வணக்கம். இன்னைக்கு நாம பார்க்க போற பதிவு பழந்தமிழர் அறிவியல் சிந்தனையில நிலவியல் குறித்து பார்க்கலாம். நிலவியல்னா என்ன? உலக தோற்றம் குறித்த பழந்தமிழர்களுடைய செய்திகள் மாநிலம்னா என்ன? தொல்காப்பியருடைய நிலவியல் வாய்ப்பு முறை. இதையெல்லாம் இந்த பதிவுல பார்க்கலாம். பதிவுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்மளுடைய சேனல் யுன் அபிஷயல் கற்பம் தமிழை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. அண்ட் தமிழ்நதி. இன்றைய அறிவியல் வளர்ச்சியா இருக்கட்டும் அறிவியல் கண்டுபிடிப்புகளா இருக்கட்டும். எல்லாத்துக்குமே ஆணிவேரா இருக்கக்கூடியது பல தமிழர்களுடைய அறிவியல் சிந்தனையும் அறிவியல் தொழில்நுட்பமும் தான். பல தமிழர்கள் தங்களுடைய அறிவியல் சிந்தனைகளையும் கண்டுபிடிப்புகள் பற்றின தொழில் நுட்பத்தையும் இலக்கியங்கள்ல் பதிவு செஞ்சிுட்டு போயிருக்காங்க. மேகம் கடல் நீரை பெற்று மலையாக பொழிகிறது அப்படிங்கிறது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. ஆனா இதை பல ஆண்டுகளுக்கு முன்னாடியே நிறைக்கடல் முகந்துராய் நிறைந்து நீர்தழும்பும் தன்புறை தவிர்ப்பு அசைவிட அப்படின்னு சொல்லிட்டு பரிபாடல்ல பாடிட்டு போயிருக்காங்க பழந்தமிழர்கள். பழந்தமிழர்களுடைய அறிவியல் சிந்தனை குறித்து பல இலக்கியங்கள் இருந்தாலும் அது எல்லாத்துக்குமே முதன்மையா இருக்கக்கூடியது தொல்காப்பியம்தான். நிலவியல் குறித்து பார்க்கறதுக்கு முன்னாடி இந்த நிலவியலுடைய ஆரம்பம் என்ன அப்படிங்கிறத பார்த்துட்டோம் அப்படின்னா இந்த பகுதியை படிக்கிறதுக்கு கொஞ்சம் எளிமையா இருக்கும். உலகத்துடைய தோற்றம். உலகத்துடைய தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உலக அளவிுல தோன்றி இருக்கு. கடவுள் கோட்பாடு பேரண்ட வெடிப்பு கொள்கை நிலையான இருப்பு கொள்கை சுருக்க விரிவு கொள்கை லெக்கரின் கொள்கை இப்படின்னு சொல்லிட்டு நிறைய வகையான கோட்பாடுகள் எழுந்திருக்கு. இதுல பேரண்ட வெடிப்பு கொள்கை அப்படிங்கிறது முக்கியமான ஒன்று. இது பலராலும் நம்பப்படக்கூடிய ஒரு கருத்து. இந்த பேரண்ட வெடிப்பு கொள்கையை பெருவெடிப்பு கோட்பாடு அப்படின்னும் சொல்றதுண்டு. பிரபஞ்சம் மிக அடர்த்தியை கொண்ட ஒரு புள்ளியில இருந்து வெடித்து விரிவடைந்தது அப்படின்னு சொல்லி சொல்லப்படுது. இந்த விரிவாக்கத்தின் மூலமாதான் பூசி வாயுக்கள் எல்லாம் உருவாகி அவை ஈர்ப்பு விசையால ஒன்று சேர்ந்து விண்மீன் திறல்களா உருவாக்கம் பெறுது. இந்த விண்மீன் திரல்கள்ங்கிறது கேலக்ஸி அப்படின்னு சொல்லப்படக்கூடியது. இந்த விண்மீன் திரல்களுக்குள்ள நட்சத்திரங்கள் பல உருவாக ஆரம்பிக்குது. அப்படி உருவான நட்சத்திரங்கள்ல் ஒன்றுதான் சூரியன். இந்த சூரியனை சுற்றி உருவான கோள்கள்ல் ஒன்றுதான் பூமி அப்படின்னு சொல்லப்படுது. இந்த பெருவெடிப்பு கொள்கை பத்தி தமிழ் இலக்கியங்கள்ல் பாடல் ஒன்றும் இருக்குது. பரிபாடல்ல இடம்பெற்றுள்ள விசும்பில் ஊலி ஊள் ஊள் செல்ல கருவளர் வானத்து இசையில் தோன்றி அப்படிங்கிற பாடல் இன்னைக்கு இருக்கக்கூடிய அறிவியல் கருத்தோட ஒன்றி இருக்கிறத நாம பார்க்க முடியும். இந்த பாடல் பரிபாடல்ல திருமாலின் வாழ்த்து பாடலா இடம் பெற்றிருக்கு. அதாவது வானத்துல நிறைய யுகங்கள் நடந்துகிட்டே இருக்கிறதாவும் அப்படி நடக்கக்கூடிய யுகங்கள்ல திடீர்னு ஒரு ஒளியா பிரபஞ்சம் தோன்றுச்சு அப்படின்னு சொல்லப்படுது. இந்த பிரபஞ்சத்துல உருவம் அறிய முடியாத அதாவது நான் தூசி வாயுக்கள் அப்படின்னு சொன்னேன் இல்லையா அந்த மாதிரி உருவம் அறிய முடியாத ஒரு வகையான அணுக்கள் உருவாகுது. எல்லாமே காற்றினால கிளர்ந்தெழுது அப்படின்னு சொல்லி பாடப்பட்டிருக்கு. அதாவது இது எல்லாமே வந்து ஈர்ப்பு விசையால இழுக்கப்பட்டு தென்னிறத்தி சூரியன் உருவாகுறதா சொல்லப்படுது. எஞ்சிய பகுதிகள் எல்லாம் குளிர்ந்து பல கோள்களாக உருவாக்கப்பட்டுச்சு. இந்த கோள்கள்ல ஒன்றுதான் பூமி அப்படின்னு சொல்லி பாடி இருக்காரு. எதற்கு இதை பாடி இருக்காரு அப்படின்னா திருமாலை போற்றி பாடும்போது இந்த அண்டம் பிறப்பதற்கும் அழிவுக்கும் காரணமானவன் திருமாள். அவரை நான் போற்றுறேன் அப்படின்றதுக்காக இந்த பாடலை வீரந்தையார் அப்படிங்கிற புலவர் பாடி இருக்கிறாரு. இது இன்னைக்கு இருக்கக்கூடிய உலக தோற்றத்துக்கான அறிவியல் கோட்பாடோட ஒன்றி இருக்கிறத நம்ம பார்த்து வியந்து போறோம். இது மட்டுமி இல்லாம பல தமிழர்கள் இந்த உலகம் பஞ்ச பூதங்களால ஆனது அப்படின்னு சொல்றாங்க. பஞ்சபூதங்கள் அப்படிங்கறது ஐம்பூதங்கள் அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். இந்த கருத்தை புறநானூறு பாடல் ஒன்றுல பார்க்கலாம். மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவறு வலியும், வலிதலைய தீயும், தீ முறணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போல அப்படின்னு சொல்லி பாடி இருக்கிறாரு. இந்த ஐம்பூதங்களால ஆனதுதான் இந்த உலகம் அப்படிங்கறது தமிழருடைய கருத்து. இந்த ஐம்பூதங்கள்ல முதல்ல சொல்லப்படுறதுதான் நிலம். இப்போ நிலவியல்னா என்ன அப்படின்னு பார்க்கலாம். இளவியல் அப்படிங்கிறது பூமி அதனுடைய கூட்டமைவு, கட்டமைப்பு அதனுடைய இயல்புகள், வரலாறு, பூமி உருவான வழிமுறைகள் இதெல்லாம் பத்தி அறியக்கூடிய அறிவியலும் அதனை பற்றிய ஆய்வையும்தான் நாம நிலவியல் அப்படின்னு சொல்லுவோம். இந்த நிலவியல் அறிவு மூலமா, பூமியில எங்கெங்க என்ன உலோகங்கள் இருக்கு, அப்படிங்கறதையும், இயற்கை வளங்கள் இருக்கக்கூடிய இடங்களையும் நம்மளால அடையாளம் காண முடியும். அதுமட்டுமி இல்லாம வேளாண்மை குறித்தும் மண்ணினுடைய இயல்பு குறித்தும் தற்ப வெட்புநிலை உயிர்கள் வாழக்கூடிய திறன் இதெல்லாம் பத்தி நம்மளால தெரிஞ்சுக்க முடியும். அடுத்ததா நாநிலம் பத்தி பார்க்கலாம். தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை நிலங்களா பாகுபடுத்த ஆரம்பிச்சாங்க. அவங்க இருக்கக்கூடிய நிலங்களுடைய அமைப்பை பொறுத்துதான் நிலங்களுக்கு பெயரிீட்டும் அழைச்சு வந்தாங்க. ஆரம்ப காலகட்டத்துல நாலம் அப்படின்னு சொல்லி அழைக்கப்பட்டுச்சு. அதாவது குறிஞ்சி, முள்ளை, மருதம், நெய்தல் அப்படின்னு சொல்லி எதற்கு இதுல பாலையை சேர்க்கல அப்படின்னா குறிஞ்சியும் முல்லையும் தன்னுடைய முறைமையில திரிந்தப்போ இருக்கக்கூடிய நிலத்தைதான் பாலை அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது குறிஞ்சின்னு சொல்லக்கூடிய மலை நிலமும் முல்லை அப்படின்னு சொல்லக்கூடிய காடு பகுதியும் வரண்ட காலங்கள்ல இருக்கக்கூடிய நிலப்பகுதியை பாலை அப்படின்னு சொல்றது உண்டு. அதனாலதான் நாளம் அப்படின்னு சொல்லும்போது பாலையை நீக்கி சொல்லி இருக்காங்க. நிலவியல் வைப்பு முறையை ரெண்டு வகையா கூறலாம். ஒன்னு பொதுவான நிலவியல் வைப்பு முறை. ரெண்டாவது தொல்காப்பியர் கருத்துப்படி நிலவியல் வைப்பு முறை. இந்த பொதுவான வைப்பு முறையை நாம ஆரம்ப காலகட்டத்தில இருந்து பார்க்கலாம். அதாவது ஆதிமனிதனுடைய காலகட்டத்தில இருந்து பார்க்கலாம். ஆரம்ப காலகட்டத்தில மலைகள் தான் முதல்ல தோன்றுச்சு அப்படின்னு சொல்லப்படுது. இந்த மலைகள்ல தான் ஆதிமனிதன் வாழ்ந்து வந்ததாவும் சொல்லப்படுது. அங்க இருக்கக்கூடிய கிழங்குகள் எல்லாம் அவனுடைய உணவாகவும் பாறைகளையும் குகைகளையும் அவங்களுடைய இருப்பிடமா ஏற்று அவங்க வாழ்ந்து வந்ததாவும் நாம பார்த்திருப்போம். அதனாலதான் குறிஞ்சியை முதல்ல வைக்கிறாங்க. விலங்குகளை வேட்டையாட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா விலங்குகள் கிட்ட இருந்து தங்களை பாதுகாத்துக்கறதுக்காக மரங்கள்ல வாழ ஆரம்பிச்சான். தங்களுடைய ஆடைகளா இலை தலைகளையும் அணிய ஆரம்பிச்சான். இதனாலதான் காடும் காடு சார்ந்த இடமுமான புள்ளையை இரண்டாவது வச்சிருக்காங்க. விவசாயத்தை கண்டுபிடிச்சதுக்கு அப்புறமா மருத நிலத்துல வேளாண்மை செய்து தங்களுடைய உணவு பொருளை உற்பத்தி செய்து சாப்பிட ஆரம்பிச்சா. அதனாலதான் மூணாவதா மருத நிலத்தை வைக்கிறாங்க. கடைசியா நெய்தல். நெய்தல் நிலத்தில வாழ ஆரம்பிச்சதுக்கு அப்புறமா நெய்தலை நாலாவது வைக்கிறாங்க. இப்படி ஆரம்ப காலகட்டத்தில மனிதன் வாழ்ந்த சில அமைப்புகள் அடிப்படையில் தான் நாலம் கொண்டுவரப்பட்டிருக்கு. நாநிலத்தை குறிப்பிடும்போது குறிஞ்சி நிலத்தை முதல்ல வைத்ததற்கான காரணத்தை முனைவர் சி. சேதுராமன் தன்னுடைய நூல்ல பதிவிட்டுருக்காரு. மனிதனுடைய இன்றியமையா தேவைகள்ல் ஒன்றான உணவு பொருட்கள் இயற்கையிலே மிகுதியா கிடைக்கக்கூடிய இடம் மலைப்பகுதி. மனிதன் ஆரம்ப காலகட்டத்தில உணவு பொருளா எடுத்துக்கொண்டது காய், கனி, கிழங்கு. இது எல்லாமே மலைகள்ல தான் கிடைக்கும் அப்படிங்கறதுனால குறிஞ்சி நிலத்தை முதல்ல வைக்கப்பட்டுள்ளது அப்படின்னு சொல்லி முனைவர் சி. சேதுராமன் சொல்றாரு. அடுத்து தொல்காப்பியருடைய நிலவியல் வைப்பு முறையை பார்க்கலாம். தொல்காப்பியர் மாயோன் மேய காடுரை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் புல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையான் சொல்லவும் படுமே அப்படின்னு சொல்லி பாடி இருக்காரு. பொதுவான நிலவியல் வைப்பு முறையில குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் அப்படின்னு நிலத்தை நாலம் அப்படின்னு சொல்லி வகைப்படுத்தி இருந்தாங்க. ஆனா தொல்காப்பியர் தன்னுடைய இலக்கணத்தில் கூறும்போது முல்லை நிலத்தை முதலாவதா வைத்து அதன் பின்பு குறிஞ்சி, மருதம், நெய்தல் அப்படின்னு சொல்லி வகைப்படுத்தி இருக்காரு. அதற்கான காரணத்தை பாடல் விளக்கத்தோட நான் சொல்றேன். மாயோன் அப்படிங்கறது திருமாள். திருமாள் இருக்கக்கூடிய இடம் காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நிலம். தேயோன் அப்படிங்கிறது முருகன். முருகன் இருக்கக்கூடிய இடம் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி. பேந்தன் அப்படிங்கிறது இந்திரன். இந்திரன் இருக்கக்கூடிய இடம் வயலும் வயல் சார்ந்த இடமுமான மருத நிலம். வருணன் வருணன் இருக்கக்கூடிய இடம் மணலும் மணல் சார்ந்த இடமுமான நெய்தல். இதைதான் தன்னுடைய கூர்பால சொல்லி இருப்பாரு தொல்காப்பியர். எதற்கு இவர் முல்லையை முதலாவதா வச்சிருக்கார் அப்படின்னா நம்ம ஐந்தினை வகைப்பாட்டில ஏற்கனவே பார்த்திருப்போம். தினையில ஒவ்வொரு தினைக்கும் முதல் பொருள் கருப்பொருள் உரிப்பொருள் அப்படின்னு சொல்லி இதுல மூணாவதா சொல்லக்கூடிய உரிப்பொருள். இந்த உரிப்பொருள் அடிப்படையிலதான் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் அப்படின்னு சொல்லி வகைப்படுத்தி இருப்பாரு. அது என்னன்னு நான் சொல்றேன். முல்லை நிலத்தினுடைய உரிப்பொருள் இருத்தலும் இருத்தல் நிமித்தமும். அதாவது காத்திருத்தல். இல்லறம் பற்றிய ஒழுக்கத்தை சொல்லும்போது கற்புடை மகளிருடைய செயல் கணவன் என்ன சொன்னாலும் அதுக்கு ஏத்த மாதிரி கீழ்படிந்து நடக்கறத சொல்லுவாங்க. கணவன் தன்னை பிரிந்து போகும்போது தனக்காக காத்திரு அப்படின்னு சொல்லிட்டு போவாரு. அவன் திரும்பி வர வரைக்கும் கணவனுக்காக காத்திருக்கிறது தான் அந்த மகளிருடைய செயல். அதனாலதான் முதல்ல முல்லை நிலத்தை வச்சிருக்கிறாரு தொல்காப்பியர். இரண்டாவது குறிஞ்சி. குறிஞ்சிக்கான உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும். தலைவனும் தலைவியும் சேர்ந்ததுக்கு அப்புறமா புணர்தல் நிகழும். அதனாலதான் இரண்டாவதா குறிஞ்சியை வச்சிருக்காரு. மூன்றாவது மருதம். ஊடலும் ஊடல் நிமித்தமும் அப்படிங்கறதுதான் மருது நிலத்துக்கான உரிப்பொருள். தலைவனும் தலைவியும் சேர்ந்து இருக்கக்கூடிய காலகட்டத்துல சின்ன சின்ன சண்டைகள் ஏற்படும். இததான் ஊடல் அப்படின்னு சொல்லுவாங்க. அதனாலதான் மருத நிலத்தை மூணாவது வைத்திருக்கிறாரு தொல்காப்பியர். கடைசியா நான்காவதா நெய்தல் நிலத்தை சொல்றது உண்டு. நெய்தல் நிலத்தினுடைய உரிப்பொருள் இறங்கலும் இறங்கல் நிமித்தமும். ஊடலுக்கு அப்புறமா அவர்களுடைய நிலை இரக்கம் கொள்வது மாதிரி இருக்கும். இதனாலதான் கடைசியா நெய்தலா வச்சிருக்கிறாரு. குறிப்பொருளான முதல்ல காத்திருத்தலை கூறி காத்திருத்தலுக்கு அப்புறமா தலைவனும் தலைவியும் கூடக்கூடிய புணர்தல். புணர்தலுக்கு பின் ஏற்படக்கூடிய ஊடல் ஊடலுக்கு பின் ஏற்படக்கூடிய பிரிவு பிரிவுனால ஏற்படக்கூடிய இரங்கள் அப்படின்னு சொல்லி இந்த உரிப்பொருள் அடிப்படையில முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் அப்படின்னு சொல்லி நிலத்தை தொல்காப்பியர் வகைப்படுத்தி இருக்காரு. இந்த பதிவுல நிலவியலுடைய ஆரம்பமான உலக தோற்றம் நிலவியல்னா என்ன? நாநிலம்னா என்ன? தொல்காப்பியருடைய நிலவியல் வாய்ப்பு முறை. இதெல்லாம் பத்தி இந்த பதிவுல பார்த்தோம். இந்த பதிவு இதோட முடிவு பெறுது. மீண்டும் ஒரு தமிழ் உரையாடலுடன் சந்திக்கிறேன். நான் தமிழ்நதி [இசை] நன்றி.
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact