உரை நூல்களில் அறிவியல் சிந்தனை Sem4 Dr Jayanthi sivasankar

Ug tamil Lessons1,275 words

Full Transcript

வணக்கம். யூ.ஜி. தமிழ் லெசன். இதுல நம்ம இன்னைக்கு பார்க்க போறது இடைகால இலக்கியங்களில் அறிவியல் சிந்தனை அப்படிங்கிற தலைப்பில நம்ம காப்பியங்கள் உடைய அறிவியல் சிந்தனை அப்படிங்குற காணொளி நான் ஏற்கனவே போட்டிருக்கேன். சிற்றிலக்கியங்களில் இருக்கின்ற அறிவியல் சிந்தனை அப்படிங்குற காணொளியும் போட்டிருக்கோம். இப்ப நம்ம பார்க்க போறது உரை நூல்களில் இருக்கின்ற அறிவியல் சிந்தனை என்னென்ன அப்படிங்கறததான் பார்க்க போறோம். அதுக்கு முன்னாடி நம்ம உரைநூல்கள் உரைநடைனா என்ன அப்படிங்கிறதையும் நாம தெரிஞ்சுக்கணும். உரையாசிரியர்கள்னா யாரு அப்படிங்கிறதையும் நம்ம தெளிவா புரிஞ்சுக்கிட்டா தான் நமக்கு இதுல என்னென்ன அறிவியல் சிந்தனைகள் இருக்கு அப்படிங்கிறதையும் நம்மளால தெரிஞ்சுக்க முடியும். முதல்ல நம்ம உரை நூல்கள் அப்படிங்கறது என்ன அப்படின்னா முன்னெல்லாம் பாத்தீங்கன்னா பாடல்களை வந்து செய்யுல் வடிவத்தில் தான் எழுதுவாங்க இல்லைங்களா. அந்த மாதிரி செயல் வடிவத்துல பாடல்கள் இருக்கும்போது அதை படிக்கின்றவங்களுக்கு நிறைய பேருக்கு அதனுடைய பொருள் என்பது தெரியவே தெரியாது. அப்போ அந்த பாடலுக்கு உரையாசிரியர்கள் என்ன பண்ணுவாங்க அது புரிகின்ற வகையில இப்ப நம்ம பேசுறோம் இல்லைங்களா அந்த பேச்சு வடிவத்திலயும் அதற்கான வடிவத்தை வரி வடிவத்தை கொடுத்து எழுதுவாங்க அதுதான் உரைநடை அப்படிங்கறது நம்ம வந்து அந்த உரை ஆசிரியர்களுக்கு கண்டிப்பா அந்த ஆசிரியர் வந்து பாடல் வடிவத்தில் எழுதி இருக்கிற செயல் வடிவத்தில் இருக்கிற இலக்கியங்கள்ல என்னென்ன கருத்துக்கள் சொல்லி இருக்காரு அப்படிங்கறத இந்த உரையாசிரியருக்கு தெளிவா தெரிஞ்சுக்கணும் அப்போ அந்த உரையாசிரியர்கள் அப்படிங்கறவங்க யாரு? பாடல் வடிவத்தில இருக்கின்ற அந்த பாடல்களுக்கு விளக்கம் எழுதிய அந்தப் புலவர்களைதான் நம்ம என்னன்னு சொல்றோம் உரையாசிரியர்கள் அப்படின்னு சொல்றோம். அப்ப இந்த உரையாசிரியர்கள் வந்து பல்வேறு அறிவு உடையவங்களாக இருக்கணும். என்னென்ன அறிவு எல்லாம் அவங்களுக்கு இருக்கணும் அப்படின்னா அந்த ஒரு நூலை படிக்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கு வானியல் அறிவுகள் அப்படின்னு இருக்கணும் மருத்துவ அறிவு இருக்கணும் அதே மாதிரி அறிவியல் அறிவு கண்டிப்பா இருக்கணும் உடற்கூறுகள் பற்றிய அறிவுகள் இருக்கணும் ஏன் அப்படின்னா அந்த கால இலக்கியங்கள் அப்படின்னு சொல்லும்போது நம்ம 17 மேல்கணக்கு நூல்கள் 18 கீழ்க்கணக்கு நூல்கள்னு பிரிக்கிறோம். 17 மேல்கணக்கு நூல்கள் அப்படின்னு சொல்லும்போது நம்ம எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சொல்றோம். பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் 18 நூல்களை நம்ம வந்து வரிசையா எடுக்கிறோம். அதுல பார்த்தீங்கன்னா திருக்குறள் வருகின்றது, நாலடியார் வருகின்றது இந்த நூல்கள் எல்லாம் படிக்கும் போது அந்த ஆசிரியர்கள் திருவள்ளுவர் என்ன சொல்றாரு அப்படிங்கறத புரிஞ்சுகிட்டு அவங்க உரையில எழுதி தெளிவா சொன்னாதான் அந்த மூலத்தை எழுதிய மூல ஆசிரியருடைய பொருள் என்ன அப்படிங்கறது நமக்கு விளங்கும். அதனால உரையாசிரியருடைய பணி என்பது ரொம்ப ரொம்ப முக்கியமாக இருக்கின்றது. அந்த உரையாசிரியர்கள் அவங்க எழுதிய உரையில எப்படியெல்லாம் அவர்களுடைய அறிவியல் சிந்தனையானது வெளிப்படுது அப்படிங்கறத தான் நம்ம இந்த கட்டுரையில பார்க்க போறோம். இத நான் உங்களுக்கு குறிப்புச் சட்டகத்தினுடைய வழியாக விளக்கறதுக்காக இருக்கின்றேன். முதல்ல பார்த்தீங்கன்னா நச்சினாக்கினியருடைய அறிவியல் சிந்தனைகள் என்னென்ன அவருடைய உரையின் வாயிலாக தெரிகின்றது. அவர் வந்து பாடலுக்கு உரை எழுதுறார் இல்லையா அதன் மூலமா என்னென்ன அறிவியல் சிந்தனை தெரியுது. அதே மாதிரி இளம்பூரணருடைய அறிவியல் சிந்தனை, பரிமேலழகருடைய அறிவியல் சிந்தனை, பேராசிரியருடைய அறிவியல் சிந்தனை, அடியாருக்கு நல்லார் அறிவியல் சிந்தனை, சேனாவரையர் அறிவியல் சிந்தனை, உவே சாமிநாத ஐயருடைய அறிவியல் சிந்தனை. இந்த குறிப்புச் சட்டகத்தின் வழியாகதான் நம்ம இந்த கட்டுரையை அணுகப் போறோம். அத அணுகுறதுக்கு முன்னாடி உரையாசிரியர்கள் நிறைய பேரு பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு அந்த நூல்களுக்கு உரை எழுதி இருக்காங்க. அதுல இன்னும் நிறைய பேர் இருக்காங்க. அவங்க யார் யாரு அப்படின்னு சில பேரை மட்டும் நான் உங்களுக்கு சொல்றேன். நக்கீரர், இளம்புறனார், பேராசிரியர், நச்சினாக்கினியர், சேனாவரையர், கல்லாடர், வயிலைநாதர், அடியாருக்கு நல்லார், பரிமேலழகர். இந்த மாதிரி பல புலவர்களும் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு உரை எழுதி இருக்காங்க. முதல்ல நம்ம பாக்க போறது நச்சினாக்கினியருடைய உரையில என்னென்ன அறிவியல் சிந்தனை இருக்கு அப்படிங்கறது தான் நம்ம பார்க்க போறோம். இலக்கியங்கள்ல பாத்தீங்கன்னா காணப்படுற நாள்மீன் கோல்மீன் பற்றியே இவர் தந்திருக்கிற விளக்கங்கள் ரொம்ப சிறப்பா இருக்கு. முதல்ல நமக்கு தெரியணும். நாள்மீன்னா என்ன? கோல்மீன்னா என்ன? அப்படிங்கறத தெரிஞ்சுகிட்டாதான் இவர் என்ன விளக்கம் தராருங்கறது நமக்கு புரியும். முதல்ல நாள்மீன்னா என்ன அப்படின்னா சூரியன் வந்து ஒரு நாள்மீன். ஏன் அப்படின்னா அது தனது சொந்த ஒளியை வெளியிடுகின்றது. அதனால அது ஒரு நாள்மீன். அப்போ சந்திரன் ஒரு கோல்மீன். ஏன் அப்படின்னா அது சூரியன்ட்ட இருந்து ஒளியை பெற்று பிரதிபலிக்கின்றது. அப்ப கோல் மீன்னா என்ன அர்த்தம்? அது வந்து முதன்மையா கிடையாது. அது என்ன செய்யும்? அடுத்தவங்க கையில இருந்து ஒளியை வாங்கிக்கொண்டு பிரதிபலிக்கும். அதுதான் என்னது கோல் மீன்கள் அப்படிங்கிறது. இப்ப கலித்தொகையில ஒரு பாட்டு வருது. ஏறு தழுவுதல் அப்படின்னா என்ன? இந்த காலையை வந்து அடக்குறாங்க ஒரு தலைவன். அதை பத்தி தோழி என்ன செய்றா? தலைவிக்கு சொல்றா. அந்த சொல்ற இடத்துல பார்த்தீங்கன்னா அந்த பையன் வந்து காலை மாடை அடக்குகின்ற அந்த இடங்கள்ல ஏறு தழுவுகின்ற இடத்துல நிறைய பெண்கள் என்ன பண்றாங்களாம் அந்த பையனை வந்து சுற்றி நின்று அந்த பையன் காலை மாடை அடக்கிற அந்த ஏறு தழுவுதல் நிகழ்வை வந்து நின்னு பார்க்கிறாங்களாம். இதை ஒரு பாடல் மூலமா சொல்றாங்க. நாளாகிய மீன்கள் தன்னிடத்தே சூழப்பட்ட மதி போல அவ்விடத்தில் இட்ட பரன்களின் மேலே தத்தம் மகளியரை திரளாக நிறுத்தினர். அப்டின்னா என்ன மதி. மதி என்றால் நிலவு. நிலவு என்ன பண்றதும் அந்த இடத்துல நின்னுட்டு இருக்குற மாதிரி, பரன்கள் ஏன்னா, ஏறு தழுவுகின்ற இடத்துல வந்து, உங்களுக்கு ஸ்டேஜ் மாதிரி போட்டுருப்பாங்க இல்லையா, அந்த காலத்துல பரன் போட்டிருப்பாங்க. அதுமேல பெண்கள் எல்லாரும் திரலாக கூட்டமா நின்னுகிட்டு பார்கறாங்க லாக்கினியருடைய இந்த உரையில நமக்கு என்ன தெரியுது அப்படின்னு பாத்தீங்கன்னா இவருக்கு நாள்மீன் பத்தியும் தெரியுது மதி இது ரெண்டையும் மகளியருக்கும் மகளியர் கூட்டத்துக்கும் உவமையா சொல்றாரு இதனால இவருடைய வானியல் அறிவானது நமக்கு தெரிகின்றது. எனவே உரை ஆசிரியர்களுக்கு வானியல் அறிவு இருந்திருக்கு அப்படிங்கறதும் நமக்கு தெரியுது. நம்ம அடுத்ததா பார்க்க போறது இளம்பூரனார் நச்சினாக்கினியர் உரையில வெளியாகின்ற அறிவியல் சிந்தனை என்ன அப்படிங்கறத தான் பார்க்க போறோம். ஒரு பெண்ணின்னுடைய வயிற்றுல கருத்தோன்றி உருவாகி வளர்ந்து உலகிற்கு வருவது அப்படிங்கறது இயற்கையால் நடைபெறுகின்ற ஒரு நிகழ்வு. இத அவங்க அவங்களுடைய பாடல்ல எப்படி சொல்றாங்க அப்படின்னு போது தொல்காப்பியத்துல பொருளதிகாரத்துக்கு இவங்க வந்து விளக்கம் எழுதுறாங்க. பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகன்று உரையார் என்மனார் புலவர் பரத்தையிர் பிரிந்த காலையான ஒரு பையன் அந்த காலத்துல பறத்தட்ட அடுத்த பெண்ணிட்ட போறது அப்படிங்கறது இயற்கையா இருந்த நிகழ்வா ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனா அந்த பையன் எந்த நேரத்துல அந்த தலைவன் வந்து தலைவியை விட்டு போகக்கூடாது அப்படின்னா பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் அப்டிங்கிறாரு ஈறு அப்படின்னா ரெண்டு ஆறு அப்படின்னா ஆறு ஈறு 6 2*6 12 பூப்பின் புறப்பாடு அந்த பொண்ணுக்கு மாதவிடாய் வந்த பிறகு அந்த 12 நாளுக்கு அப்புறமா அந்த பையன் அந்த பெண்ணை விட்டு அவன் கண்டிப்பா வந்து செல்லக்கூடாது என்னதான் அவன் வேற ஒரு பெண்ணோட இருந்தாலும் பரத்தையிர் பிரிந்த காலையான என்னதான் பரத்தைட்ட போயிட்டு இருந்த பயனா இருந்தாலும் கண்டிப்பாக அவன் திரும்பி வந்துவிட வேண்டும் என்ற பாடலுக்கு வந்து இளம்புறனாரும் உரை எழுதுறாரு நச்சினாக்கினியரும் மிக தெளிவா உரை எழுதுறாங்க என்ன எழுதுறாங்க அப்படின்னா சங்க காலத்துல பாத்தீங்கன்னா வந்து தலைவன் வந்து பரத்திட்ட போறது அப்படிங்கறது ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கமாக இருந்தது அதனால அவன் தல பரத்திட்ட வந்து போனாலும் தலைவியை விட்டு பிரியும் போது அவ வந்து பூ பூ பெய்க்கின்ற காலமா இருந்தது அப்படின்னா தலைவன் கண்டிப்பா தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வந்துவிட வேண்டும் அப்படின்னு அவங்க உரை எழுதுறாங்க இதனால என்ன ஆகுது அப்படின்னா அந்த 12 நாட்கள் நான் சொன்னேன் இல்லையா ஈர் ஆறு அப்படின்னா ஈறு என்றால் இரண்டு 2*6= 12 இந்த 12 நாட்களும் தலைவியை விட்டு பிரியாம அவளோடதான் வாழனும் இப்ப நீங்க கேட்கலாம் ஏன் வாழனும் அப்படின்னா அந்த காலம்தான் வந்து அவங்களுக்கு கரு வந்து உருவாகின்ற காலமாக இருக்கின்றது. தன்னுடைய இளம்பூரணர் அவருடைய உரையில சொல்றாரு. பரத்தையர் சேரியாயினும் பூத்த தோன்றி மூன்று நாள் கழித்த பின்பு 12 நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு இதனால் பெயர் என்னையின் அது கருத்தோன்றும் காலம் என்க என்று விளக்கம் எழுதி இருக்காரு. இதன் மூலமாக இவர்களுடைய அறிவியல் சிந்தனையானது நமக்கு புலப்படுகின்றது. இதனால உரையாசிரியர்களுக்கு இருந்த உடற்கூற்று அறிவியல் அறிவு நமக்கு அறிய முடிகின்றது. அடுத்து பரிமேலழகர் உரையில அறிவியல் சிந்தனைகள் என்னென்ன இருக்கு அப்படிங்கறதுதான் பார்க்க போறோம். திருவள்ளுவர் வந்து மருந்து அப்படிங்கற அதிகாரத்தில் நோய் எப்படி எல்லாம் வரும் அப்படிங்கறத சொல்றாரு. மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வழிமுதலா எண்ணிய மூன்று அப்படின்னு தன்னுடைய திருக்குறள்ல சொல்றாரு. இதோட பொருள் என்ன அப்படின்னு பாத்தீங்கன்னா மிகினும் அப்படின்னா அளவுக்கு மீறினா குறையினும் அப்படின்னா குறைவாய் இருந்தா நோய் செய்யும் அப்படின்னா நோய்ங்கிறது ஏற்படும். நூலோர் அப்படின்னா மருத்துவ நூல்கள். வலி முதலா அப்படின்னா என்ன? வாதம், பித்தம், கபம். எண்ணிய மூன்று அப்படின்னா மருத்துவ நூல்கள் கூறுகின்ற மூன்று. அப்படின்னா என்ன அர்த்தம் அப்படின்னா அளவுக்கு மீறி சாப்பிட்டாலும் நமக்கு நோய்கள் அப்படிங்கறது ஏற்படும். என்ன நோய் ஏற்பட்டுரும் அப்படின்னா செரிமான கோளாறு ஏற்படும். உடல் பருமன் அப்படிங்கிற நோய்கள் எல்லாம் ஏற்படும். குறைவா சாப்பிட்டா என்ன ஏற்படும் அப்படின்னா சோர்வு ஏற்படும். ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும். இதனால பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும். இதுதான் நம்மளுடைய வள்ளுவர் அவர்கள் சொல்றாரு. அளவுக்கு மீறியோ குறைவாகவோ உணவை நம்ம சாப்பிட்டோம் அப்படின்னா வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்று நோய்களும் ஏற்படும் அப்படிங்கறதுதான் இந்த திருக்குறளுடைய பொருளாக இருக்கின்றது. பரிமேல் அழகர் இதற்கு உரை எழுதுகிறார். உணவு செயல்களும் ஒருவன் பகுதி கொத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும் வாதம் முதலாக எண்ணப்பற்ற மூன்று நோயும் அவனுக்கும் துன்பம் செய்யும் என்று உரை எழுதி இருக்கார். மேலும் நூலோர் எண்ணிய மூன்று அப்படிங்கறத வாதப்பகுதி, பித்தப்பகுதி, தலைப்பகுதி அப்படிங்கிறதையும் அவர் குறிப்பிட்டு சொல்லிருக்காரு. இன்னொரு உதாரணம் பார்க்கலாம். கண்டது மண்ணும் ஒருநாள் அலர் மண்ணும் திங்களை பாம்பு கொண்ட அப்படிங்கிறது இந்த திருக்குறள். இதுல என்ன அப்படின்னா தலைவனும் தலைவியும் என்ன செய்றாங்க? யாருக்கும் தெரியாம வந்து சந்திச்சு பேசுறாங்க. இந்த நிகழ்வு பாத்தீங்கன்னா ஊர்ல இருக்கற எல்லாருக்கும் தெரிஞ்சிடுது. அப்போ எல்லாரும் என்ன பண்றாங்க அந்த ஊர்ல அலர் பேசுறாங்க அலர்னா வந்து காசிப் ஒருத்தருக்கு தெரியாம இன்னொருத்தர் சொல்றாங்க இந்த பொண்ணு தெரியுமா அந்த பையனோட இப்ப பாரு பேசிக்கிட்டே இருக்கா அப்படிங்கிற நிகழ்வை ஊர்ல இருக்கிற மக்கள் எல்லாரும் பேசுறாங்க இத வள்ளுவர் சொல்றாரு என்ன வானத்துல நிலவை பாம்பு விழுங்குகின்ற நிகழ்வை ஒப்பிட்டு சொல்றாங்க இது சந்திர கிரகணம் அப்படின்னு நம்ம அழைக்கப்படுது ஊருக்கே தெரியுது இவங்க ரெண்டு பேரும் வந்து ஒருவரை ஒருவர் சந்தி சந்தித்து பேசுகின்றனர் அப்படிங்கிற நிகழ்வு இந்த அலர் பேசுறது இந்த காசிப்ப ஊர்ல இருக்கற உலகத்தில இருக்கற அம்புட்டு பேரும் பேசுறாங்க அப்படிங்கறத சொல்றார் இதான் இந்த திருக்குறளோட பொருள் இதற்கு பரிமேல் அழகர் உரை எழுதுறார் என்னது கண்டது ஒரு நாள் அப்படின்னா நான் காதலரை கண்ணுற பெற்றது ஒரு நான்றே அலர் மண்ணும் திங்களை பாம்பு கொண்ட இதுக்கு விளக்கம் எழுதுறாரு அதனின் ஆய அலர் அவ்வளவிற்றன்றி திங்களை பாம்பு கொண்ட அலர் போன்று உலகெங்கும் பறந்தது அப்படின்னு அவர் வந்து உரை எழுதுறாரு. இத நான் பார்க்கும்போது பரிமேல் அழகருக்கு உடலியல் அறிவும் இருக்கு வானியல் அறிவும் இருக்கு அப்படிங்கறது நம்மளால புரிஞ்சுக்க முடியுது. இதனுடைய தொடர்ச்சியை நம்ம அடுத்த காணொளியில் பார்க்கலாம், நன்றி.

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

உரை நூல்களில் அறிவியல் சிந்தனை Sem4 Dr Jayanthi sivasanka...