வணக்கம் இன்னைக்கு நாம பார்க்கக்கூடிய பதிவு தமிழர்களின் தொழில்நுட்ப மேலாண்மை தமிழர்களுடைய தொழில்நுட்ப மேலாண்மையை ரெண்டு வகையா பிரிக்கலாம் ஒன்னு மரபு சார்ந்த தொழில்நுட்பம் இன்னொன்று இன்றைய நவீன தொழில்நுட்பம் இந்த ரெண்டு வகைகள் பற்றி விளக்கமா பாக்குறதுக்கு முன்னாடி நம்மளுடைய சேனல் யுஎன் அபிஷியல் கற்போம் தமிழை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க நான் தமிழ்நதி தமிழர்களின் தொழில்நுட்ப மேலாண்மை அதுல முதல் வகையான மரபு சார்ந்த தொழில்நுட்பத்தை பார்க்கலாம் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடங்குற காலம் வரைக்கும் இடைப்பட்ட காலத்தை மரபுச் சார்ந்த தொழில்நுட்பம் அப்படின்னு வரையறுத்துக் கூறலாம் அந்த வகையில மனிதனுடைய அடிப்படை தேவைகள்னு சொல்லக்கூடியது மூன்று விஷயங்கள் உணவு உடை உரையுள் அப்படின்னு சொல்லக்கூடிய இருப்பிடம் இந்த மூன்றின் அடிப்படையில மனிதன் தொழில்நுட்ப வாயிலா எப்படி எல்லாம் வளர்ந்து வந்தான் அப்படிங்கறத தமிழ் இலக்கியங்கள்ல இடம்பெறக்கூடிய கருத்துக்களை சான்றா வைத்து பார்க்கலாம் ஆதிமனிதன் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு தொழில்நுட்பம் தான் துணையாக நின்றுச்சு அந்த வகையில உணவு தேடி அலைஞ்ச ஆதிமனிதன் தன்னுடைய உடல் உறுப்புகளை பயன்படுத்தி கிழங்குகளை தோண்டி சாப்பிடவும் பழங்களை பறித்து சாப்பிடவும் ஆரம்பிச்சான் இதற்கு பயன்பட்ட கற்கருவிகளையும் மரக்கருவிகளையும் அவனுடைய ஆரம்பகால தொழில்நுட்பமா நம்ம சொல்லலாம் அதுக்கு அப்புறமா துரட்டி வில் அம்பு போன்ற பல கருவிகளை பயன்படுத்த ஆரம்பிச்சான் நெருப்பை கண்டுபிடிச்சு அப்புறமா வேட்டையாடி கொண்டு வந்த பொருட்களை நெருப்புல வேக வச்சு சாப்பிட ஆரம்பிச்சான் ஆதிமனிதன் வேட்டைத் தொழிலுக்கு அப்புறமா வேளாண்மை தொழில் மூலமா உணவை உற்பத்தி செஞ்சு சாப்பிட ஆரம்பிக்கிறான் அதுக்கும் ஏர் கலப்பை அப்படிங்கிற உழுக்கருவிகளை பயன்படுத்துறான் குன்றுகளையும் குகைகளையும் காடுகளையும் வாழ்ந்த மனிதன் குடிசை குறும்பை போன்ற வீடு அமைப்பை உருவாக்கி அதுல வாழ ஆரம்பிக்கிறான் ஆரம்பத்துல மர உரிகளையும் இலை தலைகளையும் ஆடைகளா அணிஞ்ச மனிதன் உடை தயாரிச்சு அதையும் பயன்படுத்த ஆரம்பிச்சான் இப்படி தொழில்நுட்பம் கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சது தொல்காப்பியத்திலயும் சரி சங்ககால இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு போன்ற இலக்கியங்கள்ல தமிழருடைய தொழில்நுட்ப சிந்தனைகளும் அவர்களுடைய செயல்பாடுகள் குறித்தும் பல குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த குறிப்புகள் எல்லாத்துக்குமான சான்று ஆதாரமா ஆதிச்சநல்லூர் கொடுமணல் போன்ற இடங்களில் நடைபெற்ற அகலாய்வின் மூலமாக கிடைத்த பொருட்களை நாம கொள்ளலாம் மனிதனுடைய அடிப்படை தேவைகள் மூன்று சொன்னேன் உணவு உடை இருப்பிடம் முதல்ல உணவுக்கான வேளாண்மையில இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பத்தி பார்க்கலாம் உணவு தேடி அலைஞ்ச சமூகம் உணவு உற்பத்தியில இறங்க ஆரம்பிச்சது அதுதான் வேளாண்மை விளைந்த பொருளுக்கு ஏற்ற மாதிரியும் நிலங்களுடைய தன்மையை பொறுத்தும் நிலங்களை பிரிக்க ஆரம்பிச்சாங்க புன்சை அப்படின்னு சொல்லக்கூடிய வன்புலமும் நன்சை அப்படின்னு சொல்லக்கூடிய மென்புலம் மேய்ச்சல் நிலம் அப்படின்னு சொல்லக்கூடிய விடுபுலம் இப்படி நிலங்களை அதனுடைய தன்மைக்கு ஏத்த மாதிரி பிரிக்க ஆரம்பிச்சாங்க வயல்களையும் விலைப்பொருள் அடிப்படையிலயும் நீர் பாசனத்தையும் பிரிச்சு நீர்பாசம் செய்ய ஆரம்பிச்சாங்க அன்றைய காலகட்டத்தில் எட்டுத்தொகை நூல்களும் பத்துப்பாட்டு நூல்களும் விளைந்த நெல் வகைகளா சிலவற்றை சொல்றாங்க தோரை தோப்பி முடந்தை ஐவன நெல் வெண்ணல் அப்படிங்கறது இந்த ஐவன நெல் விளையறதுக்கு அறிவு நீரையும் வெண்ணல் விளையறதுக்கு குளத்தி நீரையும் பயன்படுத்தி இருக்காங்க தமிழர்கள் இதுபோக நிலங்களை பக்குவப்படுத்துறதுக்காகவும் விளைந்த பொருட்களை பாதுகாக்கறதுக்காகவும் அடார் துளர் அப்படிங்கிற கருவிகளை பயன்படுத்தி இருக்காங்க நீரை இறைத்து பாய்ச்சல் ஏத்தம் அப்படிங்கிற முறையையும் பின்பற்றி வந்திருக்காங்க இந்த நிலங்களை பாதுகாக்குறதுக்காக இடுமுள் வேலி வால்முள் வேலி அப்படிங்கிற வேலிகளை இட்டு ஆடு மாடு உள்ள நுழையாதவாறு பாதுகாத்தும் பயிரிட்டு வந்திருக்காங்க நெல் அறியக்கூடியவங்களை நெல் அறிஞர் அல்லனா வெண்நெல் அறிஞர் அப்படின்னு சொல்லி பெயரிட்டு அழைக்கப்பட்டிருக்காங்க நீரை பாய்ச்சுறதுக்கு புதவு மடை மதகு குமிலி அப்படிங்கிற முறைகள் எல்லாம் பயன்படுத்தி இருக்காங்க தமிழர்கள் நீரை தேய்க்க வைக்கிறதுக்காகவும் வெல்லத்தை தடுக்குறதுக்காகவும் அணைகட்டி பயன்படுத்தி இருக்கிறான் சோழ மன்னன் இது மட்டும் இல்லாம வேளாண்மை வளர ஆரம்பிச்சதுக்கு அப்புறமா உள்நாடு மட்டும் இல்லாம வெளிநாடுகளையும் வாணிபம் செய்ய ஆரம்பிச்சாங்க முதல்ல பண்டமாற்று முறையில வாணிபம் செய்ய ஆரம்பிச்ச தமிழர்கள் தான் கொடுக்கக்கூடிய ஏற்றுமதி பொருளுக்கு ஏற்ற வகையில பொற்காசை வாங்கக்கூடிய அளவுக்கு வாணிபத்துல முன்னேற ஆரம்பிச்சாங்க நிலவெளி தாண்டி கடல் வழியாவும் வாணிபம் செஞ்சதுனால அவங்க வாணிபத்துக்காக பயன்படுத்திய படகுகளை பல பெயரிட்டு அழைக்கவும் செஞ்சாங்க அம்பி புனை திமிழ் வங்கம் களம் தோணி அப்படிங்கிற மாதிரி தான் வாணிபத்துக்காக பயன்படுத்திய படகுகளையும் கப்பல்களையும் இதுபோக மீன் பிடிக்கிறதுக்காக பயன்படுத்தப்பட்ட படகுகளையும் பல பெயரிட்டு அழைத்தும் வந்தாங்க தமிழர்கள் யவனர் தந்த வினைமான் நற்களம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும் அப்படின்ட்டு அகநானூற்று பாடல் ஒன்று கூறுது இதுக்கான அர்த்தம் என்ன அப்படின்னா யவனர்கள் பொண்ணை கொடுத்துட்டு கறி அப்படிங்கறது மிளகு மிளகை வாங்கிச் சென்றதா அகநானூற்று பாடல் சொல்லுது அது மட்டும் இல்லாம குதிரைகளை கப்பல்ல கொண்டு வந்து இறக்குமதி செய்ததாவும் மதுரை காஞ்சியில கூறப்படுது இப்படி உணவு தேவைக்காக தொடங்கப்பட்ட வேளாண்மை காலப்போக்குல தொழில்நுட்ப வளர்ச்சியால வாணிபம் அப்படிங்கிற அளவுக்கு முன்னேற ஆரம்பிச்சு வெளிநாடு வரைக்கும் வாணிபம் செய்யக்கூடிய அளவுக்கு தமிழர்கள் வளர ஆரம்பிச்சாங்க அடுத்து இரண்டாவது உரையில் உரையில் அப்படிங்கும் போது கட்டிடங்கள் பத்தி நம்ம சொல்லுவோம் தமிழர்களுடைய தொழில்நுட்பம் கட்டிடத்தில் எப்படி இருந்துச்சு அப்படிங்கறதை பார்க்கலாம் அன்றைய காலத்திலிருந்து இன்றைய காலம் வரைக்கும் கட்டடங்கள்ல மிகப்பெரிய மாற்றங்கள் இருந்துட்டு வருது குடிசை குரம்பை வீடு மனை கோட்டை அரண் மதில் வளமனை கொட்டாரம் இப்படிங்கிற சொற்கள் எல்லாமே கட்டிடத்துக்கு வழங்கக்கூடிய பலவகை சொற்கள் இந்த கட்டிடங்கள்ல இன்னைக்கு இருக்கிற மாதிரியே வாயில்கள் இருந்துச்சு கதவுகள் அறை இடைக்களி முற்றம் இது எல்லாமே இருந்துச்சு இந்த கட்டிடத் தொழில்ல ஈடுபடக்கூடியவங்கள கொள்ளர் கொத்தர் தச்சர் அப்படின்னு சொல்லிட்டு பெயரிட்டு அழைச்சாங்க கட்டிடங்கள் இட்டிகை அப்படின்னு சொல்லப்படக்கூடிய சுடுமண் செங்கல் கொண்டு கட்டப்பட்டதை அகழ்வாராய்ச்சி மூலமாக கிடைக்கக்கூடிய சான்றுகள் கொண்டு நம்ம அறியலாம் இதுபோக அன்றைய கட்டிடங்களுடைய சுவர்கள் ரொம்ப வலிமையா இருந்ததாகவும் அங்கு இருக்கக்கூடிய கதவுகளுக்கு கிரிச்சிடா வண்ணம் பூசப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுது இன்னைக்கு நாம கதவுகளுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் பூச்சி மாதிரியான ஒரு பூச்சி அதுபோக வான்த்தோய் மாடம் வேயா மாடம் அப்படின்னு சொல்லக்கூடியது வான்தோய் மாடம்ங்கிறது நாம கேள்விப்பட்டிருப்போம் முல்லை நிலத்துல தலைவி தலைவனுக்காக காத்து காத்திருக்கும் போது ஏழு நிலை மாடத்துல விளக்கு ஏற்றி தலைவன் வருகைக்காக காத்திருப்பா அப்படின்னு நம்ம சொன்னோம் அதுதான் வான்த்தோய் மாடம் ஏழு நிலை மாடம் அப்படின்னு சொல்லுவாங்க வேயா மாடம் அப்படிங்கறது என்ன அப்படின்னா நிலாமுற்றம் வீட்டினுடைய நடுப்பகுதியில நிலா வெளிச்சம் உள்ள வர மாதிரியான ஒரு அமைப்பு கொடுத்திருப்பாங்க இந்த நிலாமுற்றத்துல மழைநீர் விழும்போது அந்த மழைநீரானது அம்பணம் அப்படின்னு சொல்லக்கூடிய சுறாமையின் வடிவிலான ஒரு குழாய் அமைப்பின் மூலமா வெளியேற்றப்படுது அப்படின்னு சொல்றாங்க இந்த மாதிரி பல வடிவமைப்பும் பல தொழில்நுட்பமும் நிறைந்ததா அன்றைய கட்டிடக்கலை இருந்துச்சு இந்த கட்டிடங்கள்ல வசதிக்கு ஏத்த மாதிரி அரசனும் அரசியரும் தங்குறதுக்கு வசதியான படுக்கைகள் மற்றும் இருக்கைகள் போன்ற அமைப்புகளும் இருந்துச்சு இது மட்டும் இல்லாம யானை பூ நீர் சொரிவது போன்ற வேலைப்பாடுகள் கொண்ட நிலைக் கதவுகளும் இருந்துச்சு இன்னைக்கு இருக்கக்கூடிய நிலைக் கதவுகளிலும் இந்த மாதிரியான டிசைன்கள் இருக்கிறதை நம்ம பார்க்கலாம் அப்புறம் அரசர்களுக்கு தேவையான தேர்கள் எல்லாம் செய்யப்பட்டது போன்று குழந்தைகள் விளையாடுவதற்காகவும் சிறு தேர்களை செஞ்சு வச்சிருந்தாங்க அன்றைய தமிழ் மக்கள் தமிழர்களுடைய கட்டிடத் தொழில்நுட்பத்தை தொழில்நுட்பத்துக்கான ஒரு சான்றா மாமலபுரம் தஞ்சை பெரிய கோவில் இதெல்லாம் நம்ம சொல்லலாம் சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள்ல மதுரையுடைய நகர சிறப்பை சொல்லும் பொழுது சந்தி சதுக்கம் அம்பலம் மன்றம் கடை வீதிகள் இது எல்லாத்தையுமே ஆசிரியர் சொல்லி இருப்பாரு அதுமட்டும் இல்லாம அரங்கேற்றுக் காதை பகுதியில ஆடல் அரங்கம் அமைக்கப்பட்ட முறையையும் சொல்லி இருப்பாங்க இது எல்லாமே கட்டிடக்கலையோட தொழில்நுட்பத்தை பறைசாற்றுற மாதிரி இருக்கும் அடுத்ததா மூன்றாவது அதாவது உடை உடைக்கு நெசவுத் தொழிலை நம்ம சொல்லலாம் நெசவுத் தொழில்நுட்பம் இன்னைக்கு மாதிரியே அன்னைக்கும் ஆடைகள்ல பல வகைகள் இருந்துச்சு பல வண்ணங்கள்ல இருந்துச்சு பல வடிவங்களும் கொடுக்கப்பட்டிருந்துச்சு பருத்தி ஆடைகள் மட்டும் இல்லாம பட்டு ஆடைகளையும் பயன்படுத்தி இருக்காங்க மக்கள் பருத்தி பட்டு தோல் மயிர் போன்ற பொருட்களை மூலப்பொருட்களைக் கொண்டு ஆடைகள் தயாரிச்சு பயன்படுத்திட்டு வந்திருக்காங்க இந்த தொழில்ல ஈடுபட்டவர்களை காருகர் அறுவையர் கைக்கோளர் சேனியர் சோழியர் அப்படின்னு சொல்லிட்டு காலவாரியாகவும் அவங்க இருக்கக்கூடிய பகுதிவாரியாவும் ஒவ்வொரு பேரிட்டு அழைச்சிருக்காங்க இதை சிலப்பதிகாரம் சொல்லுது பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டுநுண் வினைஞர் காருகர் இருக்கையும் அப்படின்னு சொல்றாங்க இது மூலமாதான் அங்க அந்த தொழில்ல ஈடுபட்டவங்களை இந்த பேரிட்டு அழைச்சிருக்காங்க அப்படிங்கிறதை நம்ம அறியலாம் பருத்தியிலிருந்து நூல் எடுத்து தந்தவர்கள் பெண்கள் அப்படின்னும் அந்த பெண்களை பருத்திப் பெண்டீர் அப்படின்னும் அழைச்சாங்கன்னு சொல்லப்படுது இது மட்டும் இல்லாம அந்த பெண்களுக்கு துணை யாரும் இல்லாத பொழுதுல அந்த பெண்கள் இரவு நேரத்துல சிறு விளக்கை ஏற்றிக்கொண்டு பருத்தியில நூல் எடுப்பாங்களாம் அந்த பெண்களை ஆளில் பெண்டீர் அப்படின்னும் அழைச்சு வந்திருக்காங்க பருத்தி ஆடை மட்டும் இல்லாம பட்ட ஆடைகளையும் பயன்படுத்திட்டு வந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா இந்த பட்ட ஆடைகள் சீனவரவு அப்படின்னு சொல்லப்படுது இது மட்டும் இல்லாம நீலக்கச்சை பல் நிறத்துக்கள் அப்படின்னு சொல்லக்கூடிய முறைகள் எல்லாம் இருந்திருக்கு அதாவது இன்னைக்கு இருக்கிற மாதிரியே பல வண்ணங்கள்லயும் பல வடிவங்களையும் ஆடைகள் எல்லாம் இருந்திருக்கு இந்த ஆடைய வகைகளா கச்சு தானை போர்வை புடைவை குப்பாயம் மீக்கோள் பாவாடை இந்த வகைகள் எல்லாம் சொல்றாங்க இதுபோக எலிமயிரால் செய்யப்பட்ட போர்வையை எலிமயிர் போர்வை அப்படின்னு சொல்றது உண்டு அன்னைக்கும் தையல் தொழில்ல ஈடுபட்டிருக்காங்க இந்த தையல் தொழில்ல ஈடுபட்டவர்களை துண்டக்காரர் அப்படின்னு சொல்லி பெயரிட்டு அழைச்சிருக்காங்க இதெல்லாம் மரபுச் சார்ந்த தொழில்நுட்பம் மனிதனுடைய அடிப்படை தேவைகளான உணவு உடை உரையில் இந்த மூணுலையும் அவனுடைய தொழில்நுட்பம் எப்படி இருந்துச்சு அப்படிங்கறதுதான் நம்ம மரபுச் சார்ந்த தொழில்நுட்பத்தில் பார்க்கிறோம் இப்ப இரண்டாவது வகையான இன்றைய நவீன தொழில்நுட்பம் நவீன தொழில்நுட்பத்தை பார்க்கும்போது எல்லைக்குள்ள வராது ஏன்னா இன்றைய தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளர்ந்திருக்கு அதனால ஏதாவது ஒரே ஒரு தலைப்பை எடுத்துக்கிட்டு நம்ம பேசலாம் தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் தகவல் பரிமாற்றம் இன்றைய காலத்துக்கு ஏத்த மாதிரி மாறிக்கிட்டும் வளர்ந்துகிட்டும் வந்துகிட்டு இருக்கு ஆரம்பத்துல ஓசைகள் மூலமாவும் ஓவியங்கள் மூலமாகவும் தன்னுடைய தகவல்களை பரிமாற்றிக் கொண்ட தமிழர்கள் இன்னைக்கு செயற்கை கோள் மூலமா தகவல்களை பரிமாறிக் கொள்ற அளவுக்கு வளர்ந்து வந்திருக்காங்க இன்றைக்கு மனிதர்களால தனியா வாழ முடியாது அப்படிங்கிற ஒரு சூழல்ல இருக்கோம் ஒருத்தருக்கொருத்தர் கண்டிப்பா ஏதாச்சும் ஒரு தகவல்களை பரிமாறிக்கிட்டோ இல்லனா உரையாடிக்கிட்டோ இருக்க வேண்டிய சூழல்ல இன்னைக்கு இருக்கிறோம் அந்த வகையில தகவல் பரிமாற்றத்துல முதல்ல நம்ம கணினியை எடுத்துக்கலாம் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அப்படிங்கறது தகவலை உருவாக்குறது அதுக்கப்புறம் அதை பதிவு செய்றது சேமிக்கிறது பகிர்ந்து கொள்ற இந்த முறையில தான் நடைபெறும் தகவல் பரிமாற்றத்திற்கு அதாவது இந்த கணினிக்கு ஆரம்ப காலத்துல இருந்த கருவியா எதை நம்ம சொல்லலாம் அப்படின்னா கால்குலேட்டர சொல்லலாம் இந்த கால்குலேட்டர வச்சுதான் இன்னைக்கு இருக்கக்கூடிய கணினி உருவாச்சு 1930 லிருந்து 50களில் கணினி அப்படிங்கறது எப்படி இருந்துச்சு அப்படின்னா கணக்குகள் போடக்கூடிய ஒரு சாதனமா இருந்துச்சு கணினி 1985 க்கு அப்புறமா அந்த முதல்ல கண்டுபிடிக்கப்பட்ட கணினியை விட இந்த காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கணினியானது 200 முறை வேகமா செயல்படக்கூடியது இப்படி வளர்ந்து வந்த கணினி தான் இன்னைக்கு நம்ம கையில இருக்கக்கூடிய பெட்டி கணினி அதாவது லேப்டாப் இதன் மூலமா இன்றைய நவீன மென்பொருட்களை கொண்டு வியாபாரம் கல்வி பொழுதுபோக்கு அப்படின்னு சொல்லக்கூடிய வாழ்க்கையோட அடிப்படை விஷயங்கள் எல்லாத்தையுமே ரொம்ப எளிமையா செயல்படுத்தவும் பயன்படுத்தவும் முடியுது இரண்டாவதா நம்ம பார்க்கக்கூடியது இணையம் தகவல் துறையில கணனியோட பங்கு எந்த அளவுக்கு முக்கியமானதா இருக்கோ அதுக்கு ஆதாரமா இருக்கிறதே இணையம்தான் இணையம் அப்படின்னு சொல்லக்கூடிய இன்டர்நெட் வளர்ந்து வந்த இந்த இந்த நவீன காலகட்டத்துல மக்கள் எல்லாருமே தன்னுடைய அன்றாட தேவைகளுக்காக பல வகையான தகவல்களை உலகத்தோட பகிர்ந்து கொண்டே இருக்கிறோம் சின்ன