வணக்கம். இன்னைக்கு நாம பார்க்க போற பதிவு நீர்நில மேலாண்மை. நீர்நில மேலாண்மைனா என்ன? தமிழ் இலக்கியத்துல நீர்நில மேலாண்மை குறித்த என்னென்ன கருத்துக்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கு? பழந்தமிழர் நீர்நிலைகளை எப்படி கட்டமைச்சாங்க? எப்படி செயல்படுத்துனாங்க? இது எல்லாத்தையும் இந்த பதிவுல பார்க்கலாம். பதிவுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்முடைய சேனல் யன் அபிஷயல் கற்பம் தமிழை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நான் தமிழ்நதி. நீர் மற்றும் நில வளங்களுடைய பயன்பாடு அதை நிர்வகிக்க கூடிய செயல்முறை இதைதான் நீர் நில மேலாண்மை அப்படின்னு சொல்றோம். ஒரு மனிதனுடைய அடிப்படை தேவை மூன்று விஷயம் உணவு உடை இருப்பிடம். இந்த மூன்றுமே நிலம் சார்ந்துதான் நம்மளுக்கு கிடைக்கும். இந்த மூன்றுல உணவும் உடையும் வேளாண்மை மூலமாதான் நம்மளால பெற முடியும். இந்த வேளாண்மைக்கு நிலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நீரும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிலத்தையும் நீரையும் நாம சரியான முறையில பயன்படுத்துனா மட்டும்தான் நம்முடைய சமூகத்துக்கு அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இந்த மூணுமே கிடைக்கும். வேளாண்மைக்கு நிலம் முக்கியமானதா இருக்கிறதுனால வேளாண்மையை அடிப்படையா வச்சு நில மேலாண்மையை சொல்லலாம். இதே மாதிரி நீர் மேலாண்மை அப்படிங்கிற போது நீர்நிலைகளை அமைத்தல் மழைநீரை சேகரித்தல் நிலத்தடி நீரை அதிகப்படுத்துறது தடுப்பு அணைகள் அமைக்கிறது ஒவ்வொரு சொட்டு நீரையும் முறையா பயன்படுத்துறது நீர் தேக்கங்கள் அமைக்கிறது வெள்ள சேதங்களை முறியடித்தல் இந்த மாதிரியான பாதுகாப்பு முறைகளை நம்ம கையாளறதுதான் நீர் மேலாண்மை அப்படின்னு நம்ம சொல்றோம். அடுத்ததா தமிழ் இலக்கியத்தில கூறப்பட்டுள்ள நீர்நிலை மேலாண்மை பற்றிய கருத்துக்களை பார்க்கலாம். நீர் ஆதாரத்தை தமிழ் மக்கள் தங்கள் உயிருக்கும் மேலானதா பாதுகாத்து போற்றி வந்திருக்காங்க. மழை நீரை சேமித்து சேமித்த நீரை பிறம்பட பயன்படுத்துறதன் மூலமாதான் இன்னை வரைக்கும் வேளாண்மை சிறப்பா நடைபெற்று வருது. புறநானூற்று பாடல் ஒன்றுல நீரினுடைய அவசியத்தை கூறும்போது நிலத்துக்கும் நீருக்குமான உறவு உடம்புக்கும் உயிருக்குமான உறவு போன்றது அப்படின்னு சொல்லி பாடப்பட்டுள்ளது. மழைநீரை சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர்நிலைகளை அமைக்கிறதுதான் ஒரு மன்னனுடைய பலையாய கடமை அப்படின்னும் நிலம் எங்கெல்லாம் பள்ளமா இருக்குதோ அங்கெல்லாம் நீர்நிலைகளை அமைக்கக்கூடிய மன்னர்கள் தான் இந்த உலகத்தில அழியாத புகழை பெறுவர் அப்படின்னும் புறநானூர்ல பாடப்பட்டுள்ளது. இது மட்டுமி இல்லாம ஏரியுடைய அமைப்பு எப்படி இருக்கணும் அப்படின்னும் புறநானூறு பாடல் ஒன்று உள்ளது. ஏரி அப்படிங்கிறது அதனுடைய கரை நீளம் குறைவாகவும் அதிக நீர் கொள்ளளவு கொண்டதுமா இருக்கணும். எறியுடைய வடிவம் எட்டாம் பிறை வடிவத்தில இருக்கணும் அப்படின்னும் பாடப்பட்டுள்ளது. கீழ்கணக்கு நூல்கள்ல ஒன்றான திருபஞ்ச மூலத்தில குளம் அமைக்கக்கூடிய முறை பற்றி காரியாசான் பாடி இருக்கிறாரு. குளம் அமைக்கும் போது வரத்துக்கால் மதகுகள் மிகைநீர் வெளியேற்றக்கூடிய கலிங்கு தூம்பு இதெல்லாம் இடம்பெறணும் அப்படின்னு சொல்லி சொல்லி இருக்கிறாரு. திரிகடுகத்தில வரத்துக்காளுடைய அமைப்பு பற்றி கூறப்பட்டிருக்கு. தாய்ப்பால் அருந்தாத குழந்தையும் கல்வி கற்காத நிலையில இருக்கக்கூடியவர்களாலயும் எப்போதுமே சிறக்க முடியாது. அதே மாதிரிதான் ஒரு குளத்துக்கு வரத்துக்கால் சரியான முறையில் அமைக்கப்படல அப்படின்னா இந்த குளத்தால அந்த நாட்டுக்கு எந்த பயனுமே இருக்காது அப்படின்னு கூறப்பட்டிருக்கு. நான்மணி கடிகையில மிகுதியா வரக்கூடிய ஆற்று வெள்ள நீரை ஏரிகள்ல சேமிக்கிறது ஒரு நாட்டினுடைய சிறப்பு அப்படின்னு கூறப்பட்டிருக்கு. அகநானூற்று பாடல் ஒன்று பெருங்குல காவலன் போல அருங்கடி அன்னையும் துயில் மறந்தனலே அப்படின்னு பாடப்பட்டிருக்கு. அதாவது பனிக்காலம் மலைக்காலம்னு எதுவா இருந்தாலும் சரி பகல்லையும் இரவு நேரத்திலயும் ஏரியை பாதுகாக்க கூடிய காவலன் மாதிரி குழந்தையை பாதுகாக்க தாய் தன்னுடைய தூக்கத்தையே மறந்து இருக்கிறது அப்படின்னு சொல்லிட்டு ஒரு தாய்க்கு காவலனை உவமையாக்கி பாடி இருக்கிறாங்க. இந்த பாடல் மூலமா ஏரியை தங்களுடைய குழந்தைகளுக்கு ஈடாவே பழந்தமிழ் மக்கள் பாதுகாத்து வந்திருக்காங்க அப்படிங்கிறத நம்மளால அறிந்து கொள்ள முடியும். மணிமேகலையில சீத்தலை சாத்தனார் திருங்கை அப்படிங்கிற அமைப்பு பத்தி பாடி இருக்கிறாரு. நீர்நிலைகளில இருந்து விகநீரை வெளியேற்றுவதற்காக கலிங்கு அப்படிங்கிற அமைப்பை பழந்தமிழ் மக்கள் பயன்படுத்தி இருக்காங்க. ஆரம்ப காலகட்டத்தில இந்த கலிங்க அமைப்பு சுருங்கைகளா இருந்திருக்கு. சுருங்கை அப்படிங்கிறது பூமிக்கடியில செல்லக்கூடிய ஒரு குழாய் போன்ற அமைப்பு. நீர் நிலைகள்ல நீர் மிகுதியா ஆகும்போது அந்த சுருங்கை வழியா வேளாண்மைக்கு தேவையான நீர் வெளியேற்றப்படும். இதை தவிர்த்து மிகு நீரை வெளியேற்றதுக்காக மதகு, குமிழளித்தூம்பு போன்ற தொழில்நுட்பத்தையும் பல தமிழர்கள் பயன்படுத்தி இருக்காங்க. மதகு அப்படிங்கறது ஒரு அடைப்பு மாதிரியான ஒரு பகுதி. மிகு நீர் ஆகும்போது அந்த மிகு நீரை வெளியேற்றுவத்காக அந்த அடைப்பை எடுத்துட்டு அதன் வழியா நீரை வெளியேற்றது உண்டு. குமளித்தூம்பு அப்படிங்கிறது நீர்நிலைகளுடைய அடி பாகத்துல இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. கிட்டத்தட்ட அது ஒரு தொட்டி மாதிரி இருக்கும். இதுல ரெண்டு பகுதிகள் காணப்படும். நீரோடி துளை, சேரோடி துளை அப்படிங்கிறது. மேல் பகுதியில் இருக்கக்கூடிய துளையினுடைய பெயர்தான் நீரோடி துளை. நீரை வெளியேற்றக்காக இது பயன்படுத்துவாங்க. நீர் அதிகமாயிட்டு மிகு நீர் ஏற்படக்கூடிய காலகட்டத்தில நல்ல நீற்றல் தெரிஞ்ச ஒரு நபர் நீர்நிலையுடைய அடிப்பகுதிக்கு போயி அந்த குமளி தூம்பை மேல ஏத்தி விடுவாரு. அது மேல இருக்கக்கூடிய நீரோடி துளை வழியா வேளாண்மைக்கு தேவையான இல்லனா மக்களுடைய பயன்பாட்டிற்கு தேவையான நீர் வெளியேற்றப்படும். இந்த சேரோடி துளை அப்படிங்கறது அந்த நீர்நிலையினுடைய அடிப்பாகத்தில இருக்கக்கூடிய சேரும் வண்டல் மண்ணும் சேர்ந்து அந்த சேரோடி துலை வழியா வெளியேற்றப்படுறது உண்டு. வண்டல் மண் விவசாயத்துக்கு ஒரு நல்ல உரம் அப்படிங்கறதுனால பழந்தமிழர்கள் இந்த ஒரு முறையை கையாண்டு வந்திருக்காங்க. இதே மாதிரி பெருக்கெடுத்து வரக்கூடிய நீரை தடுக்கறதுக்காக தடுப்பணை கட்டப்படவும் செஞ்சுச்சு. இந்த தடுப்பணைகள் கற்கள் கொண்டு கட்டப்பட்டதுனால இதற்கு கற்சிறை அப்படிங்கிற பேரும் வழங்கப்பட்டுச்சு. இப்படி பல தமிழர்கள் என்ன மாதிரியான நீர் மேலாண்மையை கையாண்டாங்க அப்படின்னு சொல்லிட்டு பழந்தமிழ இலக்கியங்களலையும் எழுதி வச்சிருக்காங்க. அடுத்ததா பல தமிழர்கள் எப்படி நீர்நிலைகளை கட்டமைச்சாங்க அப்படின்னு சொல்லிட்டு பார்க்கலாம். பழங்கால மக்கள் நிலத்திற்கு ஏற்ப நீர் பாசன முறைகளையும் மேற்கொண்டாங்க. ஆற்று நீர்பாசனம், கிணற்று நீர்பாசனம், ஏரி நீர்பாசனம், மலைநீர் பாசனம், அடுக்கு நீர்பாசனம் இந்த மாதிரி பல முறைகளை கையாண்டு நீர் மேலாண்மை செய்து தங்களுடைய வேளாண்மையை அதிகப்படுத்தவும் செஞ்சாங்க. சங்க காலத்தில மன்னர்களும் சிற்றரசர்களும் கூட வேளாண்மையை செலிக்கிறது்காக ஆயிரக்கணக்கான நீர்நிலைகளை உருவாக்கி அந்த நீர்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி பெயர்களையும் இட்டு வழங்கி வந்தாங்க மன்னர்கள் வாழ்ந்த கோட்டையினுடைய புறத்தை அமைக்கப்பட்ட நீர்நிலையானது அகலி அப்படின்னும் கடலுக்கு அருகே கட்டப்பட்ட கிணறு ஆளிக்கிணறு அப்படின்னும் பலவகை பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர் இளஞ்சி அப்படின்னும் மக்கள் பருகக்கூடிய நீர்நிலையை ஊரினி அப்படின்னும் பல பல பேரிட்டு அழைச்சாங்க. இதை தவிர்த்து ஓடை, கட்டுக்கிணறு, கடல், கம்வ்வாய், கலிங்கு, குட்டை, குமிழலி, கூவம், கூவல், தேனி, சிறை, தாங்கல், திருக்குளம், வெப்பக்குுளம், பொய்கை, மதுகு, மருகால், வாய்க்கால் இந்த மாதிரி நீர்நிலைகளுக்கு ஏத்த மாதிரி பல பெயர்களை இட்டு வழங்கி இருக்காங்க சங்க கால மன்னர்கள். அடுத்ததா பழந்தமிழர்களுடைய நீர் மேலாண்மை. பழந்தமிழர்கள் நிறைய வகையான நீர் மேலாண்மையை கையாண்டு வந்திருக்காங்க. நான் சான்றா ஏரியை மட்டும் வச்சு உங்களுக்கு சொல்றேன். பெருக்கெடுத்து வரக்கூடிய ஆற்று நீரை கால்வாய் வழியா ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுச்சு. ஆற்றுல நீர் குறைவாக ஓடும்போது அந்த நீரை முழுவதுமா தடுத்து ஏரிகளை நிரப்புறதோடு மட்டும் இல்லாம அதை தாண்டி இருக்கக்கூடிய பல நீர்நிலைகளையும் நிரப்பி வச்சாங்க. இவர்களுக்கு பேரு நீராணிக்கர்கள் அப்படின்னு சொல்லி வழங்கப்பட்டுச்சு. இந்த நீராணிக்கர்கள் காற்றுல ஓடக்கூடிய நீரை ஏரிகள்ல சேமிக்கிறது மட்டுமி இல்லாம விலை நிலங்களுக்கும் தேவையான சமயத்துல எடுத்து போறதுதான் இவங்களுடைய பணியா இருந்துச்சு. ஏரி நீரை பாதுகாக்கிறவருக்கு நீர்க்கட்டியார் அப்படிங்கிற பெயர் இருந்துச்சு. இவருடைய வேலை என்ன அப்படின்னா ஏரியில மீன் பிடிக்கிறது, பரிசல் இயக்குறது நீர் குறைவா இருக்கக்கூடிய காலத்துல அந்த ஏரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துறது. இந்த மாதிரி எந்த வேலையை செய்றதா இருந்தாலும் நீர்கட்டியார் கிட்ட அனுமதி வாங்கிட்டுதான் செய்ய முடியும். ஏரி கரையை பாதுகாப்பவருக்கு கரையார் அப்படிங்கிற பெயர் இருந்துச்சு. இவருடைய வேலை என்ன அப்படின்னா ஏரியுடைய கரை உடைஞ்சது அப்படின்னா ஏரி நீர் நாசமாகுறது மட்டும் இல்லாம அங்கு வாழக்கூடிய மக்களுடைய நிலையும் மோசமாயிரும். அதனால ஏரியுடைய கரைக்கு எந்த சேதமும் ஏற்படாம இந்த கரையார் அதை பாதுகாத்துட்டு வரணும். ஏரிகளை உடைப்பது மிகப்பெரிய பாவம் அப்படின்னு சொல்லிட்டு இலக்கியங்கள்ல் பல பாடல்கள் இருந்தாலும் அதெல்லாம் மதிக்காத சில மன்னர்கள் தங்களுடைய பகைமையை காட்டுறதுக்காக நேர்மையான முறையில போரிடாம நீர்நிலைகளை அளிக்கிறதுண்டு. இந்த மாதிரி பகைவர்களால நீர்நிலைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராமல் பாதுகாக்க கூடியவர்களை குலத்து காப்பாளர்கள் அப்படின்னு பெயரிட்ட அழைச்சாங்க. ஏரியை பாதுகாக்குறதுக்கு எத்தனை பேர் இருந்தாலும் சில சமயத்துல ஆடு மாடுகளோ இல்லன்னா மனிதர்களோ கூட ஏரியில விழுந்து இருக்கிறது உண்டு. அந்த காலகட்டத்தில அவர்களை அப்புறவப்படுத்துறதும் தேவையில்லாத தாவரங்களோ இல்லன்னா பாசி படியறதோ இருந்ததுன்னா அதையும் தூய்மை செய்யற கூடியவர்களை குளத்து பள்ளர்கள் அப்படின்னு பெயரிட்டு அழைச்சிருக்காங்க. ஏரிகளிலிருந்து வேளாண்மைக்காக திறந்து விடக்கூடிய நீர் வாய்க்கால் மூலம் வயல்களுக்கு சேர்ற வரைக்கும் நீர் வெட்டியார் இல்லன்னா நீர்பாச்சியார் பொறுப்பேத்துக்கிடணும். பல தமிழர்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வேளாண்மைக்கு பயன்படக்கூடிய நிலத்தையும் நீரையும் தங்களுடைய உயிருக்கு மேலானதா போற்றி பாதுகாத்து வந்திருக்காங்க. ஆனா வேளாண்மை பற்றி கொஞ்சம் கூடம் தெரியாத இளம் பரம்பரையை நாம உருவாக்கிட்டு வரோம். அரிசியும் பருப்பும் கணியில் தான் உருவாகிட்டு வருது அப்படிங்கிற அளவுக்கு இன்றைய சமுதாயம் மாறிக்கொண்டே இருக்குது. இன்றைய தலைமுறையினரும் வேளாண்மை பத்தி தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுக்காக ரஷ்ய இலக்கியத்தில நிக்கேல் சால்டிகோ அப்படிங்கிற எழுத்தாளர் ஒரு சிறுகதையை பதிவிட்டுருக்கிறாரு. இந்த சிறுகதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா கமெண்ட்ல சொல்லுங்க. இந்த சிறுகதையை ஒரு சிறிய காணொளியா நான் பதிவிடுகிறேன். இந்த பதிவுல நீர்நில மேலாண்மை இலக்கியத்தில நீர் மேலாண்மை பற்றி என்னென்ன கருத்துக்கள் எல்லாம் இடம்பெற்றிருக்கு? பல தமிழர்கள் நீர்நிலைகளை எப்படி கட்டமைச்சாங்க? அதை எப்படி மேம்படுத்துனாங்க? இது எல்லாத்தையும் இந்த பதிவுல பார்த்தோம். இந்த பதிவு இதோட முடிவு பெறுது. மீண்டும் ஒரு தமிழ் உரையாடலுடன் சந்திக்கிறேன். நான் தமிழ் நதி. நன்றி.
Get free YouTube transcripts with timestamps, translation, and download options.
Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact