நிலவியல் sem 4 Dr Jayanthi sivasankar

Ug tamil Lessons579 words

Full Transcript

யூஜி தமிழ் லெசன் இன்னைக்கு நம்ம நிலவியல் அப்படிங்கிற பாடத்தை தான் பார்க்க போறோம் நிலவியல் அப்படின்னா என்னன்னா பூமி அதன் கூட்டமைப்பு கட்டமைப்பு இயற்பியல் இயல்புகள் வரலாறு மற்றும் அதனை உருவாக்கிய வழிமுறைகள் அவை தொடர்பான அறிவியலும் அவைப் பற்றிய ஆய்வும் தான் நிலவியல் அப்படின்னு சொல்லப்படுது இந்த நிலவியல் பாடத்தை நம்ம எப்படி எல்லாம் பார்க்கலாம் அப்படின்னா அதனுடைய இயற்கை வளங்கள் கனிமப் பொருட்கள் விண்ணிலவியல் வரலாறு நிலவியல் பொருட்கள் பாறை பாறையினுடைய வகைகள் மூன்று தாது கண்டறியும் சோதனை நிலவியல் கடிகாரம் நிலவியல் கொள்கை என்ற வகையில இவற்றை நாம் ஆராய்ச்சி செய்யலாம் இயற்கை வளங்கள் அப்படின்னு சொல்லும்போது என்னெல்லாம் இயற்கை வளங்கள் அப்படின்னா நிலநெய் நிலக்கரி மற்றும் இரும்பு செம்பு உரோனியம் போன்றவை உலோகங்கள் அனைத்துமே இயற்கை வளங்கள் அப்படின்னு அழைக்கப்படுகின்றது அடுத்து அவற்றில் இருக்கின்ற கனிமப் பொருட்கள் என்னென்ன அப்படின்னும் போது விலை உயர்ந்த இரத்தினக் கற்கள் கல்நார் மைக்கா களிமண் படிகக்கல் சிலிக்கா போன்ற கனிமப் பொருட்கள் பூமியிலிருந்து நமக்கு கிடைக்கின்றன இவையெல்லாம் கனிமப் பொருட்களாக இருக்கின்றன அடுத்தது நமக்கு விண் நிலவியல் அப்படின்னா என்னன்னா சூரிய குடும்பத்தில் உள்ள பிற கோள்கள் பற்றி ஆய்வு செய்வது விண் நிலவியல் அப்படின்னு சொல்லப்படுகின்றது நாம் அடுத்ததா எப்படி எல்லாம் இந்த நிலத்தைப் பற்றி இந்த நிலவியலைப் பற்றி ஆராய்ச்சி செஞ்சிருக்காங்க அப்படின்னு பார்க்கும்போது முதல்ல ஆராய்ச்சி செஞ்சவர் வந்து ஷென்குவா அப்படிங்கிறவர்தான் இவர் சீன நாட்டைச் சார்ந்தவர் சீனாவில் பல்துறை அறிஞராக விளங்கியவர் இவர் நில உருவாக்கம் பற்றிய கருதுகோலை முதல் முதலாக முன்வைக்கின்றார் இவர் மலைகள் அரிப்புக்கு உள்ளாகி வண்டல் படிவுகள் ஏற்பட்டதன் மூலமாக நிலப்பரப்பு உருவாகி இருக்கக்கூடும் அப்படிங்கறத சொல்றாரு இவருக்கு அப்புறமா யாரு அப்படின்னு பார்த்தீங்கன்னா ஸ்மித் மலைகள் அரிக்கப்பட்டு கடலுக்கு அடியில படிந்து பாறையாகி அது மேலும் வளர்ந்து நிலப்பகுதி ஆவதற்கு நீண்ட காலம் எடுத்திருக்கும் என ஸ்மித் இந்த கருத்தை அடிப்படையானது அப்படின்னு பூமியினுடைய வயது அக்காலத்தில் பொதுவாக கருதப்பட்டு வந்ததை விட மிக அதிகமாக இருக்கும் என வாதிட்டார் வில்லியம் ஸ்மித் ஜோர்ஜஸ் குவியர் சார்லஸ் லியல் போன்ற அறிஞர்களும் நிலவியல் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கின்றனர் அரிஸ்டாட்டில் உடைய மாணவராக இருக்கின்ற தியோபி ரேஸ்டல் எழுதிய பெரிய லித்தோன் என்னும் பாறைகள் பற்றிய புத்தகமே மிகச் சிறந்த நூலாக இருந்து வந்தது பல ஆண்டுகளாக இந்த நூலை வைத்தே பல்வேறு ஆய்வுகளானது செய்யப்பட்டது இவ்வாறு பல்வேறு அறிஞர்களும் நிலவியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்கள் அடுத்ததாக நாம் பார்க்க இருப்பது நிலவியல் பொருட்கள் நிலவியல் பொருட்கள் என்பது என்ன அப்படின்னா பூமியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் கனிமப் பொருட்கள் தான் நிலவியல் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றது நிலவியல் பற்றிய ஆராய்ச்சியில் அடுத்ததாக நமக்கு பல்வேறு தகவல்களை தரக்கூடியது இந்த பாறைகள் என்பது பாறைகள் என்பவற்றை நாம் மூன்று வகையாக பிரிக்கலாம் அவை தீப்பாறைகள் படிவு பாறைகள் உருமாறிய பாறைகள் தீப்பாறைகள் என்பது உருகிய குழம்பிலிருந்து உருவாகுகின்றன எடுத்துக்காட்டாக எரிமலைகள் என்பன இந்த தீப்பாறை வகையை சார்ந்தவைதான் படிவு பாறைகள் என்பன படிப்படியாக ஓரிடத்தில் சேர்ந்து பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் உருவாக்கப்படுவது படிவு பாறைகள் ஆகும் படிவுப் பாறைகளுக்கு என்ன சான்றுகள் அப்படின்னு பார்க்கும்போது நம்ம கட்டிடப் பொறியியல் இருக்கு இல்லையா அந்த துறையில சாலைகள் வீடுகள் சுரங்கங்கள் கால்வாய்கள் இதெல்லாம் செய்யறதுக்கு ரொம்ப உதவிகரமாக இருக்கிறது இந்த படிவு பாறைகள் தான் உருமாறிய பாறைகள் இவை உருவானபோது இருந்ததிலும் வேறொரு வெப்பநிலை அழுத்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாவதை உருமாறிய பாறைகள் என்கின்றோம் உருமாறிய பாறைகளுக்கு சான்று என்ன அப்படின்னு பார்த்தீங்கன்னா ஸ்லேட் சலவைக்கல் மார்பிள் இவையெல்லாம்தான் உருமாறிய பாறைகளுக்கான சான்றுகள் ஆகும் பாறைகளை உருவாக்கும் தாதுகளை கண்டறிந்து செய்யும் சோதனை இதுல முதல்ல பார்த்தீங்கன்னா மிளிர்வு அப்படிங்கறது உலோகம் மற்றும் உலோகம் அல்லாத பண்புகள் பாறையின் மேற்பரப்பிலிருந்து பிரதிபலிக்கும் அந்த ஒளி மூலம் அளவிடுதல் தான் இந்த மிளிர்வினை நம்மால் கண்டறிய முடியும் நிறம் அப்படின்னு சொல்லும்போது பாறையில் கலந்திருக்கின்ற மாசுகள் அவற்றின் நிறத்தை மாற்றக்கூடும் அவற்றின் மூலமாக கணக்கிடுதல் அப்படிங்கறது இந்த பாறையினுடைய நிறத்தை நம்மால் கண்டறிய முடியும் காந்தப்பண்பு அப்படிங்கறது காந்தத்தைக் கொண்டு காந்தப் பண்பு என்பது அளவிடப்படுகின்றது காந்தப் பண்பு காந்தத்தைக் கொண்டு காந்தப் பண்பானது அளவிடப்படுகின்றது அடுத்தது சுவை என்பது தாதுக்கள் பெரும்பாலும் ஹலைடு பண்பான சுவையோடு இருக்கின்றது அடுத்தது மனம் அப்படின்னா தாதுக்கள் குறிப்பிட்ட மனதினை உடையதாக இருக்கின்றது உதாரணமா கந்தகம் வந்து பாத்தீங்கன்னா அழுகிய முட்டை மனம் அதாவது வாசனை உடையதை வெளிப்படுத்துகின்றது நிலவியல் கடிகாரம் நிலவியல் கடிகாரம்ங்கிறது பூமி தன் வாழ்நாள்ல சந்தித்த மாற்றங்களை கணக்கிடுறதுதான் நிலவியல் கடிகாரம் பூமியோட அச்சு அதனோட சரிவு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும்போது பூமி சில மாற்றங்களும் இயற்கை அழிவுகளும் நடைபெறுது அவற்றை கணக்கிடுறதுதான் நிலவியல் கடிகாரமானது பயன்படுது இது போன்று பூமியில மாற்றத்தினால உருவானதுதான் சகாரா பாலைவனமும் இமயமலை சிகரமும் ஆகும் நிலவியல் கொள்கை அப்படிங்கறது பூமியில பல்வேறு படைப்புகள் உருவான விதங்களை விளக்கவும் அதன் படைகளின் ஒன்றுக்கொன்று சார்பான வயதுகளை கணிக்கவும் பயன்படுவதுதான் நிலவியல் கொள்கை எனப்படும் இதுவரை நம்ம இந்த பாடத்துல நிலவியல் பற்றிய செய்திகளை நாம் அறிந்து கொண்டோம் இந்த நிலவியல் பற்றிய ஆய்வுகளையும் அதனுடைய வரலாறுகளைப் பற்றியும் அவைகளை யாரெல்லாம் ஆராய்ச்சி செய்தார்கள் என்பதையும் நிலவில் இருக்கின்ற நிலவில் இருக்கின்ற பொருட்களைப் பற்றியும் பாறைகள் பற்றியும் அந்த பாறைகளை கண்டறிவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் அறிந்து கொண்டோம்

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

நிலவியல் sem 4 Dr Jayanthi sivasankar - YouTube Transcrip...