காப்பியங்களில் அறிவியல் | இடைக்கால இலக்கியங்களில் அறிவியல் | Tamil Nathi | Unofficial Tamil

UNofficial Tamil1,165 words

Full Transcript

தொடர்நிலைச் செயல நாம காப்பியங்கள் அப்படின்னு சொல்லுவோம். காப்பியங்கள்ல வானவியல், புவியியல், வேதியல், பொறியியல், மண்ணியல், அறிவியல் தொழில்நுட்பங்கள், மருத்துவம், உயிரியல் இந்த மாதிரி பல்வேறு அறிவியல் துறைகள் குறித்த கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இப்படி காப்பியங்கள்ல் இடம்பெற்ற அறிவியல் கருத்துக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பதிவுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்மளுடைய சேனல் யன் அபிஷயல் கற்பம் தமிழை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நான் தமிழ்நதி. தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்தை தொடர்ந்து படைக்கப்பட்ட மணிமேகலை, சீவக சிந்தாமணி உள்ளிட்ட ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், கம்ப ராமாயணம், பெருங்கதை போன்ற காப்பிய இலக்கியங்கள்ல் அறிவியல் குறித்த செய்திகளை பல தமிழர்கள் பதிவு செஞ்சிருக்காங்க. காப்பியங்கள்ல் இடம்பெற்றுள்ள அறிவியல் கருத்துக்கள் ஆரம்பத்தில கற்பனையா தெரிஞ்சாலும் அறிவியல் வளர்ச்சிக்கு அப்புறமா பழந்தமிழருடைய அறிவியல் கருத்துக்கள் தற்போதைய அறிவியல் கருத்துக்கு முன்னோடியா இருக்கிறத நம்மளால புரிந்து கொள்ள முடியும். காப்பி இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அறிவியல் கருத்துக்கள் குறித்து பார்க்கலாம். சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கட்டிட கலை தொடர்பான பொறியல் செய்திகளை பார்க்கலாம். மக்கள் வாழக்கூடிய இடம் குடிசையா இருந்தாலும் சரி, கோபுரமா இருந்தாலும் சரி. அங்க இருக்கக்கூடிய கழிவு பொருட்களை அகற்றுவதுக்காக புதை சாக்கடை அமைப்பு மதுரை மாநகரில இருந்திருக்கு. அதுமட்டுமில்லாம மதுரை மாநகருடைய அமைப்பானது புரஞ்சேரி, காவல், காவல் காடு, அகலி, பாலம், அரண், அகநகர், அரண்மனை இந்த மாதிரி அமைப்பில மதுரை மாநகர் அமைக்கப்பட்டிருக்கு. மதுரையில் இருக்கக்கூடிய கோட்டை சுவர்களின் மீது எந்திர போர்கருவிகள் பொருத்தப்பட்டிருந்தத சிலப்பதிகாரம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில புகார் நகருடைய அமைப்பும் கூறப்பட்டிருக்கு. இந்த புகார் நகரத்தில அகன்ற வீதிகள், தளங்கள், வணிக வீதிகள், கப்பல்கள் நிறுத்தி வைக்கக்கூடிய கடல் தளங்கள் இதெல்லாம் இருந்துச்சு அப்படிங்கிறத இன்னைக்கு அமெரிக்க செயர்கை கோள்கள் படம் பிடித்து காட்டி இருக்கு. மக்கள் வாழக்கூடிய இடங்கள்ல நெடுநிலை மாடம் இருந்தத சிலப்பதிகாரம் கூறுகிறது. வசந்த மேனியின் படர் நோயுற்று நெடுநிலை மாடத்திடை நில தாங்கோர் படையமைச் சோக்கை பள்ளியில் விழ்ந்ததும் அப்படின்னு சொல்லி பாடி இருக்காரு. அதாவது கோவலன பிரிந்த காலத்துல மாதவி பசலை நோயுற்று நெடுநிலை மாடத்தில சேர்ந்திருந்தத அதாவது அங்க இருந்தத சிலப்பதிகாரம் கூறுது. இது மட்டுமில்லாம கோலசாளர குறுங்கன் நிலான நிலை மாடத்து அரமியம் அப்படின்னு சொல்லியும் பாடப்பட்டிருக்கு. அதாவது கோவலனை பிரிந்த கண்ணகி எழுநிலை மாடத்தில இருந்தா அப்படின்னு சொல்லப்படுது. எழுநிலை மாடத்தில இருக்கக்கூடிய நிலாமுற்றத்தை தான் அரமியம் அப்படின்னு சொல்லிருக்காங்க. கணவனை பிரிந்த காலத்துல கண்ணகி நிலவேநீர் காலத்திற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த எலுநிலை மாடத்தில இருக்கக்கூடிய நிலாமுற்றத்துக்கு போகாம குளிர் காலத்துல மாளிகையினுடைய இடப்பகுதியில தங்குறதுக்காக ஒரு இடம் உண்டாம். அந்த இடத்துல போய் இருக்கா. அங்க இருக்கும்போதும் கிளவினுடைய ஒளியோ இல்லன்னா தென்றலோ வந்து கணவனை பிரிந்த இந்த காலத்துல தனக்கு துன்பத்தைதான் தரும் அப்படிங்கிறதை தெரிஞ்சுக்கிட்டு, அங்க இருக்கக்கூடிய சாளரங்களை அடைச்சு வச்சிருக்கான். அதாவது ஜன்னலை அடைச்சு வச்சு அங்க காத்துட்டு இருந்தா அப்படிங்கிறதை சிலப்பதிகாரம் கூறுது. ஐவகை மணிகள் பத்தி சிலப்பதிகாரத்தில கூறப்பட்டிருக்கு. ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இளங்கதிர் விடுவும் நலங்கெழு மணிகளும். அதாவது பவளம், சந்தனம், அகில், மாசிலாமுத்து, பொன். இந்த ஐவகை மணிகளும் அது ஒளிரக்கூடிய தன்மையாலதான் வேறு வேறு பெயர்களை பெற்றுட்டு இருக்கு. ஆனா இந்த ஐவகை மணிகளையும் செய்வதற்கான மூலப்பொருள் ஒன்று அப்படிங்கிறத இலங்கவடிகள் கூறி இருக்கிறாரு. இன்றைக்கு அறிவியல் அறிஞர்கள் மணிகள் அனைத்துமே வந்து பீனால் பார்மாலிடிஹைட் அப்படிங்கிற பொருட்களால ஆனது அப்படின்னு சொல்றாங்க. ஆனா இதை அப்பவே இளங்கோவடிகள் தன்னுடைய பாடல்ல சொல்லி இருக்கிறது. ஆச்சரியத்தை ஏற்படுத்துற மாதிரி இருக்குது. சிலப்பதிகாரத்தில அரங்கேற்று காதையில நாடக மேடையுடைய அமைப்பு பத்தி கூறப்பட்டிருக்கு. இந்த நாடக மேடையானது அகலம், உயரம், நீளம் இதெல்லாமே அங்க நிகழ்த்தக்கூடிய அந்த கலைக்கு ஏற்ற மாதிரியும் பார்வையாளர்கள் உட்கார்றதுக்கு தேவையான இடங்கள், மேடை அமைப்பு, மேடையில நாட்டியம் ஆடக்கூடிய மகளிர்கான இடவசதி, பிற மகளிர்கள் ஆடக்கூடிய இடங்கள் இது எல்லாமே ஒதுக்கப்பட்டிருந்துச்சு. இது மட்டுமில்லாம அந்த நாடக அரங்குல எளினி வகைகளும், விளக்கு அமையக்கூடிய இடம், தூண் அமைக்கக்கூடிய இடம். இதற்கெல்லாம் ஏற்பியான முறையில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அப்படிங்கிறத சிலப்பதிகார பாடல் எடுத்துரைக்கிறது. அடுத்ததா மணிமேகலையில இடம்பெற்ற அறிவியல் கருத்துக்கள் குறித்து பார்க்கலாம். வான்வலி பயணம் குறித்து மணிமேகலையில கூறப்பட்டிருக்கு. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவ தீவிற்கு ஆகாய வழியாக கொண்டு சென்றதா காப்பியம் கூறுகிறது. அதுமட்டுமி இல்லாம பின்னில் பறந்து பல நாடுகளுக்கும் மணிமேகலை சென்று வந்ததா காப்பியம் கூறுகிறது. அடுத்ததா தீவக சிந்தாமணியில் இடம்பெற்ற அறிவியல் கருத்துக்கள் குறித்து பார்க்கலாம். தீவக சிந்தாமணியின் ஆசிரியரான திருத்தக்க தேவர் காந்திருவ தத்தையுடைய அழகை கூறும்போது அவளுடைய முகம் நிலவை போல இருந்தது அப்படின்னும் அவள் காதில் அணிந்திருந்த அந்த குண்டலம் நிலவுக்கு அருகில் இருக்கக்கூடிய யாளன் கோல் போல இருந்தது அப்படின்னும் சொல்றாங்க. நிலவுக்கு அருகில இருக்கக்கூடிய கோல் வியாழன் அப்படிங்கறது தற்போதைய அறிவியல் கண்டுபிடிப்பு. அதை அப்போதே தன்னுடைய இலக்கியத்துல பதிவு செஞ்சிருக்காரு திருத்தக்க தேவர். திரைச்சிலை அமைப்பு குறித்தும் திருத்தக்க தேவர் பேசி இருக்கிறாரு. அதாவது தீவகனுக்கும் காந்தர்வ தத்தைக்கும் இடையில இசை போர் ஒன்னு நடக்குது. இந்த இசைப்போர்ல அங்க இருக்கக்கூடிய திரைச்சீலை எந்திரத்தால மூடப்பட்டிருந்தது அப்படின்னு சொல்லி பாடி இருக்கிறாரு. உலகத்துல எந்த இடத்துல ஒரு நிகழ்ச்சியோ இல்லனா விளையாட்டோ நடக்குது அப்படின்னா அதை இன்னைக்கு நாம தொலைக்காட்சி மூலமா நேரடியாவே பார்க்க முடியும். இது எல்லாமே அறிவியல் கண்டுபிடிப்பு மூலமா சாத்தியமான ஒன்று. ஆனா சீவக சிந்தாமணியில இந்த மாதிரி நேரலை குறித்த கருத்து இடம்பெறுது. அதாவது சீவகனுடைய வளர்ப்பு தந்தையான கந்த கடனுடைய மகன் நந்தட்டன். அவர் சீவகனை பார்க்கணும் அப்படின்னு சொல்லி ஆசைப்படுறாரு. பாண்டர்வத்தத்தை ஒரு மந்திரத்தை சொல்றா. அதன் மூலமா சீவகன் இருக்கக்கூடிய இடத்தை நேரலையாவே நந்தட்டனுக்கு காட்டுறா. இந்த காட்சியில தேவகன் கனக மாலைக்கு கற்பக மாலை புணைந்து சூடக்கூடிய காட்சி தெரியுது. இந்த காட்சி இன்னைக்கு இருக்கக்கூடிய நேரலையோட ஒத்து போுது. இது மட்டுமில்லாம வானூறுதி குறித்தும் தீர்த்தக்க தேவர் சீவக சிந்தாமணியில கூறி இருக்கிறாரு. இந்த வானுறுதி பல சீலைகள் வெள்ளிய நூல் அறக்கு மெலுகு இதெல்லாம் கொண்டு அமைக்கப்பட்டிருக்கு. இந்த அமைப்பை மயில் பொறி அப்படின்னு சொல்லி பெயரிட்டு திருத்தக்க தேவர் சொல்லி இருக்கிறாரு. பொறியில வந்து வளஞ்சுலி இடஞ்சுலி இந்த ரெண்டு அமைப்பு இருந்திருக்கு. வானத்தில பறக்கவோ தேவையான இடத்தில இறங்கவோ அந்த சுழியுடைய அமைப்பை நம்ம பயன்படுத்திக்கலாம். சீவகனுடைய தந்தையான சச்சந்தன் கட்டியங்காரனுடைய ஏற்பட்ட போரின் காரணமா தன்னுடைய மனைவிக்கு இந்த போர்ல எந்த ஒரு ஆபத்தும் ஏற்படக்கூடாது அப்படிங்கறதுக்காக சச்சந்தன் விசையைய அனுப்புறதுக்காக ஒரு வானுறுதியை செய்றாரு. அந்த வானுறுதி ஏழு நாட்கள் வானிலேயே பறக்கக்கூடிய அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதுல விசையையும் ஏத்தி அனுப்பி வைக்கிறாரு. ஆனா இங்க பட்டியங்காரனுக்கும் சச்சந்தனுக்கும் நடைபட்ட போர்ல பட்டியங்காரன் ஜெயிச்சு அந்த வெற்றி முழக்கத்தை வானத்தில பறந்தபடி விசையை கேட்கிறா. இதனால மயக்கம் கொள்றா அவ மயங்கி விழுந்ததால அந்த மயில் பொறி ஒரு சுடுகாட்டில வந்து இறங்குது. இது சீவக சிந்தாமணியில விளக்கப்படுது. அடுத்ததா கம்ப ராமாயணத்தில இடம்பெற்ற அறிவியல் கருத்து குறித்து பார்க்கலாம். ராவணன் சீதையை கவர்ந்துட்டு போனதுக்கு அப்புறமா ராவனும் லக்குவனும் சீதையை தேடி செல்றாங்க. அந்த சமயத்துல மண்ணின் மேல தேர்காலுடைய சுவடுகள் தெரியுது. ரெண்டு பேரும் அந்த சுவடுகளை பின்தொடர்ந்தே நடந்து போறாங்க. கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா அந்த சுவடுகள் மறைந்து போகுது. ஒருவேளை அந்த தேர் வானம் நோக்கி பறந்திருக்கலாமோ அப்படின்னு சொல்லி ரெண்டு பேரும் வருத்தப்படுறாங்க. இப்படி கம்ப ராமாயணத்தில கம்பர் சொல்லி இருக்கிறாரு. விமானம் கொஞ்ச தூரம் தரையில நகர்ந்து அதுக்கப்புறமா வான் நோக்கி பறந்து போறது அப்படிங்கறது இப்ப இருக்கக்கூடிய நிகழ்வு. இது அன்னைக்கே தன்னுடைய நூல்ல குறிப்பிட்டிருக்கிறாரு கம்பர். அடுத்ததா பெரிய புராணத்தில இடம்பெற்ற அறிவியல் கருத்து குறித்து பார்க்கலாம். தமிழ் இலக்கியங்கள்ல மருத்துவம் பற்றிய குறிப்புகள் அதிகமாவே இடம்பெறுது. அந்த வகையில பெரிய புராணத்தில கண்ணப்ப நாயனார் புராணம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டாவே இருக்கு. அதாவது கண்ணப்ப நாயனார் பாலத்திநாதருடைய கண்கள்ல குறுதி இரத்தம் வடியறத பார்த்து அது நிக்கறதுக்காக பற்ச்சிலையை பிழிஞ்சி காலத்திநாதருடைய கண்கள்ல ஊற்றுறாரு. அவர் பச்சிலையை பிழிந்து ஊத்துனதுக்கு அப்புறமாவும் அவர் கண்களல இருந்து வழியக்கூடிய இரத்தம் நிக்கல. உற்று நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன் எனும் உரைமுன் கண்டார். அதாவது ஒரு உறுப்புக்கு பதிலா இன்னொரு உறுப்பைதான் வைத்து அதை ஈடு செய்ய முடியும் அப்படிங்கிறத கண்ணப்ப நாயனார் புரிஞ்சுக்கிறாரு. இன்னைக்கு நடக்கக்கூடிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மாதிரி. காலத்திநாதருடைய கண்கள இருந்து இரத்தம் வழியறத நிப்பாட்டுறதுக்காக தன்னுடைய வலது கண்ணை கூர்மையான அம்பால தோண்டி ஈசனுடைய வலது கண்ணல வைக்கிறாரு. இதனால காலத்திநாதர் கண்களில இருந்து வழியக்கூடிய இரத்தமும் மென்னு போகுது. இது கண்ணப்ப நாயனாருடைய பக்தியை சோதிக்கிறதுக்காக கடவுள் நடத்திய விளையாட்டா கூறப்படுறது உண்டு. ஆனா இன்னைக்கு இருக்கக்கூடிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அன்னைக்கே தன்னுடைய நூல்ல கூறி இருக்கிறதே வியப்பான ஒன்று. அடுத்ததா பெருங்கதையில இடம்பெற்றுள்ள அறிவியல் கருத்துக்களை பார்க்கலாம். நீர்மாடம், நீரியல் மாடம், நீரணி மாடம் இந்த மூணுமே ஒன்னுதான். இது ஒரு வகையான படகு. இது பத்தி பெருங்கதையில கூறப்பட்டிருக்கு. இது அன்னைக்கு இருக்கக்கூடிய பொறயியல் நுட்பத்தை நமக்கு கூறும். இந்த நீரணி மாடமானது பனை, மூங்கில், கமுகு போன்ற பொருட்களை கொண்டு அமைக்கப்படும். இது மட்டுமில்லாம நெட்டி, மயிர்ப்பீலி இதால இந்த நீரடி மாடத்தில இருக்கக்கூடிய கம்புகள் வந்து இழுத்து கட்டப்படுறது உண்டு. இதுல இருக்கக்கூடிய இடைவெளியை நிரப்புறது்காக வெள்ளை துணியை பயன்படுத்துறது உண்டு. மென்மையான சாளரங்கள், மாலைகள் தொங்கவிடப்பட்ட சாளரங்கள், இரும்பு கம்பிகள் கொண்ட சாளரங்கள் எல்லாம் இந்த நீரடி மாரத்துல அங்கங்க அமைக்கப்படுறது உண்டு. இதுல ஓவியங்கள் தீட்டப்பட்ட திரைச்சீழகளும் அங்கங்க தொங்கவிடப்படுறதும் உண்டு. நீரடி மாரத்துடைய உறுப்புகளான நாசி அதாவது படகினுடைய முன்பகுதியில் இருக்கக்கூடிய மூக்கு போன்ற அமைப்பு. அடுத்து கபோதம். கபோதம்ங்கிறது கூரை போன்ற அமைப்பு. இது கிட்டத்தட்ட புறாக்கூடு போன்ற ஒரு அமைப்பில இருக்கக்கூடியது. இந்த நீரணி மாடத்தை அம்பி, தெப்பம், புனை அப்படின்னு சொல்லி வேறு பெயரிட்டும் அழைக்கிறதுண்டு. இந்த படகு ஏழு நிலைகளை கொண்டுட்டு இருக்கும். எண்கோண வடிவிலயும் அமைக்கப்பட்டிருக்கும். இது பெருங்கதையில கூறப்பட்ட ஒரு அறிவியல் செய்தி. சிலப்பதிகாரத்திலயும் நீரடி மாடம் குறித்து பேசப்பட்டிருக்கும். கண்ணகியும், கோவலன், கௌந்தேரிகள் மூணு பேரும் மதுரைக்கு செல்லும்போது வையை ஆற்றியை கடக்குறதுக்காக இந்த நீரடி மாலத்தில தான் பயணம் செஞ்சதா கூறப்படுறது உண்டு. காப்பியங்கள்ல் இடம்பெற்றுள்ள அறிவியல் கருத்துக்களை நாம பார்க்கும்போது அது கற்பனையா தெரியலாம். ஆனா இன்னைக்கு இருக்கக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கியங்களல் இடம்பெற்றுள்ள அறிவியல் கருத்துக்கள்தான் முன்னோடியா இருந்திருக்கும் அப்படிங்கிறது மறுக்க முடியாத ஒரு உண்மை. இந்த பதிவுல காப்பியங்கள்ல் இடம்பெற்றுள்ள அறிவியல் கருத்துக்களை மட்டும் பார்த்தோம். இந்த பதிவு இதோட முடிவு பெறுது. மீண்டும் ஒரு தமிழ் உரையாடலுடன் சந்திக்கிறேன் நான் தமிழ் நதி நன்றி.

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

காப்பியங்களில் அறிவியல் | இடைக்கால இலக்கியங்களில் அறிவியல...