தொழில்நுட்ப மேலாண்மை தமிழும் அறிவியலும் tholil nutpa melanmai in tamil

web Tamil Nanban2,827 words

Full Transcript

வணக்கம் நண்பர்களே நான் உங்கள் வெப் தமிழ் நண்பன் இன்னைக்கு நாம பார்க்கப்போறது தமிழும் அறிவியலும் என்கிற தொடர் காணொளி வரிசையில தமிழருடைய அறிவியல் சிந்தனைகளை பார்த்துட்டு இருக்கோம் குறிப்பா வந்து இன்றைக்கு தொழில்நுட்ப மேலாண்மை குறித்து பார்க்க போறோம் முதல்ல தொழில்நுட்பம்னா என்னன்னு பார்க்கலாம் அதற்கு அடுத்து தொழில்நுட்பத்துடைய இன்றி அமையாமை இன்னைக்கு எந்த அளவுக்கு அது தேவைன்றதை பார்ப்போம் அதுமட்டும் இல்லாம இந்த உயிரின படி மலர்ச்சி நிலைக்கும் தொழில்நுட்பத்துக்கும் என்னெல்லாம் சம்பந்தம் அப்படின்றதை பார்த்துட்டு அதற்கு அடுத்ததாக தமிழர்கள் என்ன மாதிரி தொழில்நுட்பத்தை எல்லாம் பயன்படுத்தினாங்கன்றத பல இலக்கிய சான்றுகள் வாயிலாக நம்ம பார்த்து தெரிஞ்சுக்கலாம் வாங்க வீடியோக்குள்ள போலாம் இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்துட்டு இருக்கறவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க பக்கத்துல இருக்கற பெல் பட்டனை கிளிக் பண்ணுங்க அப்பதான் நான் போடக்கூடிய ஒவ்வொரு வீடியோவும் உடனுக்குடன் உங்களை வந்து சேரும் பல கோடி மக்கள் வாழக்கூடிய இந்த உலகத்துல பார்த்தீங்கன்னா தொழில்நுட்பம் அப்படின்றது இன்றைக்கு மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது நாம் பேசுறதுக்கு பயன்படுற இந்த செல்பேசி தொடங்கி நாம் பார்க்கக்கூடிய தொலைக்காட்சியிலிருந்து நாம் கேட்கக்கூடிய வானொலியிலிருந்து மின்விசரியில் இருந்து நாம் போகக்கூடிய அந்த போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட எல்லாமே வந்து பார்த்தீங்கன்னா தொழில்நுட்பத்தால் மட்டுமே இயங்குகிறது அப்போ அந்த தொழில்நுட்பங்கள் அப்படின்றது எதை குறிக்குது எந்த அளவுக்கு வந்து அதை தமிழர்கள் பயன்படுத்துறாங்க அப்படின்றதை பார்த்தோம் அப்படின்னா இந்த தொழில்நுட்பம் அப்படின்றதை புரிஞ்சுக்கிறதுக்காக ஒருத்தருடைய வரையறையை நம்ம எடுத்துக்கிறோம் அவர் யாருன்னா தியோடர் ஓன் கர்மான் அப்படின்ற அறிஞர் அவர் என்ன சொல்றாருன்னா அறிவியல் பொறியியல் தொழில்நுட்பம் இந்த மூணுத்தையும் வந்து ரொம்ப எளிமையா மக்களுக்கு புரியற மாதிரி வந்து எடுத்து சொல்லி இருக்காரு என்னன்னு பார்த்தோம்னா அறிவியல்ன்றது இந்த உலகம் எப்படி இருக்கு அப்படின்றதை சொல்றது அதுமட்டும் இல்லாம இந்த உலகம் எப்படி உருவாச்சு அப்படின்ற அதை ஆய்ந்து சொல்லக்கூடியதுதான் வந்து அறிவியல் அதுக்கு அடுத்து பொறியியல் அப்படின்னா என்னன்னா இதுவரை இல்லாத இந்த உலகத்தை அதே மாதிரி உலகப் பொருட்களை அதனுடைய செயல்முறையை தொழில்நுட்பத்தை சொல்றதுக்கு பேர்தான் வந்து பொறியியல் அப்படின்னு சொல்லி சொல்றாங்க அடுத்து தொழில்நுட்பம் அப்படின்றது என்னன்னு சொல்லி பார்த்தீங்கன்னா பொறியியல் கருவிகள் ஆய்வுக் கருவிகள் இதெல்லாம் வந்து எப்படி செயல்படுது எப்படி அதை பயன்படுத்தணும் அப்படின்றதெல்லாம் உள்ளடக்கியதுக்கு பேர்தான் வந்து தொழில்நுட்பம் அப்படின்னு சொல்றோம் எடுத்துக்காட்டா பார்த்தோம்னா இந்த உலகம் அப்படின்றது உருண்டையா இருக்கு இங்க வந்து நிறைய மனிதர்கள் எல்லாம் வாழ்ந்துட்டு இருக்காங்க இங்க இருக்கக்கூடிய அந்த மனிதர்கள் கீழே விழாம சுழலும் போது கூட பாதுகாக்கக் கூடியது இதெல்லாமே இந்த ஈர்ப்பு விசை அப்படின்னு நம்ம தெரிஞ்சு வச்சிருக்கோம் அதுக்கு அடுத்து அந்த ஈர்ப்பிசை எப்படி வந்தது என்ற அந்த வரலாற்றை எல்லாம் எடுத்து பார்த்து தெரிஞ்சுக்கலாம் ஆனா இங்க பூமியில் வாழக்கூடிய ஒரு மனிதன் விண்வெளிக்கு போக முடியுமானா முடியும் அந்த போகக்கூடிய ஒரு பொருளை உருவாக்குறாங்க இல்லையா அதுதான் வந்து பொறியியல் அப்படின்னு சொல்றோம் அப்படி ஒரு செயற்கை கோளை நம்ம உருவாக்கி எங்கிருந்து நம்ம நிலவுக்கு போறதோ இல்ல இங்கிருந்து செவ்வாயை ஆராய்ச்சி பண்றதோ எங்கிருந்து வியாழன் கோலை ஆராய்ச்சி பண்றதோ இங்கிருந்து சூரியனை ஆராய்ச்சி பண்றதோ அதை ஆராய்ச்சி பண்ணுவதற்காக ஒரு செயற்கைக்கோளை உருவாக்குறோம் அது பொறியியல் அந்த செயற்கைக்கோளை எப்படி செயல்படுத்துவது அந்த அதுக்குள்ள இருக்கக்கூடிய அந்த பொருட்களை எல்லாம் வந்து எப்படி நம்ம இயக்குறது கருவிகளை எப்படி இயக்குறது அப்படின்றதை பத்தி பார்க்கக்கூடியது தான் வந்து தொழில் நுட்பம் அதனால இன்றைக்கு மட்டும் கிடையாது பன்னெடும் காலத்திற்கு முன்னாடியே நம்முடைய தமிழர்கள் இந்த அறிவியல்ல முன்னேறி இருக்காங்க பொறியியல்ல முன்னேறி இருக்காங்க அது சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னேறி இருக்காங்கன்றத நம்ம வரலாற்று சான்றுகள் இலக்கிய சான்றுகள் மூலமா நம்ம தெரிஞ்சுக்கலாம் சரி இந்த தொழில்நுட்பம் அப்படின்றது ஏன் இன்றி அமையாத ஒன்றாக இருக்கிறது அப்படின்னு சொல்லி எடுத்து பார்த்தோம்னா அறிவியலும் தொழில்நுட்பமும் இல்லைன்னா இன்றைக்கு மனிதன் தடுமாறுவான் என்கிற நிலைதான் இருக்கிறது அதனால இன்றைக்கு மனிதனை வழிநடத்தக் கூடியதாக அறிவியலும் தொழில்நுட்பம் தான் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் சரி இந்த அறிவியல் தொழில்நுட்பம் அப்படின்றது திட்டமிடுதல் மனிதனுடைய ஆற்றலையும் எந்திர ஆற்றலையும் ஒருங்கிணைத்தல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் இயக்குதல் கட்டுப்படுத்தல் இந்த மாதிரி பலவற்றையும் ஒன்றாக செய்யக்கூடிய அந்த மேலாண்மை கூறுகளை மனிதன் ஆய்ந்து கண்டுபிடிச்சிருக்கான் அப்படி கண்டுபிடிச்சதுனாலதான் அவனால் வந்து உயர்ந்த இலக்குகளை அடைந்து மனிதன் ஆறறிவு உடையவன் மற்ற விலங்குகளில் இருந்து மாறுபட்டவன் உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்வதற்கு இதுதான் வழிவகுத்திருக்கு அதே மாதிரி மனிதனுடைய அந்த இலக்குகளை எல்லாம் மிக எளிதாக சென்று அடைவதற்கு தொழில்நுட்பம் தான் முழுமுதற் காரணியாக இருந்து வருகிறது என்பதை நாம் மறுக்கவே முடியாது சரி நம்ம தொடக்கத்திலிருந்து வருவோம் இந்த உலகத்துல வந்து முதல் முதல்ல வந்து மனிதன் தோன்றினான் தோன்றி கொஞ்சம் கொஞ்சமா வந்து பழைய கற்காலம் புதிய கற்காலம் உலோக காலம் அப்படின்னு கொஞ்சமா வந்து முன்னேற்றம் அடைஞ்சு இன்றைக்கு இருக்கக்கூடிய அளவில் தொழில்நுட்ப அளவில் அவன் முன்னேறி நிற்கிறான் சரி இது சார்ந்த அறிவை பெறுவதற்கு நம்ம பல நூல்களை படிக்க வேண்டி இருக்கும் குறிப்பா பார்த்தீங்கன்னா சார்லஸ் ராபர்ட் டார்வின் அப்படின்றவருடைய உயிரினங்களின் தோற்றம் என்கிற நூல் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது 1859ல இந்த புத்தகம் வெளிவந்திருக்கு சார்லஸ் டார்வின் அல்லது டார்வின் அப்படின்னு சொல்லி சொன்னாவே எல்லாருக்குமே தெரியும் பரிணாம வளர்ச்சி கோட்பாடுகளை கொடுத்தவர் உலகத்துக்கே வந்து அவர்தான் அப்படின்னு எல்லோருமே வந்து அவங்க மனசுல வந்து பதிவு பண்ணி வச்சிருக்காங்க அப்படிப்பட்ட அந்த பரிணாம கோட்பாடுகளை இந்த புத்தகம் பார்த்து நம்ம தெரிஞ்சுக்கலாம் அதற்கு அடுத்ததாக 1971 ஒண்ணுல டார்வின் மனிதனின் மரபு வழி என்ற நூலை வெளியிடுறார் இதுல வந்து பார்த்தீங்கன்னா மனிதனின் மூதாதியர் குரங்கிடமே அப்படின்ற கருத்தை வந்து எடுத்துச் சொல்றாரு இதுக்கு வந்து பெரிய ஒரு விவாதமே உலகம் முழுக்க நடந்தது அது எப்படி சொல்லலாம் மனிதன் வந்து குரங்குல இருந்து வந்தவனா இன்னைக்கு கூட நம்ம திட்டுவோம் இல்லையா குரங்கு அப்படின்னு திட்டும்போது நமக்கு கோவம் வருது ஏன்னா குரங்கு நம்ம பார்த்திருக்கோம் பார்க்காதவங்க கூட விட்டுருப்பாங்க குரங்கு அதனுடைய சேட்டைகள் எல்லாம் பார்க்கும்போது நம்மை அப்படி சொன்னா நமக்கு வந்து சுருன்னு கோவம் வருது அப்படி 12 காலத்துக்கு முன்னாடி நம்மளோட பயங்கரமா கோவப்படுற ஆட்களா இருந்திருப்பாங்க அதனால பயங்கரமா வந்து கோவப்பட்டு விவாதங்கள் பண்ணி இருக்காங்க இந்த நூல் பார்த்தீங்கன்னா மனித இனம் குறித்து அன்றைக்கு இருந்த பழங்காலத்தில் இருந்த அந்த நம்பிக்கை எல்லாம் வந்து உடைச்சு எரியுது ஏன்னா கடவுள் கிட்ட இருந்துதான் மனிதன் வந்தான் அப்படின்ற நம்பிக்கை தான் வந்து மக்கள்ட்ட இருந்தது ஆனா வந்து குரங்குல இருந்து தான் மனிதன் என்பவன் வந்து படிநிலை வளர்ச்சியில் உருவானான் அதை உயிரியல் படி மலர்ச்சி அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க இதை டார்வினியம் அப்படின்ற சொல்லாலும் குறிப்பிடுறாங்க இது வந்து படைப்பு கோட்பாடு பாட்டுக்கு எதிரா இருக்கு மனிதனை கடவுள் படைக்கவில்லை பரிணாம வளர்ச்சியாலேயே மனிதனம் உருவாகி இருக்கிறது அப்படின்றதுதான் வந்து டார்வின் இந்த உலகத்துக்கு கொடுத்த அற்புதமான ஒரு செய்தி அதனால நீங்க எல்லாம் வந்து எதுவுமே மாத்த முடியாது வாழ்க்கைன்றது ஒரு போராட்டம் அதுல நீங்க வந்து தப்பிக்கவே முடியாது தகுதி இல்லாததெல்லாம் அழிஞ்சு போகும் தகுதியோட இருக்கிறது வாழும் அவ்வளவுதான் ரொம்ப ஒரு சிம்பிள் தியரின்னு சொல்லுவாங்க இல்லையா மிக எளிமையானது இதை இயற்கை தேர்வு அப்படின்னு சொல்லி சொல்றார் நேச்சுரல் செலக்சன் இதுதான் வந்து டார்வினுடைய மிகச்சிறந்த ஒரு கொள்கை இருந்திருக்கு வாழ்க்கை போராட்டத்தில் தேவையான பண்புகளை நம்ம வளர்த்துக்கணும் தேவையில்லாதெல்லாம் விட்ரனும் இப்படித்தான் வந்து ஒரு உயிரினம் வந்து சூழலுக்கு ஏற்ற தகவமைப்புகளை வளர்த்துக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா வந்து அது இன்னொரு நல்ல படிநிலை வளர்ச்சியாக அமைந்து நல்ல ஒரு இனமாக மாறுகிறது குரங்கிலிருந்து மனிதன் வந்த உடனே வந்து பெரிய இன்றைக்கு இருக்கிற மாதிரியான வாழ்க்கை சூழல் அவன் வாழ்ந்தல அவ்வளவு அறிவெல்லாம் கிடையாது கொஞ்சம் கொஞ்சமா ஒரு தலைமுறை தலைமுறையாக மனித இனத்துக்குள் இருந்த அந்த ஏற்ற இரக்கங்கள் எல்லாம் புரிஞ்சு இது சரி இது தவறு இதை செய்யணும் இதை செய்யக்கூடாதுன்றத புரிஞ்சுகிட்டு அதற்குப் பிறகுதான் வந்து ஒரு பொதுவான இனத்திலிருந்து விலகி தனிப்பட்ட ஒரு இனமாக மாறுகிறான் அதாவது விலங்கினம் அப்படின்ற அந்த குழுவிலிருந்து விலகி மனித இனம் நாங்க வந்து தனிப்பட்டவர்கள் எங்களுக்கு வந்து தனிப்பட்ட பண்புகள் இருக்கு அப்படின்றதை உலகத்திற்கு வெளிப்படுத்தக்கூடிய ஒரு இனமாக பின்னாலதான் வந்து மாறுறான் அப்படின்றதுதான் டார்வின் சொல்றார் சரி இப்படி மனிதன் முன்னேறுவதற்கு எதெல்லாம் அடிப்படை காரணிகளாக இருந்திருக்குன்னா மரபு சார்ந்த அறிவு சூழலியல் சார்ந்த புரிதல் தகவமைப்பு தொழில்நுட்ப அறிவு அதனால தொழில்நுட்ப அறிவுன்றது மிக முக்கியமானது அதுதான் வந்து மனிதனை மற்ற விலங்குகிட்ட இருந்து மாறுபட்டு காமிக்குது இன்னைக்கு எங்கயாவது நம்ம ஆடோ மாடோ சிங்கமோ புலியோ கரடியோ இதெல்லாம் வந்து பார்த்தீங்கன்னா நாம பயன்படுத்தக்கூடிய இந்த பொருட்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையை அடிப்படையா வச்சிட்டு வாழ்ன்னா கிடையாது இன்னும் வந்து குரங்குன்றது மரத்துக்கு மரம் தாவிட்டுதான் இருக்கு அது ஏற்கனவே சாப்பிட்டுட்டு இருந்துதான் சாப்பிட்டுட்டு இருக்கு இன்னைக்கு மனிதன் கொடுத்து பழக்கப்படுத்தினாலும் சிலவற்றை சாப்பிடுது அதனால அதை நம்ம உள்ள சேர்க்கக்கூடாது அப்படி யானை சிங்கம் புலி இதெல்லாம் நாம என்ன கொடுக்கிறோமோ அதை சாப்பிடுற மாதிரி பழக்கப்படுத்தோமே தவிர பொதுவாக இயல்பாக காடுகள்ல மலைகள்ல வாழக்கூடிய விலங்கினங்கள் எல்லாம் பன்னிடுங்காலத்துக்கு முன்னாடி அவங்களுடைய மூதாதைகள் எப்படி சாப்பிட்டு வாழ்ந்தாங்களோ அதே மாதிரிதான் சாப்பிட்டு வாழ்ந்துட்டு இருக்கு ஏன்னா மனிதன் அப்படி இல்ல ஏற்கனவே போன தலைமுறையில செல்பேசி என்ற ஒன்றே கிடையாது ஆனால் இன்றைக்கு இருக்கிற தலைமுறை செல்பேசி இல்லைன்னா எந்த செயல்பாடுமே நடக்காது அந்த அளவுக்கு வந்து உலகம் மாறிவிட்டது அதனால படிப்படியாக மனிதன் வளர்ச்சி அடைந்திருக்கிறான் இதுதான் வந்து பரிணாம வளர்ச்சி அப்படின்னு சொல்லி சொல்லிட்டு டார்வின் வந்து சொல்றாரு இது மற்ற விலங்கினங்களுக்கு இந்த மாதிரி பண்புகள் எல்லாம் கிடையாது டார்வின் மட்டும் கிடையாது இனவியலாளரான லூயிஸ் ஹென்ரி மார்கன் அப்படின்றவர் இது சார்ந்த நிறைய ஆராய்ச்சிகளை செய்து இதை ஒத்துக்கொண்டிருக்கிறார் இந்த மார்கன் பார்த்தீங்கன்னா மனிதனுடைய அந்த படிநிலை வளர்ச்சியை மூன்றா பிரிக்கிறார் ஒன்னு விலங்காண்டி நிலை இரண்டாவது காட்டுமிராண்டி நிலை மூணாவது நாகரீக நிலை இந்த விலங்காண்டி நிலை என்றது பார்த்தீங்கன்னா விலங்குகள் போல சுத்திக்கிட்டு இருந்து அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா நெருப்பு கண்டுபிடிக்கிறாங்க அடுத்து வில் அம்பு கண்டுபிடிச்சு வேட்டையாட வழங்குறாங்க அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா வந்து பாண்டங்களை தயாரிக்கிற அந்த அறிவை பெறுகிறார்கள் காட்டுமிராண்டி காலத்துல பார்த்தோம்னா வீட்டு விலங்குகளை கொஞ்சம் கொஞ்சமா வளர்க்க ஆரம்பிக்கிறாங்க காட்டுல இருக்கிறதை கொண்டு வந்து வீட்ல வளர்க்கிறது அப்புறம் வேளாண்மை செய்றது அதுக்கப்புறம் உலோக வேலைப்பாடுகளை செய்து கொஞ்சம் கொஞ்சமா வந்து முன்னேறுறாங்க நாகரீக காலத்துல பார்த்தீங்கன்னா எழுத்துக்களை உருவாக்குறாங்க அகரவரிசை உருவாக்குறாங்க கொஞ்சம் கொஞ்சமா வந்து மனிதருக்கு மனிதர் பேசக்கூடிய அந்த பேச்சு முறையை உருவாக்குறாங்க மொழியை உருவாக்கிக் கொண்டு அப்புறம் மேற்சொன்ன அதை எல்லாமே தொடர்ந்து மேம்படுத்தி தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஒரு இனமாக மாறுகிறார்கள் அப்படின்றதுதான் வந்து ரொம்ப அழகா வந்து மார்க்கன் சொல்லி இருக்காரு சரி அடுத்ததாக தமிழருடைய தொழில்நுட்பம் எப்படி எல்லாம் வந்து காலம் காலமாக முன்னேறி வளர்ச்சி அடைந்தது அப்படின்றதை பார்ப்போம் குறிப்பா வந்து பழந்தமிழருடைய தொழில்நுட்பக் கூறுகளான வேளாண்மை நெசவு கட்டுமானம் மருத்துவம் பாதுகாப்பு ஊர்திகள் கைவினைப் பொருட்கள் சார்ந்த படிநிலை வளர்ச்சிகளை நம்ம எடுத்து பார்க்கலாம் அடுத்ததாக தமிழருடைய அந்த வேளாண்மை தொழில்நுட்பம் பத்தி பார்க்கலாம் வேளாண்மை துறையில பார்த்தீங்கன்னா விளைநில மேம்பாடு நீர்நிலை உருவாக்கம் நீர்பாசன முறை இது எல்லாத்துலயுமே வந்து தமிழர்கள் அந்த காலத்துல தொழில்நுட்பங்களை பின்பற்றி கொஞ்சம் கொஞ்சமா வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க அதற்காக நிறைய கருவிகளை கண்டுபிடிச்சிருக்காங்க அந்த பொருட்களை எல்லாம் வந்து உற்பத்தி பண்ணி இருக்காங்க அப்படின்னு நம்ம பார்க்கிறோம் உதாரணமா பார்த்தீங்கன்னா வேளாண் புழங்கு பொருட்களாக பார்க்கப்படக்கூடிய கலப்பை தமிழர்கள் தான் வந்து வடிவமைக்கிறாங்க அதைக் கொண்டு உறுதியாக இருக்கக்கூடிய மண்ணை கிளறவும் அதை மேல் கீழ வந்து மாற்றவும் மிகப்பெரிய ஒரு உதவியாக அன்றைக்கு இருந்திருக்கிறது இருக்கிறதை நாஞ்சில் அப்படின்ற பெயரோடும் அழைச்சிருக்காங்க இதை வந்து அபிதான சிந்தாமணியில பார்க்கிறோம் அதுக்கப்புறம் அகநானூறு நூல்லையும் நம்ம பார்க்கிறோம் அந்த கலப்பினுடைய ஒரு உறுப்பாக கொழு இருக்கிறது என்பதை அகனானூர் மூலமா தெரிஞ்சுக்கிறோம் அதுமட்டும் இல்லாம அந்த விளையக்கூடிய நிலத்தை பண்படுத்தக்கூடிய கருவிகள்ல ஒன்றாக தளம்பு என்கிற கருவியை மனிதர்கள் தமிழர்கள் அன்றைக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள்ன்றது நம்ம இலக்கியம் மூலமாக தெரிஞ்சுக்கிறோம் குறிப்பா புறநானூறுல பார்த்தீங்கன்னா நன்சை நிலத்தில் இருக்கக்கூடிய மண் கட்டிகளை உடைச்சு நிலத்தை சமன்படுத்தக்கூடிய ஒரு கருவி பெயர்தான் தளம்பு என்கிற கருவி அப்படின்னு சொல்லி சொல்றாங்க அதை பாடல் மூலமா பாருங்க மலங்குமிளிர் செருவில் தளம்பு தடித்திட்ட பழன வாழை அப்படின்னு ஒரு பாடல் இருக்கு இதுல என்ன சொல்லி இருக்காங்கன்னா வயல்ல பார்த்தீங்கன்னா வாழை மீன்கள் எல்லாம் நிறைய இருக்கும் அந்த வாழை மீன்கள் தளம்பிடை மாட்டி வெட்டுப்பட்டன என்கிற கருத்தை சொல்றாங்க அதனால தளம்பு அப்படின்றது பொறியியல் நுட்பத்தோடு உருவாக்கப்பட்ட சுழலும் அமைப்புடைய ஒரு வேளான் கருவின்னு நம்மளால வந்து புரிஞ்சுக்க முடியுது அதனால சங்க காலத்திலேயே நம்முடைய தமிழர்கள் வேளாண் கருவிகளை கண்டுபிடிச்சு பயன்படுத்தி இருக்காங்க இன்னும் எல்லாருக்கும் தெரிஞ்ச நீர் பாய்ச்சுவதற்கு நீர் ஏற்றுவதற்கான கருவிகளை அன்னைக்கு வந்து பயன்படுத்தி இருக்காங்க ஏத்த மறைக்கிறது அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா அதுல அந்த கருவிகளுக்கு என்னெல்லாம் பேர் வச்சிருக்காங்கன்னா பட்டை பன்றிப்பொறி ஆம்பி சால் தொப்பரை துளா பூட்டைப்பொறி இந்த மாதிரி பல பெயர்கள் இட்டு அழிச்சிருக்காங்க இதை வச்சுக்கிட்டு கீழ இருக்கக்கூடிய தண்ணியை மேல கொண்டு வர்றதும் அதை வந்து மற்ற இடங்களுக்கு போகும் வகையில இறைக்கிறது இது போன்றவற்றை செய்வதற்கு இந்த கருவிகள் எல்லாம் வந்து வடிவமைச்சு பயன்படுத்தி இருக்காங்க அதே மாதிரி தமிழருடைய அந்த வேளாண்மை தொழில்நுட்பத்துல மிக முக்கியமானதாக கருதப்படக்கூடியது கரும்பு பிழி எந்திரம் இன்னைக்கு கூட பார்த்தீங்கன்னா நம்ம கரும்பு ஜூஸ் வேணும்னு சொல்லிட்டு நகரங்கள்ல வந்து வாங்கி குடிச்சிக்கிட்டு இருக்கோம் ஆனா கிராமங்கள்ல பார்த்தீங்கன்னா அந்த கரும்பை பிழிந்து சாறு எடுத்து வெள்ளைக்கட்டிகள் தயாரிக்கிறாங்க அதுக்கு பேரு வந்து கரும்பு பிழி எந்திரம்ன்னு சொல்லி சொல்றாங்க அந்த கரும்பு பிழி எந்திரத்துடைய ஒளி எப்படி இருக்குமாம் ஒரு ஆண் யானை வந்து பிளிரலை போன்று இருக்கும் அப்படின்னு சொல்லிட்டு ரொம்ப அழகாக சங்க இலக்கியங்கள் எல்லாம் வந்து குறிப்பிட்டிருக்காங்க கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் அப்படின்ற ஒரு சொற்றொடரை நம்ம பார்க்கிறோம் இது மூலமாக தமிழர்கள் பன்னிடும் காலத்துக்கு முன்னாடியே வேளாண்மை தொழில்நுட்பத்தில் மிக அதிகமான முன்னேற்றத்தை கண்டிருக்காங்கன்றதை பார்க்கிறோம் அடுத்ததாக நெசவுத் தொழில்நுட்பம் நெசவுத் தொழிலுக்கு மூலப்பொருள் பார்த்தீங்கன்னா பருத்தி என்று சொல்லக்கூடிய அந்த பருத்தி அதிலிருந்து எடுக்கக்கூடிய அந்த பஞ்சு அப்படின்னு சொல்லுவோம் அந்த பஞ்சை எடுத்து நூலாக நூற்று ஆடையாக மாற்றக்கூடிய அந்த ஆடை தயாரிப்பு எந்திரங்களை எல்லாம் அந்த காலத்துல வந்து உருவாக்கி இருக்காங்க அதுமட்டும் இல்லாம பருவத்துக்கு ஏற்றபடியும் வயதுக்கு ஏற்றபடியும் பாலினத்துக்கு ஏற்றபடியும் ஆடைகளை உருவாக்கக்கூடிய அந்த தொழில்நுட்பம் அன்றைக்கு தமிழர்களுக்கு இருந்து தெரிஞ்சிருக்கு அதுமட்டும் இல்லாம வெறுமனே வந்து வெள்ளை வெள்ளையாக ஆடைகளை உடுத்துவதை விட்டுவிட்டு வண்ண வண்ணமான ஆடைகளை அலங்காரம் மிக்க ஆடைகளை உடுத்துவதற்கு தயாரிப்பதற்கு அன்றைய தமிழர்கள் வந்து பழக்கப்பட்டிருந்தார்கள் அப்படின்றது இலக்கியங்கள் மூலமா நாம தெரிஞ்சுக்கிறோம் இது மட்டும் இல்லாம பருத்தி மயிர் பட்டு இந்த மாதிரி பல மூலப்பொருட்களைக் கொண்டு ஆடைகளை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்த ஒரு இனமாக தமிழ் இனத்தை நாம பார்க்கிறோம் சிலப்பதிகாரத்தில் பார்த்தீங்கன்னா நூலினும் மயிரினும் நுழைநூல் பாட்டினும் பால்வகை தெரியும் பன்னூற்று அடுக்கத்து நறுமடி செரித்த அறுவை வீதி என்கிற அந்த பாடலை நம்ம பார்க்கிறோம் இதன் மூலமாக நம்ம மேற்சொன்ன கருத்துக்கள் எல்லாம் உண்மை என்பதை நம்ம புரிஞ்சுக்க முடியுது அடுத்ததாக கட்டுமானம் சார்ந்த அறிவியல் முறை தமிழர்கள் எப்படி பின்பற்றி வந்திருக்காங்க நம்ம பார்க்கலாம் கட்டுமானம் அப்படின்னா வந்து வீடு கட்டுறது அப்படின்றது முதன்மையானது அதற்கு அடுத்து பார்த்தீங்கன்னா பாதுகாப்பு அரண்களை உருவாக்குதல் அரண்மனை கட்டுதல் இன்னும் வந்து அணைகளை கட்டுதல் இந்த மாதிரி பல்வேறு கட்டுமான தொழில்நுட்பங்கள்ல தமிழர்கள் பழங்காலத்திலே வந்து சிறந்தவர்களாக இருந்திருக்காங்க அதாவது குறிப்பா பார்த்தீங்க அப்படின்னா பெரிய பெரிய மாட மாளிகைகளை கட்டி அன்றைக்கு சிறப்பான வாழ்க்கை முறை வாழ்ந்து இருக்காங்கன்றத தெரிஞ்சுக்க முடியுது குறிப்பா பார்த்தீங்கன்னா மிக அழகான தூண்கள் நிலாமுற்றம் பெரிய பெரிய மாடம் மாளிகைகள் அந்த மாதிரி உடைய பெரிய பெரிய அரண்மனைகள் எல்லாம் கட்டி வந்து வாழ்ந்து இருக்காங்க அப்படின்னு சிலப்பதிகாரம் மூலமா தெரிஞ்சுக்க முடியுது அதுமட்டும் இல்லாம குளிர் காலத்துக்கு ஏற்றபடி தளம் கோடை காலத்துக்கு ஏற்றபடி தளம் இந்த மாதிரி தனித்தனியா இருந்ததை வந்து சிலப்பதிகாரம் உறுதிப்படுத்துது அதுக்கு அடுத்து பார்த்தீங்கன்னா பாதுகாப்பு தொழில்நுட்பத்துல மிகச்சிறந்த கருவிகளை எல்லாம் வந்து மனிதர்கள் உருவாக்கி பயன்படுத்தி இருக்காங்க இன்னைக்கு தானே வந்து சுடக்கூடிய நிறைய துப்பாக்கிகள் வந்து நம்முடைய இந்தியர்கள் வந்து பயன்படுத்திட்டு வராங்க உலகமே பயன்படுத்திட்டு வருது அப்படிப்பட்ட அந்த தொழில்நுட்பத்தை வந்து பண்டைய காலத்துல தானே அம்பெறியக்கூடிய ஒரு பொறியை வந்து தமிழர்கள் பயன்படுத்தி இருக்காங்கன்றது இந்த பதிற்று பத்து பாடல் மூலமா தெரிஞ்சுக்க முடியுது செம்பொறி சிலம்பொடு அணிந்தழை தூக்கும் எந்திர தகைப்பின் அம்புடை வாயில் அப்படின்ற அந்த பாடல்ல பார்த்தீங்கன்னா தானாகவே வீரர்களுடைய துணை இல்லாமல் அம்பை எய்தக்கூடிய அந்த முறையெல்லாம் வந்து எந்திரப் பொறிகளை நம்முடைய தமிழர்கள் உருவாக்கி பயன்படுத்தி இருக்காங்கன்றத உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைஞ்சிருக்கு அது மட்டும் இல்லாம பார்த்தீங்கன்னா சிலப்பதிகாரத்துல கூட இந்த மாதிரி எந்திரப் பொறிகள் பற்றி எல்லாம் கருத்துக்கள் எல்லாம் இருக்கு வளைந்து தானே அம்பேதும் எந்திரம் கல்லினை வீசும் கவன் பகைவருடைய கழுத்தை முறுக்கக்கூடிய சங்கிலிகள் அதே மாதிரி பறவை தலை போன்ற அடுப்பு பகைவர் மீது பாய்ந்து தாக்கும் மீன் கொத்தி பறவை போன்ற பொறிகள் மதில் மேல ஏறுறவங்களை வந்து கோட்டால வந்து கிழித்தெறியக்கூடிய பன்றிப் பொறிகள் இந்த மாதிரி பலவற்றை பாதுகாப்பு கருதி தமிழர்கள் உருவாக்கி பயன்படுத்திட்டு வந்திருக்காங்கன்றத தெரிஞ்சுக்கிறோம் அடுத்ததாக தமிழருடைய நீர் நிலை பாதுகாப்பு நீர்நிலை சார்ந்த கட்டுமானங்கள் பத்தி பார்க்கலாம் இந்த பழந்தமிழருடைய நீர் மேலாண்மை தொழில்நுட்பத்திற்கு ஒரு பெரிய மகுடம் போன்று இருக்கக்கூடியது எதுன்னு கேட்டீங்கன்னா கரிகாலன் கட்டிய கல்லணை இந்த கரிகாலனுடைய கல்லணை என்றது மிகப்பெரிய ஒரு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று எப்படி சொல்றோம்னா நம்ம கடற்கரைக்கு போய் நின்னோம்னு வச்சுக்கோங்களேன் அந்த மணல்ல கால் வச்சிருப்போம் அந்த அலை வந்து நம்ம கால் கிட்ட வரும் அது போகும்போது நம்ம கால் கீழ இருக்கக்கூடிய அந்த மணலை அப்படியே எடுத்துட்டு போயிடும் அப்ப நம்ம கால் கொஞ்சம் கீழே இறங்கும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான் நம்முடைய அந்த காவிரி ஆற்றுக்கு குறுக்க வந்து கற்களை அடுக்குறாங்க அந்த கற்கள் என்ன ஆகுது கொஞ்சம் கொஞ்சமா தண்ணியால அந்த அரிப்பு ஏற்பட்டு அந்த கல்லுக்கு கீழ இருக்கக்கூடிய மணல் எல்லாம் அரிச்சிட்டு போகுது அப்ப தானாவே அந்த கருங்கற்கள் எல்லாம் வந்து கீழே இறங்குது அடிப்பக்கத்துல இறங்குது இப்படி கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா கற்கள் இறங்க இறங்க அது மேல களிமண்ணை பூசி அது மேல மறுபடியும் கற்களை வச்சு இப்படி கொஞ்சம் கொஞ்சமா அடுக்கி அடுக்கி அடுக்கி தான் அடியிலிருந்து மேல் வரைக்கும் கருங்கற்களாலேயே வந்து ஒரு அணையை கரிகாலன் வந்து உருவாக்கி இருக்கான் மிகப்பெரிய ஒரு தொழில்நுட்பம் இது அதுமட்டும் இல்லாம இந்த அணை வந்து ஒரு சாதாரண ஒரு சின்ன குட்டியா வந்து ஒரு அணையை அவர் கட்டிடல கிட்டத்தட்ட 1080 அடி நீளத்திலும் 40 முதல் 50 அடி அகலத்திலும் வளைந்த வடிவத்துல இந்த அணையை கரிகாலன் கட்டிருக்கார் இந்த அணை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் கடந்தும் உலகத்திலேயே செயல்பாட்டு இருக்கக்கூடிய ஒரே அணை அப்படின்னு சொன்னா அந்த பெருமை எல்லாமே நம்முடைய கல்லணைக்கு தான் சேரும் அதுமட்டும் இல்லாமல் தமிழர்கள் நிறைய ஊர்திகளை கண்டுபிடிச்சு பயன்படுத்தி இருக்காங்க அதற்கு அடிப்படையாக விளங்கக்கூடிய சக்கரம் இந்த சக்கரத்தை தமிழர்கள் கண்டுபிடிச்சு வணிக வண்டிகள் முதல் விவசாய பொருட்கள் வரைக்கும் அனைத்தையும் வந்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு போவதற்கு இந்த சக்கரங்களை வந்து கண்டுபிடிச்சு பயன்படுத்தி இருக்காங்க இதை மண்பாண்டுகளை வனைவதற்கு இந்த சக்கரங்களை பயன்படுத்தி முன்னேறியதை வந்து பார்த்தீங்கன்னா மலைப்படுகடாமல் வரக்கூடிய பாடல்கள் மூலமா நம்ம தெரிஞ்சுக்கிறோம் இது மட்டும் இல்லாம கப்பல் கட்டுமானத்திலும் தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்காங்க அப்படின்றதையும் நம்ம பல தமிழருடைய இலக்கியங்கள் மூலமா தெரிஞ்சுக்கிறோம் கடல் வணிகத்தில் தலைசிறந்து விளங்கிய அந்த தமிழர்கள் துறைமுகங்களை உருவாக்கி இருக்காங்க அந்த துறைமுகங்களுக்கு அந்த கப்பல்கள் வந்து போறது பத்தி எல்லாம் நிறைய பாடல்கள் இருக்கு கடல் வணிகம் அதே மாதிரி கடல் பாதுகாப்பு இது எல்லாத்துலையுமே வந்து பழங்காலத்து தமிழர்கள் மிகப்பெரிய ஒரு அறிவை பெற்றிருந்தார்கள் மிகப்பெரிய ஒரு பங்களிப்பை உலகத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கிறார்கள் அப்படின்றதை இங்க இருக்கக்கூடிய தமிழ் இலக்கியங்கள் மட்டும் கிடையாது இங்க வந்துட்டு போன பல பயணிகள் வெளிநாட்டில் இருந்து வந்த பல பயணிகள் அவங்களுடைய குறிப்புகளிலும் இதை குறிப்பிட்டிருக்காங்கன்றத நம்ம தெரிஞ்சுக்கிறோம் இந்த கப்பல்களை வந்து வாங்கி விடுறது மட்டும் இல்ல கப்பல்களை இங்கேயே வந்து கட்டி இருக்காங்க அதாவது கப்பல் கட்டுமான தொழில் செய்றவங்களை கம்மியர் அப்படின்ற பெயரிட்டு அந்த காலத்துல வந்து அழைச்சிருக்காங்க கடல் வணிகத்தில் ஈடுபடக்கூடிய களங்களுக்கு நடுவுல வந்து ஏதாவது பயணத்தின் போது பழுது ஏற்பட்டால் கூட அதை செப்பம் செய்யக்கூடிய அந்த பொறியாளராக கம்மியர்கள் இருந்திருக்காங்க அதை கம்மியர் பணினே வந்து குறிப்பிட்டிருக்காங்க அதற்கடுத்து எந்திரப் பாவைகளை உருவாக்கி மக்கள் பயன்படுத்தி இருக்காங்க நம்ம இன்னைக்கு வந்து இப்படி முறுக்குனா வந்து அதுவே ஓடுற ஒரு காரு அதே மாதிரி வந்து பேருந்து இந்த மாதிரி எல்லாம் நம்ம இன்றைக்கு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு நம்ம வாங்கி கொடுக்கிறோம் வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதி பண்ணி எல்லாம் கொடுக்கிறோம் ஆனால் பன்னிடுங்காலத்துக்கு முன்னாடியே நம்முடைய தமிழர்கள் பார்த்தீங்கன்னா தானே இயங்கக்கூடிய எந்திரப் பாவைகளை உருவாக்கி இருக்காங்கன்றத நம்முடைய நற்றினை என்கிற நூல் மூலமா நம்ம தெரிஞ்சுக்கிறோம் நல்வினை பொறி அழி பாவையின் கலங்கி அப்படின்னு சொல்லி சொல்றாங்க அந்த எந்திரத்தால் ஆன பாவையை நம்முடைய தமிழர்கள் வந்து அவங்களே வந்து வடிவமைச்சு அதை வந்து விற்பனை பண்ணி இருக்காங்கன்றத நம்ம தெரிஞ்சுக்கிறோம் அடுத்ததாக எந்திர வாவி அப்படின்ற ஒன்னு நம்ம பார்க்கிறோம் இது பார்த்தீங்கன்னா தானாவே வந்து தண்ணியே நிரப்பக்கூடிய ஒரு பொறி அதாவது எந்திரம் பொருத்தப்பட்டது இதை வந்து பழங்காலத்துல வந்து ஆண்களும் பெண்களுமாக இந்த எந்திரத் தொட்டியில வந்து இருந்து நீராடியதெல்லாம் வந்து மணிமேகலையில ரொம்ப அழகா வந்து எழுதி பதிவு பண்ணி வச்சிருக்காங்க அதுக்கு அடுத்து பார்த்தீங்கன்னா மிக முக்கியமானது பொழுதை அறியக்கூடிய நாழிகை அறியும் கருவியை தமிழர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க இதுக்கு பேர் வந்து குறுநீர் கன்னல் அப்படின்றாங்க பழங்காலத்துல காலத்தை அளந்து கணக்கிடுவதற்கு குறுநீர் கன்னல் அப்படின்ற அந்த பெயரிட்ட கருவி வந்து மிக மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது இதை பத்தி வந்து அகநானூல்ல ஒரு செய்தி இருக்கு முல்லைப்பாட்டுல ஒரு செய்தி இருக்கு அகநானூல்ல பார்த்தீங்கன்னா குறுநீர் கன்னல் எண்ணுணர் அப்படின்ற ஒரு அடி மூலமா தெரிஞ்சுக்கிறோம் முல்லைப்பாட்டுல பொழுது அளர்ந்து அறியும் பொய்யா மாக்கள் என்கிற அடி மூலமா தெரிஞ்சுக்கிறோம் இது மட்டும் இல்லாம பண்டைய கால தமிழர்கள் வான் சார்ந்த அறிவை பெற்றிருந்தார்கள் வான் சார்ந்து மட்டும் இல்ல வானுறுதி சார்ந்த அறிவையும் பெற்றிருந்தார்கள் என்பதை நம்ம பல்வேறு இலக்கியங்கள் மூலமா தெரிஞ்சுக்கலாம் குறிப்பா பார்த்தீங்கன்னா புறநானூறு பரிபாடல் சீவக சிந்தாமணி போன்ற பல இலக்கியங்கள் மூலமா நம்ம தெரிஞ்சுக்கலாம் ஓட்டுனர் தேவையில்லாத வானுறுதி சிந்தித்துப் பார்த்த பழம் தமிழர் அதை செயல்படுத்தி அதை பயன்படுத்தி உலக அளவில் வந்து வியப்பை ஏற்படுத்தி இருக்காங்கன்றத நம்ம இலக்கியங்கள் மூலமா தெரிஞ்சுக்கிறோம் இன்னைக்கு தான் வந்து ஆள் இல்லாத விமானம்ன்றது ஒரு பெரிய பேசுபொருளாக ஆச்சரியப்படக்கூடிய ஒன்றாக வந்து இருந்திருக்கு ஆனா அன்றைக்கே வந்து நம்முடைய தமிழர்கள் அதை கண்டுபிடிச்சிருக்காங்க புறநானூறு பாடல் அடி மூலமா தெரிஞ்சுக்கிறோம் அதே மாதிரி வானுறுதி ஓட்டுவதற்கான அந்த வளவன் என்கிற கலைச்சொல்லை புறநானூறு நமக்கு அழகா வந்து கொடுத்திருக்கு ஏன்னா இன்னைக்கு எல்லாமே நம்ம தமிழ் படுத்தி சொல்லிட்டு இருக்கோம் அதனால வந்து பைலட் அப்படின்றது நம்ம ரொம்ப கஷ்டப்பட வேண்டியதில்லை அதனால வானுறுதியை ஓட்டுபவர் என்ற சொல்லுக்கு வந்து இணையான ஒரு தமிழ்ச் சொல்லாக நம்ம வளவன் என்கிற ஒரு கலைச்சொல்லை அன்றைக்கே வந்து புறநானூறு கொடுத்திருக்கு அது மட்டும் இல்லாம பார்த்தீங்கன்னா பரிபாடல்ல உம்பர் உரையும் ஒளிக்கிளர் வானுயர் பாடும் அம்பி கரவா வழக்கற்றே அப்படின்ற அந்த பாடல் அடிகள் மூலமாக தேவர்கள் எல்லாம் வந்து திரியக்கூடிய அந்த விமானங்களுடைய நிழல் வைகை ஆற்றில் விழுந்துச்சு அப்படின்றதை பரிபாடல் என்கிற பாடல் மூலமா நாம தெரிஞ்சுக்கிறோம் இது மட்டும் இல்லாம சீவ சிந்தாமணியில ஆகாயத்தில் பறக்கக்கூடிய அந்த வாகனத்திற்கு மயிர்ப்பொறி என்று வந்து பெயரிட்டு அழைச்சிருக்காங்க வெம் திரளான் பெரும் தச்சனை கூவி ஓர் எந்திர ஊர்தி ஏற்றும் என்றான் அப்படின்ற அந்த பாடல் அடி மூலமாக தச்சன் கிட்ட வானுறுதி ஒன்றினை உருவாக்க மன்னன் சச்சந்தன் கட்டளையிட்டதை வந்து குறிப்பிடுது அப்படின்னு நாம பார்க்கிறோம் அந்த தச்சன் ஏழு நாட்கள் வானில் பறக்கக்கூடிய திறனுடைய மயிர்ப்பொறி ஒன்றை உருவாக்கி முடித்ததை எழுநாளிடை செல்வதோர் மாமையில் செய்தனன் அன்றே அப்படின்ற பாடல் அளி மூலமா நம்ம உறுதிப்படுத்திக்கிறோம் இதுவரைக்கும் நம்ம பார்த்த செய்திகள் மூலமாக நம்முடைய தமிழர்கள் வந்து தொழில்நுட்ப ரீதியாக எந்த அளவுக்கு முன்னேறி இருக்காங்க அப்படின்றதை நம்ம விரிவாக நம்ம பார்த்தோம் இன்றைக்கு இருக்கிற முன்னேற்றம் இல்லை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே தமிழர்கள் வந்து தங்களுடைய அறிவை பயன்படுத்தி எல்லாவிதமான துறைகளிலும் பல்வேறு கருவிகளை வந்து தயாரிச்சு ஒரு முன்னேற்றப் பாதையில் அடிபோட்டு இன்றைக்கு உலகத்தின் தலைசிறந்த இடமாக ஒரு முன்னோடி இனமாக தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நாம தெரிஞ்சுக்கிறோம் இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க இதுவரைக்கும் சப்ஸ்கிரைப் பண்ணாம பார்த்திருக்கவங்க மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க நன்றி நண்பர்களே நான் உங்கள் வெப் தமிழ் நண்பன் இதுபோல நிறைய வீடியோக்கள் நம்ம சேனல்ல இருக்கு பார்த்து உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

தொழில்நுட்ப மேலாண்மை தமிழும் அறிவியலும் tholil nutpa mela...