அனைவருக்கும் வணக்கம் யூஜி தமிழ் வகுப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன் இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது பழந்தமிழ் இலக்கியங்களில் உயிரியல் சிந்தனைகள் உயிரியல் என்பது உயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை பற்றிய இயற்கை அறிவியலாகும் இதில் அனைத்து உயிரினங்களின் உடைய தோற்றம் வளர்ச்சி அவற்றினுடைய கட்டமைப்பு உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படும் முதல்ல நம்ம உயிர்களின் தோற்றம் பத்தி பார்க்கலாம் ஐம்பூதங்களுடைய சேர்க்கையினால இந்த உலகம் உருவாகுது மழைநீர்ல இருந்து சின்ன சின்ன புழுக்கள் உருவாகி இந்த உலகத்துல உயிர்கள் தோற்றம் பெறுவதாக அறிவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுறாங்க இந்த உலக உயிர்களுடைய தோற்றத்தை ஒரு நான்கா வகைப்படுத்துறாங்க ஒண்ணு முட்டையில் தோன்றுவன இரண்டாவது வியர்வையில் தோன்றுவன மூன்றாவது வித்தில் தோன்றுவன நான்காவது கருவில் தோன்றுவன அப்படின்னு நான்கு நிலைகள்ல இந்த உலக உயிர்களின் தோற்றத்தைப் பத்தி குறிப்பிடுறாங்க அடுத்து உயிர்களின் பாகுபாடு ஜெகதீஷ் சந்திரபோஸ் புல் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு தாவரவியல் அறிஞர் செடி கொடி மரம் இது எல்லாத்துக்குமே உயிர் உணர்வு அறிவு இதெல்லாம் உண்டு அப்படின்னு அறிவியல் பூர்வமா நிரூபிச்சிருக்காரு ஆனா அவர் அப்படி நிரூபிக்கிறதுக்கு பல காலத்திற்கு முன்னாடியே தொல்காப்பியம் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்குமான அறிவை ஆராய்ந்து பகுத்துக் கூறியிருக்கு தொல்காப்பியத்தோட பொருளதிகாரத்தில் மரபியல் அப்படின்னு ஒரு இயல் இருக்கு அந்த இயல்ல இந்த உயிர்கள் உடைய பரிணாம வளர்ச்சியை பத்தியும் உலகத்தில் இருக்கிற எல்லா உயிர்களுடைய பாகுபாட்டையும் தொல்காப்பியர் தெளிவாக விளக்குறாரு இதுலதான் இந்த உலகத்தினுடைய உயிர்களை அதனுடைய உறுப்புகளைச் சார்ந்து அதனுடைய உணர்வுகளின் அடிப்படையில் அதை அறிவாக பகுத்துச் சொல்றாரு ஐம்பொறிகள்னு சொல்லக்கூடிய மெய் வாய் கண் மூக்கு செவி அப்படின்னு சொல்லக்கூடிய இந்த அஞ்சும் மனிதனுக்கு சிறப்பாக இருக்கக்கூடிய ஒரு அறிவு அது ஆறாவது அறிவு அந்த ஆறாவது அறிவை இதுவரை நாம் பகுத்தறிவு அப்படின்னு சொல்லிட்டு இருக்கோம் ஆனா தொல்காப்பியர் இந்த ஆறாவது அறிவை மனம்னு சொல்றாரு ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனோடு நாவே மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே நான்கு அறிவதுவே அவற்றோடு கண்ணே ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே ஆறறிவதுவே அவற்றோடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே அப்படின்ற தொல்காப்பிய நூற்பா உணர்வு மற்றும் மற்றும் அறிவின் அடிப்படையில் உயிர்களை ஆறாக பகுத்துக் கூறுகிறது உடல் வழியாக தொடு தொடு உணர்வை மட்டும் கொண்டவை ஓரறிவு உயிர்கள் சான்றாக புல் மரம் செடி கொடி இந்த தாவர இனங்கள் எல்லாம் இரண்டாவது தொடு உணர்வு நாவால் சுவையை அறியக்கூடிய உணர்வு இந்த இரண்டு திறன்களையும் கொண்டவை ஈரறிவு உயிர்கள் எடுத்துக்காட்டாக நத்தை மீன் வகைகள் கிழிஞ்சல் சிப்பி முதலான கடல்வாழ்வு உயிரினங்கள் மூன்றாவது தொடு உணர்வு நாக்கு மூக்கு இவற்றின் வழியாக அறியக்கூடியது இந்த மூன்று அறிவு உயிர் எவையெல்லாம் என்றால் கரையான் எறும்பு அட்டை முதலானவற்றை குறிப்பிடுகிறார் அடுத்து நான்கறிவு உயிர் இது தொடு உணர்வு நாக்கு மூக்கு கண்கள் இந்த நாலும் சேர்ந்து அறியக்கூடிய அறிவை தான் நான்கறிவு உயிர்னு சொல்றாங்க இந்த நான்கறிவு உயிராக வண்டு தும்பி தேனீ முதலாக பறந்து செல்லக்கூடிய பூச்சி இனங்கள் அடுத்து ஐந்தறிவு உயிர் இதில் தொடு உணர்வு நாக்கு மூக்கு கண் காது இந்த ஐந்து அறிவையும் கொண்ட உயிர்கள் அதாவது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா விலங்கினங்களும் மனிதர்களில் விலங்கி இயல்பு கொண்டவர்களும் ஐந்தறிவு உயிர்கள் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் அடுத்து ஆறறிவு உயிர் இது வந்து தொடு உணர்வு நாக்கு மூக்கு கண் காது இதோடு மனதால் சிந்தித்து அறியக்கூடிய கூடிய ஆறாவது அறிவையும் கொண்டது இதற்கு மனிதர்களையும் தேவர்கள் அசுரர்கள் இயக்கர் முதலானோரை சான்றாக குறிப்பிடுகிறார் தொல்காப்பியருடைய இந்த உயிர் பாகுபாடுகளாக அடுத்து இந்த உயிர்கள் பற்றிய பாகுபாட்டை வந்து ரெண்டாவும் வகைப்படுத்துவாங்க ஒன்னு வந்து அசையக்கூடிய பொருள் இன்னொன்னு அசையாத பொருள் அதாவது தாவரப் பொருள் மற்றொன்று சங்கமப் பொருள் அப்படின்னு ரெண்டா வகைப்படுத்தி சொல்லுவாங்க அந்த அடிப்படையில மாணிக்கவாசகர் எழுதின திருவாசகத்துல புல்லாகி பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து இழைத்தேன் என்ற இந்த பாடல்ல அந்த ரெண்டு உயிர் பகுப்புகளையும் அவர் சொல்றாரு அதாவது தாவரப் பொருள் சங்கமப் பொருள் அப்படின்னு ரெண்டா பிரிச்சு சொல்றாரு இதுல தாவரப் பொருள் அப்படின்றது எதெல்லாம் பார்த்தீங்கன்னா கல் புல் பூண்டு மரம் அப்படின்ற இந்த நாலும் இந்த தாவரப் பொருள்ல வரும் சங்கமப் பொருள் அப்படின்னு சொல்லும்பொழுது புழு பாம்பு பறவை மிருகம் அசுரர் மனிதர் பேய் கணங்கள் தேவர் அப்படின்ற இந்த பத்தும் வந்து சங்கமப் பொருள்ல அடங்குது இந்த பாடல்ல மாணிக்கவாசகர் இத்தனை பிறவிகளை எடுத்து இந்த உயிரானது சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு இன்று வீடுபேறு அடைந்ததாக பாடுகிறார் பழந்தமிழ் இலக்கியங்கள்ல ஒரு கரு உருவாகிற அந்த தன்மை பற்றி பற்றியும் அந்த கருவில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பற்றியும் கருச்சிதைவு பற்றியும் ஊனமாக பிறக்கக்கூடிய அந்த கருக்கள் எப்படி அவ்வாறு பிறக்கின்றன என்பதைப் பற்றியும் அதே மாதிரி ஒரு கருவுல எப்படி இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன என்பது பற்றியுமான குறிப்புகளை வந்து நம்ம அந்த பாடல்கள் வழியாக தெரிஞ்சுக்கலாம் உதாரணத்துக்கு சங்க இலக்கியங்கள்ல ஒரு கருவுல இரண்டு குழந்தை பிறக்கக்கூடிய அதாவது நம்ம இரட்டையர்கள்னு சொல்றோம் இல்லையா அந்த குழந்தைகள் எப்படி பிறக்குறாங்க அவங்களுக்கான பெயர் என்ன அப்படின்றத நம்ம ஒரு பாடல் வழியா தெரிஞ்சுக்கலாம் சங்க இலக்கியத்துல இந்த இரட்டைக் குழந்தைகளை கவை மகன் அப்படின்ற சொல்லால அழைத்திருக்காங்க இந்த கவை அப்படின்னா என்ன அர்த்தம்னா ஒரு மரக்கிளையிலிருந்து இன்னொரு மரக்கிளை கிளைத்து ரெண்டா உருவாகிறது அப்படின்ற பொருள்ல தான் அந்த சொல் பயன்பாட்டுல இருந்திருக்கு இதுக்கு ஒரு சங்க இலக்கிய பாடல் வந்து கவைமக நஞ்சு உண்டா அங்கு அஞ்சுவல் பெருமை என் நெஞ்சத்தானே அப்படின்ற ஒரு குறுந்தொகை பாடலை உதாரணம் காட்டுறாங்க அதாவது ஒரு தலைவி வந்து தலைவன் இரவுக்குல பல துயரங்களை கடந்து அவன் வர்றான் அதை அதை எண்ணிப்பார்க்கிற அந்த தலைவிக்கு எப்படி இருக்குன்னா மன உணர்வு ஒட்டி பிறந்த இரட்டை குழந்தையில ஒரு குழந்தை நஞ்சு உண்டுச்சுன்னா அதாவது விஷம் குடிச்சிடுச்சுன்னா இன்னொரு குழந்தையினுடைய உடலும் துடிக்கிறது மாதிரி தலைவன் வர்றதை நினைச்சு தலைவியினுடைய நெஞ்சம் துடித்தது அப்படின்னு சொல்லிட்டு இந்த பாடல் சொல்லுது அடுத்து இந்த உயிருக்கு இன்றி அமையாததாக இருப்பது எது அப்படின்னு பார்த்தீங்கன்னா இந்த உடல்தான் இந்த உடலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய பாடல்களும் இலக்கியங்கள்ல காணப்படுது இதை முக்கியமா சித்தர்கள் வலியுறுத்துறாங்க உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே அப்படின்னு திருமந்திரத்தில் திருமூலர் எழுதின இந்த பாடல் உடம்புதான் இந்த உயிருக்கு ஆதாரமாக இருக்குது அதனால இந்த உடலை அழியாமல் பாதுகாத்துக் கொள்வது இந்த உயிரின் இலக்கை அடைய உதவும் அப்படின்னு வலியுறுத்துறார் தொல்காப்பியர் ஒவ்வொரு திணைக்குமான கருப்பொருள் அப்படின்னு சொல்லக்கூடியதுல பல இந்த உயிர் பாகுபாட்டுல அடங்கும் அதே மாதிரி திணைகளையே கூட தொல்காப்பியர் இந்த இயற்கையோடு சேர்த்த மாதிரிதான் பெயர் வச்சிருக்காரு அதாவது ஐந்திணைகள்ல வரக்கூடிய அந்த குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் அப்படின்னு பாலை அப்படின்னு சொல்லக்கூடிய இந்த அஞ்சும் பூவினுடைய பெயர்களாகவும் அதற்கு எதிராக புறத்துல அமைந்த புறத்தினைகள் சொல்லக்கூடிய வெற்றி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி இது எல்லாமே தாவரத்தினுடைய பெயர் தான் அமைஞ்சிருக்கு அதே மாதிரி ஒவ்வொரு திணைக்குமான மரங்களும் அந்த இலக்கணத்துல கூறப்பட்டிருக்கு அதாவது குறிஞ்சி திணைக்கு சந்தனம் தேக்கு அகில் அசோகு நாகம் மூங்கில் முதலானவையும் முல்லை நிலத்துக்கு கொன்றை காயா குறுந்தம் முதலானவையும் மருது நிலத்துக்கு காஞ்சி வஞ்சி மருதம் முதலானவையும் நெய்தல் நிலத்திற்கு கண்டல் புன்னை ஞாழல் முதலானவையும் பாலை நிலத்துக்கு உழிஞ்சை உவமை இருப்பை முதலான மரங்களும் கூறப்பட்டிருக்கு இந்த மாதிரி தாவரங்களையும் விலங்குகளையும் ஒவ்வொரு திணைக்கும் உரியதாக பகுத்து ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள் அடுத்து இந்த உயிர்களிடம் அன்பு காட்டக்கூடிய இந்த உயிர் இரக்கத்தை நம்ம இலக்கியங்கள் தவறாமல் பதிவு செஞ்சிருக்கு அதுல சிலவற்றை நம்ம இப்ப பார்க்கலாம் அகநானூற்றுல ஒரு பாடல்ல ஒரு வேடன் வந்து எய்து அம்பால ஒரு பெண்மண் வந்து உயிர் எழுந்திருது அதனுடைய இணைமானான அந்த ஆண்மான் புல் மேயாமல் தண்ணி குடிக்காம தன்னுடைய உடம்புல அம்பு பட்டது மாதிரி வருந்தி அழுது துடிச்சிட்டு இருக்கு அந்த மான் தன்னுடைய உயிரையும் விடணும்னு நினைச்சாலும் தன் தான் காக்க வேண்டிய பொறுப்புல இருக்கக்கூடிய அந்த இளம் கன்று மானை வந்து நினைச்சுக்கிட்டு உயிரோட இருந்துச்சு அப்படின்ற அந்த நிகழ்ச்சியை வந்து பதிவு செஞ்சிருக்காங்க புன்கண் கொண்ட திரிமறுப்பு இரலை மேய்ப்பதம் மறுத்த சிறுமையோடு நோய் கூர்ந்து நெய்தலம் படுவிச் சிந்நீர் உண்ணாது எகுரு மாந்தரின் இணைந்து கண் படுக்கும் பைத்தர வெம்பிய பால் சேர் அத்தம் அப்படின்ற இந்த அகநானூற்றுப் பாடல் இதை விளக்குது அதே மாதிரி பறவைகளுக்கு உள்ளார இருக்கக்கூடிய அந்த அன்பை இன்பத்தின் இகந்தொரு இலைத்தீந்த உளவையால் துன்புறுவும் தகையவே காடு என்றார் அக்காட்டுள் அன்புகொள் மடப்படை அசைய வருத்தத்தை மென்சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே அதாவது மிகுந்த துன்பம் தரக்கூடிய அந்த பாலை நில வழியில் இலைகள் எல்லாம் தீ போய் மரங்கள் எல்லாம் காய்ந்து நிற்கின்றன காற்று இல்லை வெப்பம் கொளுத்துகிறது அங்கே இருக்கக்கூடிய புறாக்கள் இரண்டு அதாவது ஆண்புறாவும் பெண் புறாவும் அந்த வெப்பம் தாங்காமல் வருந்திக் கொண்டிருக்கின்றன அவற்றில் பெண் புறாவிற்கு வருத்தம் அதிகம் இருக்கும் பொழுது அந்த ஆண்புறா தன்னுடைய மென்மையான சிறகால் விசிறி கொடுத்து அதனுடைய வெப்பத்தை தணிக்கிறது என்பதாக இப்பாடல் அமைந்துள்ளது அதாவது இந்த பறவைகளிடம் இருக்கக்கூடிய அந்த அன்பையும் இரக்க உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது அதேபோல் மனிதர்களுக்கு இடையே உள்ள அன்பு உணர்வை அகம் புறம் என்ற இரண்டின் வழியாகவும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன தமிழர்கள் உயிரியல் பற்றிய அறிவு மிக்கவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு மிகப்பெரும் சான்றாக விளங்குவது தொல்காப்பியம் தான் ஏனென்றால் தொல்காப்பிய மரபியலில் இந்த உயிரினங்களுக்கான ஆண்பார் பெயர்கள் பெண்பார் பெயர்கள் இளமைப் பெயர்கள் என பகுத்து ஆராய்ந்து அப்பெயர்களை பட்டியலிட்டுக் கொடுத்துள்ளார் ஏறு ஏற்றை ஒருத்தல் களிறு சேவல் இறலை கலை மோத்தை தகர் உதல் அப்பர் போத்து கண்டி கடுவன் ஆகிய இந்த 15 பெயர்களும் ஆண்பாலை குறிக்கக்கூடிய பெயர்கள் அப்படின்னு தொல்காப்பியர் குறிப்பிடுறாரு அதே மாதிரி பெண்பாலை குறிப்பிடுறதுக்கான பெயர்களையும் பட்டியலிடுறாரு பேடை பேடை பெட்டை பெண் மூடு நாகு கடமை அழகு மந்தி பாட்டி பிணை பிணவு பிடி இந்த 13 பெயர்களையும் பெண்பால் பெயராக குறிப்பிடுறார் அதே மாதிரி இளமைப் பெயர்கள்னு சொன்னேன் இல்லையா அந்த இளமைப் பெயர்களை பார்ப்பு பரல் குட்டி குருளை கன்று பிள்ளை மகவு மரி குழவி அப்படின்னு ஒன்பது இளமைப் பெயர்களை குறிப்பிடுறாரு இந்த மாதிரி இன்னும் பல பெயர்களையும் இவர் பட்டியலிட்டு சொல்றாரு அதாவது பெயர்களே ஒரு பொருளை ஒரு உயிரினத்தை குறிப்பதற்கு இத்தனை இருந்தால் தமிழன் உயிரியல் சார்ந்த அறிவில் எவ்வளவு சிறந்து விளங்கி இருப்பான் என்பதற்கு இது ஒன்றே சான்றாக இருக்கும் இந்த பாடத்தில் உயிரினங்களுடைய தோற்றம் அவற்றினுடைய பாகுபாடு அவற்றினுடைய வளர்ச்சி நிலைகள் அவை இலக்கியங்களில் எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அறிந்தோம் இனி அடுத்த வகுப்பில் வேறொரு பாடத்தோடு உங்களை சந்திக்கின்றேன் நன்றி வணக்கம்
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact