இணையத் தமிழ்க் கல்விக் கழகம்#இணையத் தமிழ்#Tamil inaiya kalvi kazhagam#Dr. S. Prabavathi

UG-Tamil vaguppu562 words

Full Transcript

அனைவருக்கும் வணக்கம். யூஜி தமிழ் வகுப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன். இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது இணையதமிழ் கல்வி கழகம். இந்த இணையத்தமிழ் கல்வி கழகம் அப்படின்றது உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் வாழக்கூடிய தமிழர்களுடைய மரபுகளையும் பண்பாட்டையும் காக்குறதுக்காக அவர்களுடைய இலக்கிய தொடர்புனை நீட்டிப்பதற்காகவும் 17 பிப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டினுடைய நிறைவு விழாவில இதற்கான அறிவிப்பின அப்போது தமிழக முதல்வராக இருந்த திருமு. கருணாநிதி அவர்கள் அறிவிச்சாரு. இது தமிழ்நாடு கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் தமிழ் இணைய பல்கலை கழகமாக நிறுவப்பட்டு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கி வந்துச்சு. ஜூலை 16, 2010ஆம் ஆண்டுல தமிழ் இணைய கல்வி கழகமாக பெயர்மாற்றம் செய்யப்பட்டுச்சு. இந்த அமைப்பானது கல்வியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய ஒரு பொதுக்குழு அதுமட்டும் இல்லாம ஒரு இயக்குனர் குழும குழுவினுடைய வழிகாட்டுதலுடைய அடிப்படையில செயல்பட்டு வருது. இதனுடைய தொலைநோக்கு பார்வை என்னன்னு பாத்தீங்கன்னா இணையம் வழியாக வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ் சமுதாயத்தை தொடர்பு கொள்ள முடியும் தொடர்பு கொள்ளலாம் அப்படின்ற அந்த தொலைநோக்கு பார்வையோட தான் இந்த இந்த நிறுவனம் செயல்பட்டு வருது. இதனுடைய குறிக்கோள் என்னன்னு பாத்தீங்கன்னா அரிச்சுவடி முதல் ஆராய்ச்சி வரை உள்ள தமிழ் கல்வியை உலகெங்கும் வாழும் தமிழ் சமுதாயத்திற்கு அளிக்கணும் அப்படின்ற அந்த குறிக்கோளோடுதான் இந்த நிறுவனம் செயல்படுது. இந்த கழகத்தினுடைய பணித்ததிட்டங்களை நான்கு நிலைகளாக பிரிக்கிறாங்க. ஒன்னு வந்து இணையவழி கல்வி திட்டங்கள் ரண்டு மின்னூலகம் மூன்று கணினி தமிழ் வளர்ச்சி நாலு தமிழர் தகவல் ஆற்றுப்படை. முதல்ல இணையவழி கல்வி திட்டங்கள் இதுல என்ன இருக்குன்னு பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ கல்வி சான்றிதர்கள் மூன்று நிலைகள்ல் வழங்கப்படுது. ஒன்னு அடிப்படை அடுத்தது இடைநிலை அடுத்தது உயர்நிலை இந்த மூன்று நிலைகள்ல் கல்வி சான்றிதர்களோட படிப்புகள் இருக்கு. அதுமட்டுமில்லாமல் தமிழ் மொழி இளங்கலை பட்டப்படிப்பும் இதுல கொடுக்கப்படுது. தஞ்சாவூரில் இருக்கக்கூடிய தமிழ் பல்கலை கழகத்தினுடைய வழியாக தமிழ் முதுகலை பட்டமும் இந்த கழகத்தின் வழியாக வழங்கப்படுது. அடுத்து மின்னுலகம். இந்த தமிழ் இணைய கல்வி கழகத்தில மின்னுலகம் அப்படின்னு ஒரு பகுதியை வந்து உருவாக்கி இருக்காங்க. இதுல வந்து அரிய பல நூல்கள் இருக்கு. 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் இதுல வந்து பாதுகாக்கப்படுது. நாட்டுமையாக்கப்பட்ட பல நூல்களும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியல் பணிகள் கழகத்தினுடைய நூல்களும் ஆய்விதழ்களும் பருவை இதழ்களும் ஓலைச்சுவடிகளும் இந்த மின்னுலகத்தில் பாதுகாக்கப்படுது. www.tamilடிஜitalலைப்ரரி.in அப்படின்ற இணையதள முகவரியில நாம மின்னூல்களை பதிவிருக்கம் செஞ்சும் பயன்படுத்திக்கலாம். அடுத்து கணினி தமிழ் வளர்ச்சி. இந்த நிறுவனத்தின் மூலமாக தமிழ்ல செய்யப்படக்கூடிய இந்த மென்பொருள்களை உருவாக்குறதுக்கு பல நிதி உதவிகள் வழங்கப்படுது. இந்த நிதி உதவியின் கீழே உருவாக்கப்படக்கூடிய இந்த மென்பொருட்கள் பொதுமக்களுக்கு அரசின் சார்பாக வழங்க வேண்டும் அப்படின்ற அந்த நோக்கத்தோட இந்த நிதி உதவி வழங்கப்படுது. இந்த மாதிரி தமிழ் மென்பொருட்களுக்கு இந்த நிறுவனமும் கனித்தமிழ் சங்கமும் சான்றளிக்குது. அதாவது தமிழ் சாப்ட்வேர் சர்டிபிகேஷன்ஃர் டேப் டேம் கம்பேட்டிபிலிட்டி அப்படின்ற சாண்டிதழ வந்து வழங்குறாங்க. இந்த தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி அப்படின்றது என்னன்னா புதிதாக மென்பொருட்களை உருவாக்குறதுக்காகவோ அல்லது ஏற்கனவே இருக்கக்கூடிய அந்த மென்பொருட்களை மேம்படுத்துறதுக்காகவோ நினைக்கக்கூடிய ஒரு நிறுவனத்துக்கு அல்லது தனி நபருக்கு இந்த நிதி வழங்கப்படுது. இதே மாதிரி கனித்தமிழ் பேரவை அப்படின்ற ஒரு அமைப்பை வந்து தொடங்கி இணையத்துல தமிழினுடைய பங்களிப்பை வளப்படுத்துறதையும் கனித்தமிழ் மற்றும் கனித்தமிழ் பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்குறது உருவாக்க செய்ய ஊக்குவிக்கறதுக்காகவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது அதே மாதிரி குறுஞ்செயலிகளை வந்து உருவாக்குறது அப்படின்ற இலக்குகள் அடிப்படையாக கொண்டு இந்த கனிதமிழ் பேரவை அப்படின்ற அந்த அமைப்பு செயல்பட்டு வருது. அடுத்து தமிழர் தகவல் ஆற்றுப்படை தமிழ் மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு இது பற்றியான ஒரு விரிவான ஒருங்கிணைந்த களஞ்சியமாக இந்த தமிழர் தகவலாற்றுப்படையை இந்த தமிழ் இணைய கல்வி கழகம் ஏற்படுத்தி இருக்கு. இந்த திட்டத்தின் கீழ தமிழக வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான 3158 ஒளிப்படங்களை தொகுத்து வெளியிட்டுருக்காங்க. இதை வந்து www. தகவல் ஆற்றுப்படை.in அப்படின்ற இணையதளத்தின் மூலமாக நம்ம தெரிஞ்சுக்கலாம். இந்த தகவலாற்றுப்படை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்துட்டு இருக்கு. இதுல தமிழ் மொழி, பண்பாடு, கலைகள் தொடர்பான பல ஆவணங்களும் புதிது புதிதாக சேர்க்கப்பட்டு வருது. அடுத்து இந்த இணைய கல்வி கழகத்தினுடைய எதிர்கால திட்டங்கள் அப்படின்னு அந்த வலைப்பக்கத்தில கொடுத்திருக்கிறத நம்ம பார்க்கலாம். ஒன்னு வந்து இ ஆசிரியர். ரண்டு மின்னுருவாக்கத்திற்கான தரநிலைகளை தயாரித்து வெளியிடுதல். மூணாவது தமிழ் புத்தகங்களுக்கான ஒரு விரிவான மின்னுருவாக்க துணைநூர் பட்டியலை வந்து தயாரித்தது. நாலாவது தமிழ் உரையை பேச்சாகவும், தமிழ் பேச்சை உரையாகவும் மாற்றுவதற்கான மென்பொருட்களை உருவாக்குதல். அஞ்சாவது தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்புவதற்கு மொபைல் செயலிகளை வடிவமைத்தல். ஆறாவது தமிழ் மற்றும் தமிழ் கணினியில் ஆராய்ச்சி திட்டத்தை அறிமுகப்படுத்துதல். ஏழாவது தமிழர்களின் பல்வேறு பண்டைய கலை வடிவங்கள் தொடர்பான பாடங்களை அறிமுகப்படுத்துதல் அப்படின்ற எதிர்கால திட்டங்களோடு இந்த தமிழ் இணைய கல்வி கழகம் செயல்பட்டு வருது. மாணவர்களாகிய நாமும் தமிழை இணையத்தின் வழியாக உலக நாடுகளுக்கு கொண்டு சேர்க்க மேலும் பாடுபடுவோம் என்று கூறி இந்த வகுப்பை இத்துடன் முடிக்கிறேன். அடுத்த வகுப்பில் வேறு ஒரு பாடத்தோடு உங்களை சந்திக்கின்றேன்.

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

இணையத் தமிழ்க் கல்விக் கழகம்#இணையத் தமிழ்#Tamil inaiya ka...