தொழில்ல இருந்து பெரிய நிறுவனங்கள் வரைக்கும் இன்றைய நவீன தொழில்நுட்பமான இணையத்தை பின்பற்றினா மட்டும்தான் வெற்றி அடைய முடியும் அப்படிங்கிற ஒரு கட்டாயத்துல இன்னைக்கு நம்ம வாழ்ந்துட்டு வரோம் உலகத்துல பல மூளைகளை இருக்கக்கூடிய பல ஆய்வாளர்கள் ஒன்றா இணையம் மூலமா கலந்து உரையாடிக் கொள்ள முடியும் இது மட்டும் இல்லாம இணையம் அப்படிங்கறது என்ன அப்படின்னா பல கோடி கணினிகள் ஒன்றாக இணைக்கப்படுறதை தான் நம்ம இணையம் அப்படின்ட்டு சொல்லுவோம் இந்த இணைக்கப்பட்ட கணினிகள் ஒன்றோடு ஒன்றா எளிமையா விவரங்களை பரிமாறிக் கொள்ள முடியும் இந்த இணைப்பை தான் நாம வலைப்பின்னல் அப்படின்னு சொல்லுவோம் மூணாவதா நம்ம பார்க்கக்கூடியது கைபேசி அப்படின்னு சொல்லக்கூடிய செல்போன்கள் இந்த செல்போன்களுடைய ஆரம்ப கட்டம் என்னவா இருந்துச்சு அப்படின்னா வாக்கி டாக்கி சிபி ரேடியோ அப்படின்னு சொல்லக்கூடிய முறை இந்த சிபி ரேடியோல ஒரு அலைவரிசை தான் இருக்கும் ஒரு நேரத்துல ஒருவரால மட்டும் தான் பேச முடியும் வாக்கி டாக்கி அப்படிங்கறது ஒரு மைல் தொலைவுக்கு தகவலை பரிமாறிக் கொள்ள முடியும் அதுவே சிபி ரேடியோ அப்படின்னா அஞ்சு மைல் அளவுக்கு தகவலை பரிமாறிக் கொள்ள முடியும் ஆனா செல்போன்கள் மூலமா நெடுந்தூரத்துக்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் அப்படின்னு சொல்றாங்க ஒரே நேரத்துல ஒரு நகர்ல இருக்கக்கூடிய பல பேரால செல்போன் மூலமா உரையாடிக் கொள்ள முடியும் இந்த செல்போன்கள் மூலமா உலகத்துல பல மூளைகள்ல இருக்கக்கூடியவங்களோட கூட நம்மளால தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் இதுபோக கான்பரன்ஸ் கால் கால் ஹோல்டு வாய்ஸ் மெயில் அப்படின்னு சொல்லக்கூடிய பல சேவைகள் சமூக வலைத்தளங்கள் அப்படிங்கிற பல விஷயங்கள் இந்த நம்ம கைக்குள்ள அடங்கக்கூடிய செல்போன்கள் மூலமா நாம பயன்படுத்திட்டு நம்மளுடைய தகவல்களை அதன் மூலமா பரிமாறிக்கிட்டும் வந்துட்டு இருக்கோம் இன்றைய நவீன தொழில்நுட்பத்துல தகவல் பரிமாற்றத்தை பத்தி இன்னைக்கு பார்த்தோம் இந்த தகவல் பரிமாற்றத்துல நான் சொன்ன கருத்துக்கள் 1% மட்டும்தான் மரபு சார்ந்த தொழில்நுட்பம் முக்கியமானதா இருக்கிறதுனால அதை பத்தின தெளிவான விளக்கத்தை நான் உங்களுக்கு கொடுத்தேன் இந்த பதிவு இதோட முடிவு பெறுது மீண்டும் ஒரு தமிழ் உரையாடலுடன் சந்திக்கிறேன் நான் தமிழ்நதி நன்றி
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact