்கள் வைக்கக்கூடிய மிகப்பெரிய குற்றச்சாட்டு புத்தகங்களை தொட்டு அதை உணர்ந்து வாசிக்கக்கூடிய அனுபவத்தை அவர்கள் இழைக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த புத்தகங்களை மின்னூலாக சேமிக்கும் பொழுது பல தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படுகின்றன. அவற்றிற்கு ஏற்ப இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இவற்றை மாற்றங்கள் செய்து பாதுகாக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு இதற்கு ஆகக்கூடிய செலவும் மிகுதியாக உள்ளது என்பது தொழில்நுட்ப வல்லுனர்களுடைய கருத்து. மேலும் புத்தகங்களை வாசிக்கும் பொழுது தொடர்ந்து 100 200 பக்கங்களை நம்மால் எளிமையாக வாசித்து விட முடியும். ஆனால் மின்னூல்களாக வாசிக்கும் பொழுது நம்மால் அந்த அளவிற்கான பக்கங்களை வாசிப்பது என்பது கடினம். இவ்வாறு இந்த மின்னூலகத்தை பயன்படுத்துவதில் மின்னூலாக்கம் செய்து ஒரு நூலை வெளியிடுவதில் பல பல்வேறு நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன. இதுவரை இணையதளத்தில் நூல்கள் எவ்வாறு விற்பனை செய்யப்படுகின்றன அந்த நூல்கள் பழந்தமிழ நூல்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டு நூலகங்களில் பொதுமக்களுடைய பயன்பாட்டிற்கு விடப்படுகின்றன என்பதையும் ஒவ்வொரு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வாறு தனக்கான இணையதல பக்கத்தில் நூல்களை அறிமுகப்படுத்துகின்றன என்பதையும் இந்த இணைய வழியாக வாசிக்கக்கூடிய இந்த நூல்களில் ஏற்படக்கூடிய நன்மைகள் தீமைகள் பற்றியும் பார்த்தோம் இனி அடுத்த வகுப்பில் வேறு ஒரு பாடத்தோடு உங்களை சந்திக்கின்றேன் நன்றி வணக்கம்.
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact