அனைவருக்கும் வணக்கம் யூஜி தமிழ் வகுப்பிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கின்றேன் பொதுத்தமிழ் நான்காம் பருவத்திற்கான தமிழும் அறிவியலும் எனும் பாடத்திட்டத்தில் தமிழரின் அறிவியல் சிந்தனைகள் எனும் அழகில் அறிவியலும் மனித வாழ்வும் எனும் பகுதியைப் பற்றி இந்த வகுப்பில் காணலாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் அந்த இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை ஏன் எதற்கு எப்படி என்று ஆராய்ந்து அறிதலும் தான் அறிந்து கொண்ட இயற்கையை இடத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுதலுமே அறிவியல் ஆகும் இன்றைக்கு நாம் கூறக்கூடிய அறிவியல் என்ற சொல் அறிவு அறிதல் எனும் சொற்களின் வழி தோன்றியது இன்றைய சூழலில் சயின்ஸ் எனப்படும் சொல் தனித்தனி துறைகளாக வளர்ந்துள்ளது அதாவது சமூக அறிவியல் சோசியல் சயின்ஸ் பொலிட்டிகல் சயின்ஸ் டெக்னிக்கல் சயின்ஸ் என பல்வேறு துறைகளாக வளர்ந்திருந்தாலும் மனிதர்கள் தங்கள் வாழ்வில் பயன்முறை அறிவியலாகவே இதனை வழக்கத்தில் கொண்டிருந்தனர் அதாவது அப்ளைடு சயின்ஸ் என்ற அடிப்படையிலேயே அறிவியல் மனிதர்களுடைய வாழ்வியலோடு இணைந்து இருக்கிறது நெருப்பு சக்கரம் மட்பாண்டம் வேளாண்மை நிலவியல் சுற்றுச்சூழல் கட்டடவியல் தாவரவியல் விலங்கியல் பறவையல் வானியல் கோளியல் உலோகவியல் உளவியல் மொழியியல் கலையியல் பண்பாட்டியல் விளையாட்டியல் மருத்துவ இயல் என மனிதனின் வாழ்வியலோடு இணைந்த அனைத்தையும் ஆராய்ந்து அறிந்து இன்றைக்கு அறிவியலாக நமக்கு வழங்கியுள்ளது ஒரு மனிதனுடைய வாழ்வின் அடிப்படைத் தேவையாக அமைபவை உணவு உடை உறைவிடம் இந்த அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவும் இன்னும் சில காரணங்களாலும் அறிவியல் மனிதனுக்கு இன்றியமையாத தேடலாக அமைந்தது உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக வேளாண் தொழில்நுட்பமும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கணக்கிட கணித அறிவியலும் அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பமும் இவை அனைத்திற்கும் ஆதாரமாக ஒரு மனிதன் மற்றொரு மனிதனோடு கருத்துப் பரிமாற்றம் கொள்வதற்கு மொழி சார்ந்த அறிவியலும் தேவைப்பட்டது அதுபோல் மனிதனது உடைக்கான தேவையின் விளைவாக நெசவுத் தொழில் சார்ந்த அறிவியலும் உறைவிடத்தின் தேவையின் பயனாக கட்டிடக்கலை சார்ந்த அறிவியலும் மனித வாழ்வியலோடு இணைந்தே இருக்கிறது முதல்ல இந்த உலகம் எப்படி தோன்றியது அப்படின்ற ஆராய்ச்சியை மனிதன் மேற்கொண்டிருக்கான் இதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியங்கள்ல நமக்கு கிடைக்குது தொல்காப்பியமும் இதைப்பற்றி நமக்கு எடுத்துச் சொல்லுது இந்த உலகம் எப்படி உருவாகி இருக்குது அப்படின்னு பார்த்தீங்கன்னா ஐம்பூதங்களால் தான் இந்த உலகம் உருவாகி இருக்கு இதை நிலம் நீர் தீ வலி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்ப அப்படின்று தொல்காப்பிய நூற்பா குறிப்பிடுது அது மாதிரி அறிவியல் அப்படின்றது அறிவு அறிதல் என்பதிலிருந்து தான் வந்துச்சுன்னு நம்ம முன்னாடியே பார்த்தோம் அப்போ இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிரினங்களை அறிவு சார்ந்து பகுக்க முடியும் அப்படின்ற அறிவியலை தொல்காப்பியர் நமக்கு கொடுத்திருக்காரு அதாவது ஓரறிவு உயிரிலிருந்து ஆறறிவு உயிர் வரைக்கும் என்னென்ன உயிரினங்கள் இருக்குது அப்படின்ற ஆராய்ச்சியை தொல்காப்பியர் செய்திருக்கிறார் சரி இப்போ இந்த அறிவியலும் மனித வாழ்வும் அதை நம்ம ஒரு அஞ்சு வகைக்குள்ளார அடக்கலாம் ஒன்னு வந்து வேளாண் அறிவியல் இரண்டாவது கணித அறிவியல் மூன்றாவது தொழில்நுட்ப அறிவியல் நான்காவது மருத்துவ அறிவியல் ஐந்தாவது பொருளாதார அறிவியல் வேட்டையாடி உணவு சேகரிப்போராக இருந்த மனித சமுதாயம் ஒரு கட்டத்தில் நிலையாக தங்கியிருந்து உற்பத்தி செய்யும் வேளாண் சமுதாயம் மாறியது வேளாண்மை என்பது மனிதன் தன் பயன்பாட்டுக்காக தாவரங்களையும் விலங்குகளையும் பயன்படுத்தி சுற்றுச்சூழலை உருமாற்றம் செய்யும் ஒரு செயல்பாடு அதற்கு மண் சார்ந்த அறிவியல் மிக முக்கியமானது எந்த மண்ணில் எந்தவிதமான பயிர்கள் விளையும் என்பதை அறிந்து அவற்றை அவன் பயிரிட்டான் அதற்கான கருவிகளான கற்கருவிகளையும் உலோகக் கருவிகளையும் மனிதன் கண்டுபிடித்தான் அடுத்து வேளாண்மைக்கு மிக முக்கியமான நீர் சார்ந்த அறிவியல் அதாவது மழை அறிவியல் முதலில் மழைநீரை நம்பியே பயிர் செய்யப்பட்டிருக்கிறது பிறகுதான் மனிதன் மழைநீரை தேக்கி வைத்து அதை எப்படி உழவுக்கு பயன்படுத்தலாம் என்று நீர் மேலாண்மையை அறிந்து கொண்டான் கடல் நீர் ஆவியாகி மேகமாக இருந்து பின்பு மேகங்கள் குளிர்ந்து மழை பொழியும் என்ற அறிவியலை இலக்கியங்களில் பாடியுள்ளான் கடல் முகந்து கொண்ட காமஞ்சூள் மாமழை சுடர் நிமிர் மின்னொடு வளன் இயர்பு அதாவது கடலிலிருந்து முகந்து கொண்ட நீர்தான் மாமழையாக பொழியும் ஆனால் அந்த மாமழை பொழிவதற்கான அறிகுறி வடகிழக்கு பருவக்காற்று வீசக்கூடிய காலமே இதனைத்தான் வளன் இயற்பு என்ற சொல் மூலம் விளக்குகிறது அப்பொழுது மனிதன் வெறும் மழையை மட்டும் ஆராயவில்லை மழை வருவதற்கான காரணமாக இருக்கக்கூடிய அந்த காற்றையும் ஆராய்ந்து அறிந்து கூறியிருக்கிறான் என்பதை நம்ம இதன் மூலம் தெரிஞ்சுக்கலாம் வேளாண்மையில் விதை விதைத்தல் தொடங்கி அறுவடை வரை செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளுமே அறிவியலாகத்தான் பார்க்கப்படுகிறது ஏனென்றால் விதைத்த விதைகளில் நாத்துகளை பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவது அதே இடத்தில் இருந்தால் அந்த பயிர் வளராது என்பதை அறிந்து அதைப் பிடுங்கி வேறொரு இடத்தில் நடுவது அதில் இடையில் வரக்கூடிய கலைகளை எடுப்பது வரப்பினை கட்டி நீரினை பாய்ச்சுவது முறையாக எருக்களை அதற்கு இடுவது பூச்சிகளிடமிருந்தும் பயிர்களை காப்பது பிறகு அறுவடை செய்வது அறுவடை செய்தவற்றை பண்படுத்தி பதப்படுத்தி விற்பனை செய்வது என்பது வரை வேளாண்மை சார்ந்த அறிவியல் என்பது ஒரு ஒரு கட்டமாக மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அடுத்து கணித அறிவியல் இதில் மொழி அறிவியலும் எண் அறிவியலும் வானியலும் அடங்கும் முதலில் மொழி அறிவியல் மொழி அறிவியல் என்பது ஒரு மொழியை அறிவியல் முறைப்படி ஆராயும் துறையினை வந்து மொழியியல் அப்படின்னு சொல்வாங்க இந்த மொழியியல்ல எழுத்துக்கள் எப்படி பிறக்குது இந்த எழுத்துக்கள் இணைந்து எப்படி ஒரு சொற்களாக உருகாகுது அப்படின்றதை பற்றியான அறிவியலும் அது ஒரு இடத்திற்கு ஏத்த மாதிரி எப்படி எல்லாம் மாறுபடு அடையுது அப்படின்றதை பத்தியும் நம்ம இந்த மொழியியல் படிப்போம் இது பற்றியான அறிவியலைச் சொல்வதுதான் மொழி அறிவியல் இதை தொல்காப்பியர் எப்படி மனிதனுடைய உடல்ல இருந்து இந்த சொற்கள் பிறக்குது அவனால எப்படி வந்து இந்த மொழிகளை இந்த மொழியினுடைய எழுத்துக்களை உச்சரிக்க முடியுது அப்படின்றதை பத்தி ஒரு நூற்பா எழுதி இருப்பாரு அது வந்து உந்தி முதலா உந்துவழி தோன்றி தலையினும் இடற்றினும் நெஞ்சினும் நிலையே அப்படின்ற அந்த நூற்பால இடம் பெற்றிருக்கு அடுத்து எண் அறிவியல் அளவும் நிறையும் எண்ணும் சுட்டி அப்படின்னு தொல்காப்பியர் மரபியல்ல ஒரு நூற்பால குறிப்பிடுவார் அதாவது இந்த எண்களை நம்ம எந்தெந்த இடத்துல பயன்படுத்துறோம்னா அளவு பெயர்களையும் நிறுத்தர்ற பெயர்கள்லயும் எண்ணிட்டு கூறக்கூடிய அதாவது எண்ணிக்கையை கூறக்கூடிய பெயர்களையும் நம்ம இந்த எண்களை பயன்படுத்துறோம் அப்படின்றதை தொல்காப்பியர் அதுல குறிப்பிடுவார் இந்த எண்களை எண்ணிக்கையோடு சேர்த்து சொல்ற மரபு வந்து நமக்கு பழங்காலத்திலேயே இருக்கு அதாவது எட்டுத்தொகை நூல்கள் பத்துப்பாட்டு அப்படின்ற இந்த எண்ணிக்கையை தொகுத்து சொல்ற மரபு நம்மகிட்ட இருக்கு அதே மாதிரி கீழ் இலக்க எண்கள் மேல் இலக்க எண்கள் அப்படின்ற முறையில இந்த எண்களை வகுத்துச் சொல்ற முறையும் நம்மகிட்ட இருந்திருக்கு இதுல வந்து கீழ்வாய் இலக்க எண் அப்படின்னு சொல்லிட்டு ஒன்று முக்கால் அரை கால் கால் அப்படின்னு இந்த கீழ்வாய் இலக்க எண்களும் மேல்வாய் இலக்க எண்கள்ல 10 100 1000 கோடி தாமரை பதுமம் அனந்த கோடி அப்படின்னு சொல்லக்கூடிய இது மேல்வாய் இலக்க எண்கள் ஆகவும் தமிழ் எண் கணித முறைகள்ல எண்களுக்கான பெயர்களாக அமைந்திருக்கு அப்போ இத்தனை பெயர்கள் எண்களுக்கு கொடுக்கப்பட்டிருந்ததுனால தமிழன் கணித அறிவியல்ல சிறந்து விளங்கி இருக்கிறான் அடுத்து வானியல் இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று ஆராய்ந்த மனிதன் வானத்தை ஆராய்ந்து வானத்தில் உள்ள கோள்கள் பற்றியும் விண்மீன்கள் பற்றியும் ஆராய்ந்து அறிந்திருக்கின்றான் சூரியன் பூமி வியாழன் புதன் வெள்ளி சனி போன்றவைப் பற்றியும் துணைக்கோளான திங்கள் பற்றியுமான செய்திகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன நாள் மீன் விராயக் கோள்மீன் போல என்ற பாடலில் நாள் மீன் என்பது விண்மீனையும் கோல்மீன் என்பது கோள்களையும் குறிக்கின்றது மேலும் ரோகிணி அருந்ததி ஓனம் ஆதிரை கார்த்திகை சப்தரிஷி மண்டலம் என்பன பற்றிய தகவல்கள் பலவற்றையும் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது கருவி வழியான அறிவியல் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பேயே தமிழன் வானத்தை கணிதத்தின் மூலம் ஆராய்ந்துள்ளான் என்பதை இதன் வழி அறியலாம் மூணாவதா நம்ம பார்க்கப்போறது தொழில்நுட்ப அறிவியல் மனுஷனுடைய அடிப்படை தேவைகள் எல்லாம் விரிவடையும் போது அவன் அந்த தேவையெல்லாம் நிறைவேத்துறதுக்காக அவன் நிறைய வழிகளை புதிய முறைகளை கையாள ஆரம்பிக்கிறான் அதன் விளைவா அவன் கண்டுபிடிச்ச எல்லாமே தொழில்நுட்ப அறிவியலாகத்தான் நம்ம அடையாளம் காணணும் அப்படி பார்த்தீங்கன்னா மனுஷன் முதல் முதல் கண்டுபிடிச்ச சக்கரம் அந்த சக்கரம் சக்கரத்துல மண்ணை பக்குவமா பிசைஞ்சு அதை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில சுட்டு ஒரு மட்பாண்டமா உருவாக்குற அந்த அறிவியலை கண்டுபிடிக்கிறான் அதே மாதிரி சக்கரங்கள் மூலமாக வண்டிகளை கண்டுபிடிச்சு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்லக்கூடிய அந்த அறிவியலை கண்டடையறான் இந்த பயணங்கள் மேற்கொள்வது என்பது தரை வழியாக மட்டும் இல்லாமல் கடல் வழி பயணங்களையும் வான்வழி பயணத்துக்கான கருவிகளையும் கண்டுபிடிச்சிருக்கலாம் இது இது பற்றியான குறிப்புகள் சங்க இலக்கியத்திலேயே காணப்படும் வருது அதாவது வளவன் ஏவா வான் உறுதி அப்படின்னு சொல்லிட்டு புறநானூறுல ஒரு தொடர் வருது அதாவது ஆள் இல்லாத ஒரு வான் உறுதி வானத்தில் சென்றதாக இந்த பாடல் வந்து தெரிவிக்குது அதே மாதிரி கடல்லையும் படகு தோணி தெப்பம் அந்த மாதிரி சின்ன சின்ன கலன்களையும் வங்கம் நாவாய் அப்படின்னு சொல்லக்கூடிய பெரிய வகையான கலன்களையும் வடிவமைச்சு தமிழர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்திருக்காங்க இதை நலீறு முன்னீர் நாவாய் ஓட்டி அப்படின்னு புறநானூர்ல இடம்பெறக்கூடிய ஒரு தொடரால கூட நம்ம அறிஞ்சுக்கலாம் அடுத்து மனுஷன் தங்கி வாழ்றதுக்கு ஏற்ப அமைத்துக் கொண்ட குடிசை முதல் அரண்மனை வரையிலான பெரிய கட்டுமானங்கள் பற்றிய அறிவியல் பழந்தமிழர்களுடைய கட்டுமானக் கலைக்கு இன்றைக்கும் சாட்சியாக விளங்கக்கூடியது எஞ்சி இருக்கக்கூடிய கோட்டைகளும் அரண்மனைகளும் கோயில்களும் தான் நான்காவது வகை மருத்துவர் அறிவியல் மனிதனுடைய பிறப்பு தொடங்கி இறப்பு வரை அவனுடைய உடல் சார்ந்த அனைத்து ஆய்வினையும் இந்த மருத்துவ அறிவியல் ஆராய்ந்துள்ளது இதனை பழங்காலத்தில் சித்தர்கள் செய்துள்ளனர் திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடல்கள் இதற்கு மிகச்சிறந்த சான்றாக விளங்குகின்றன ஒரு ஒரு உறுப்பை மாற்றி மற்றொரு உறுப்பை அவ்விடத்தில் பொருத்துவதை சிவபெருமான் கண்ணப்ப நாயனார் புராணம் நமக்கு விளக்குகிறது அதுபோல் நெடுவேல் ஊசி கொண்டு வெட்டுப்பட்ட காயத்தை தைத்த ஒரு முறையினை பதிற்றுப் பத்து பாடல் வழியும் நாம் தெரிந்து கொள்ளலாம் மீன் தேர் கொட்பீர் பணிக்கய மூழ்கி சிறல் பெயர் தன்ன நெடுவெள்ளூசி நெடுவசி பறந்த உடுவாழ் மார்பின் அம்பு சேர் உடும்பினர் சேர்ந்தோர் அல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி என்ற பாடல் அடிகள் விளக்குகின்றன இதுபோல் நோய் தொற்று தடுப்பு சார்ந்த அறிவியலும் தடுப்பு முறைகளும் தமிழரிடம் பரவலாக இருந்துள்ளது என்பதை கை மருத்துவம் அல்லது நாட்டு மருத்துவம் என்று சொல்லக்கூடிய வீட்டு மருத்துவ முறைகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன ஐந்தாவதாக பொருளாதார அறிவியல் பழங்காலத்தில் போருக்குச் சென்ற அரசன் போரில் வெற்றி பெற்று அதில் கிடைக்கக்கூடிய பொருட்களை பங்கிட்டு அனைவருக்கும் கொடுப்பான் இதனை பாதியிடு என்று புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது அரசுகள் உருவான பின்பு மக்களிடமிருந்து பல்வேறு வகையான வரிகளைப் பெற்று அவற்றை நாட்டின் வளத்திற்கும் நாட்டு மக்களின் பொருளாதார சூழ்நிலைகளை சமன் செய்யவும் பயன்படுத்தியுள்ளனர் இதற்கு பல்வேறு வகையான வரிகள் அந்த காலத்தில் இருந்திருக்கின்றன இறை திரை இரவு புறவு கடமை குடிமை ஆயம் கொண்டி உருபொருள் உளுகுபொருள் தெருபொருள் என பல்வகையான வரிகள் பற்றி நம் இலக்கியங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் மனிதன் எவ்வாறு பொருள் ஈட்ட வேண்டும் ஈட்டிய பொருளை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் அவற்றை எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிவியலே பொருளாதார அறிவியல் இதுவரை மனித வாழ்வும் அறிவியலும் என்ற பகுதியில் மனித வாழ்வியலோடு இணைந்த அறிவியலை வேளாண் அறிவியல் கணித அறிவியல் தொழில்நுட்ப அறிவியல் மருத்துவ அறிவியல் பொருளாதார அறிவியல் எனும் ஐந்து பகுப்பாக பிரித்து அவற்றினுடைய உட்பிரிவுகளோடு பார்த்தோம் இனி அடுத்த வகுப்பில் வேறொரு பாடத்தோடு உங்களை சந்திக்கின்றேன் நன்றி வணக்கம்
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact