மனித வாழ்வும் அறிவியலும் | தமிழக வரலாறும் பண்பாடும் | தமிழ் நதி | UNofficial Tamil

UNofficial Tamil1,107 words

Full Transcript

வணக்கம். இன்னைக்கு நாம பார்க்க போற பதிவு அறிவியலும் மனித வாழ்வும். அறிவியல் மனித குலத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் அப்படின்னு சொல்லலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் இல்லனா நம்மளுடைய வாழ்க்கை இந்த அளவுக்கு எளிமையா இருந்திருக்காது. ஆதி மனிதன் காலம் முதல் இன்றுவரை மனித வாழ்க்கையில ஒவ்வொரு நிலையிலும் அறிவியல் சார்ந்த சிந்தனைகள் இருந்துகிட்டே இருக்கு. இந்த அறிவியல் மனித வாழ்க்கையில் கொண்டு வந்த மாற்றங்கள் என்னலாம்? தொழில்நுட்ப வளர்ச்சியுடைய ஆரம்பம் என்னவா இருந்துச்சு? அறிவியல் சார்ந்த வாழ்வியல் இன்று எப்படி இருக்கு? இதை எல்லாத்தையும் பத்தி இந்த பதிவுல பார்க்கலாம். பதிவுக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்முடைய சேனல் யன் அபிஷயல் கற்பம் தமிழை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நான் தமிழ்நதி. அறிவியல் அப்படிங்கிறது அறிந்து கொள்ளுதல் அப்படிங்கிற பொருள்படும். ஏற்கனவே இருக்கக்கூடிய விஷயங்களை மனிதன் அறிந்து கொள்றதுதான் அறிவியல். அப்படி அறிந்து கொண்ட விஷயங்களுக்கு காலத்துக்கு ஏத்த மாதிரி பல மாற்றங்களை புகுத்தி நம்மளுடைய வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி எளிமையாக்கி கொள்றதுதான் தொழில்நுட்ப வளர்ச்சி. பழைய கற்காலத்துடைய தொடக்கத்தில மக்கள் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்களாகவும் இருந்திருக்காங்க. இவங்களுக்கு தாவரங்கள் மூலிகைகள் பத்தின ஓரளவுக்கு அறிவு இருந்துச்சு. அவர்களுடைய உணவு அதனால ரொம்ப சுகாதாரமானதாவும் இருந்துச்சு. அன்றைய மக்களுடைய தொழில்நுட்ப திறனை அவர்கள் உருவாக்கிய கற்கள் கொண்டு நம்மளால அறிந்து கொள்ள முடியும். அடுத்ததா புதிய கற்காலம். இது மனிதர்கள் வேட்டையாடக்கூடிய வாழ்க்கை முறையிலிருந்து மாறி விவசாயத்தை அடிப்படையாக கொண்ட வாழ்க்கை முறைக்கு மாற தொடங்கிய காலம் இந்த காலம். அதாவது உணவு தேடிய காலத்திலிருந்து மாறி தங்களுக்கான உணவை தாங்களே உற்பத்தி செய்யக்கூடிய காலகட்டம்தான் இது. புதிய கற்காலத்தில மனிதர்கள் பொருட்களை கையாளுவதற்கும், வடிவமைப்பதற்கும் கற்றுக் கொண்டிருந்தனர். மனித வரலாற்றின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு அப்படின்னு சொல்லக்கூடிய நெருப்பை கையாளுதற்கு புதிய கற்கால மக்கள் தெரிந்து கொண்டிருந்தனர். மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு காலகட்டம்தான் புதிய கற்காலம். அடுத்ததா உலோக காலம். புதிய கற்காலத்தை தொடர்ந்து வந்த காலத்தை செம்பு கற்காலம் இல்லன்னா உலோக காலம் அப்படின்னு சொல்றது உண்டு. இந்த காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததோடு உலோகத்திலான பொருட்களை உருவாக்கி பயன்படுத்தவும் செஞ்சாங்க. அதுமட்டும் இல்லாம உலோகத்தை சரியான அளவில் கலந்து பல புதிய பொருட்களை உருவாக்கவும் செஞ்சாங்க. மனிதனுடைய மகத்தான கண்டுபிடிப்புகள்ல ஒன்று சக்கரம். ஆரம்ப கால கண்டுபிடிப்பாக சக்கரத்தை சொல்றதும் உண்டு. ஆனா விவசாயம், படகுகள், நெய்ததுணி, மண்பாண்டங்கள் இதெல்லாம் கண்டுபிடிச்சதுக்கு அப்புறமாதான் சக்கரத்துடைய பயன்பாடு வந்துச்சு. இதுக்கு அப்புறமா வந்த மன்னராட்சி காலங்கள்ல பல புலவர்கள் அறிவியல் கருத்துக்களை தங்களுடைய இலக்கியங்கள்ல் பதிவு செஞ்சிருக்கறாங்க. தமிழ் இலக்கியங்களலையும் நிறைய கருத்துக்கள் அறிவியல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கு. அது என்னென்ன அப்படின்னு பார்க்கலாம். ச பரிமலா அவர்கள் தன்னுடைய நூல்ல தொழில்நுட்ப மேலாண்மை குறித்து பேசி இருக்கிறாங்க. சிந்து சமவலி நாகரிகம், கீழடி நாகரிகம் இங்கல்லாம் வந்து கண்டெடுக்கப்பட்ட சுட்ட செங்களை வச்சுதான் அன்றைக்கு தமிழர்கள் வீடுகளை அமைச்சது போல இன்னை வரைக்கும் நாம வீடுகளை கட்டிட்டு இருக்கோம். அதுமட்டுமி இல்லாம இரும்புகளை உருக்கி வால், ஈட்டி போன்ற ஆயுதங்கள் எல்லாம் தமிழர்கள் செஞ்சு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செஞ்சிருக்கறாங்க. இந்த இரும்பு உருக்குறதுக்கு அதிகமான வெப்பம் தேவை. ஆனா அதற்காக நிறைய மரங்களை அவங்க வெட்டி எரிக்கல. அதற்கு பதிலா போலிகைகளை பயன்படுத்துனதா இலக்கியங்கள்ல பதிவு செய்யப்பட்டிருக்கு. அதற்கு அப்புறமா அறிவியல் ஆய்வுகள் தொடங்கப்பட்டு பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்துச்சு. அறிவியல் ஆய்வுகள் மூலமா ஆக்கப்பொருட்கள் ஒரு பக்கம் கிடைச்சாலும் மறுபக்கம் அழிவும் இருந்துச்சு. ஆனாலும் மக்கள் அறிவியலால ஏற்படக்கூடிய தீமையை ஒதுக்கி வச்சிட்டு அறிவியலால இருக்கக்கூடிய நன்மையை ஏற்று கொண்டதாலதான் அறிவியல் மேன்மேலும் வளர ஆரம்பிச்சுட்டே இருந்துச்சு. 1454ஆம் ஆண்டு கூடன்பெர்க் அப்படிங்கறவரால அச்சிடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுச்சு. இதன் மூலமா நிறைய நூல்கள் வெளிவந்துச்சு. இந்த நூல்கள் மூலமா மக்களுடைய அறியாமையும் நீங்கியது. 1870 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கிரகாம்பல் அப்படிங்கறவரால தொலைபேசி கண்டறியப்பட்ட போது மின்கம்பி இணைப்புகளாலதான் அது செயல்பட்டுச்சு. ஆனா இன்னைக்கு ரேடியோ அலைகள் மூலமாகவும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் மூலமாகவும் கைபேசி வடிவுல இன்னைக்கு நாம அதை பயன்படுத்திட்டு வரோம். இன்றைக்கான உலகத்துல கணினியோட பயன்பாடு ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கு. இந்த கணினியில டிம் பெர்னர்ஸ்லி அப்படிங்கறவரால 1994ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வையக வியாபக வலை இல்லன்னா வையக விரிவு வலை அப்படின்னு சொல்லக்கூடிய வேர்ல்ட் வைட் வெப் இதை நம்ம ஷார்ட்டா wwwன்னு சொல்லுவோம். கடிதம் வாயிலாக தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்த நாம இன்னைக்கு பேச நினைக்கக்கூடிய ஒரு நபர் உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் மின்னஞ்சல் மூலமாகவோ காணொளி அழைப்பு மூலமாகவோ கூட்டு தொலைபேசி அழைப்பு மூலமாகவோ உரையாடி கொண்டிட்டு இருக்கும். கணனி மூலமா தகவல் தொடர்பு மட்டுமி இல்லாம நாளிதல்கள், புத்தகங்கள், வெளியீடு, பொழுது போக்கு இப்படி பல விஷயங்கள் மனிதனுடைய அறிவை விரிவுபடுத்திக்கிட்டே இருக்குது. அதற்கு அப்புறமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியாலதான் விண்வெளி ஆராய்ச்சி மூலமா சந்திரனுக்கு விண்கலன்ல பயணம் செய்ய முடிந்தது. செவ்வாய் கரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்யவும் முடிஞ்ுச்சு. தமிழ் இலக்கியங்களும் நிகண்டுகளும் மரபுசார் மருத்துவ நூல்களும் இன்றைய அறிவியல் துறைசார் நூல்களுக்கு முன்னோடியா இருக்கின்றன அப்படிங்கிறத நம்மளால மறுக்க முடியாது. அப்படி எழுதப்பட்ட தமிழ் நூல்கள்ல அறிவியலுடைய ஐம்பெரும் பிரிவுகள்னு சொல்லப்படக்கூடிய கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல் இது சம்பந்தப்பட்ட கருத்துக்களும் இடம்பெற்றிருக்கு. அப்படி எழுதப்பட்ட ஒரு சில கருத்துக்களை மட்டும் இங்க நான் பதிவு செய்றேன். இலக்கியங்கள்ல் கூறப்பட்டுள்ள செய்திகள் எல்லாமே உண்மை அப்படின்னு சொல்ல முடியாது. அதே நேரத்துல ஆய்வுக்கு உட்படுத்தினா உண்மையான செய்திகளை அறிந்து கொள்ள முடியும். இதை மறுக்கவும் முடியாது. சங்க நூல்களில் செடி கொடிகள் அப்படிங்கிற நூல்ல இலக்கியத்தில் இடம்பெற்றிருந்த தாவரவியல் செய்திகள் கூறப்பட்டுள்ளன. நாரில் முருங்கை நவிரல் வான்பூச் அப்படிங்கிற பாடல் அகநானூர்ல இடம்பெற்றிருக்கு. இந்த சங்க பாடல்ல சுட்டப்படக்கூடிய முருங்கை மரமானது எவ்வளவுதான் முதிர்ந்தாலும் அந்த மரம் எப்போதும் வலிமையா இருந்தது கிடையாது. எளிதில் முறிந்து விழக்கூடிய அளவுக்கு வலுவற்றவையா இருக்குது அப்படிங்கிறதுதான் இந்த பாடலுடைய கருத்து. அதுமட்டுமி இல்லாம முருங்குதல் அப்படிங்கிற சொல்லுக்கு முறிதல் ஒடிதல் அப்படிங்கிற பொருள் சுட்டப்படுது தமிழ் இலக்கியத்தில. இதிலிருந்து எளிதில் முறிந்து விழக்கூடிய தன்மை உடையதா இருக்கிறதுனாலதான் அந்த மரத்துக்கு முருங்கை அப்படின்னு பெயர் சூட்டப்பட்டுள்ளத நம்மளால அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தாவரத்திற்கும் அறிவியல் முறைப்படி தாவரவியல் பெயர் கொடுக்கப்படுறது உண்டு. இந்த பெயர் வந்து அந்த தாவரத்துடைய தோற்றம், இயல்பு, தன்மை, குணம், நிறம், பண்பு இதன் அடிப்படையில் வழங்கப்படும். அந்த மாதிரி பார்த்தோம் அப்படின்னா முருங்கை மரத்துடைய அறிவியல் பெயர் மொரிங்கா அப்படின்னட்டு சொல்லப்படுது. இது முருங்கை அப்படிங்கிற சொல்லின் திரிபு அப்படின்னு சொல்லலாம். இது மட்டும் இல்லாம பதார்த்த குண சிந்தாமணி அப்படிங்கிற சித்தர் இலக்கியத்தில பிஞ்சாரிதோஷம் பெரும் பூவார் போக அப்படிங்கிற பாடல்ல முருங்கை மரத்துடைய மருத்துவ குணங்கள் பேசப்பட்டிருக்கு. இது தமிழ் இலக்கியங்கள்ல் இடம்பெற்றுள்ள தாவரவியல் செய்தி. இதே மாதிரி விலங்கியல் குறித்த செய்திகளும் இடம்பெற்றிருக்கு. தொல்காப்பியம் தொடங்கி சித்தர் நூல்கள் வரைக்கும் விலங்கினங்கள் குறித்த செய்திகள் தமிழ் இலக்கியங்கள்ல் பதிவு செய்யப்பட்டிருக்கு. அதுமட்டுமி இல்லாம தமிழ் மரபுசார் மருத்துவ நூல்கள்ல மான் இனங்கள் அவற்றின் இரட்சியின் மருத்துவ குணங்கள் மான் கொம்புகளின் மருத்துவ குணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னைக்கு மான்களை வேட்டையாடுவதும் மான் இறச்சியை சாப்பிடுறதும் சட்டப்படி குற்றம். ஆனா அன்றைய காலகட்டத்தில வேட்டையாடுதல் அப்படிங்கறது வீரத்துக்கு சான்றான ஒரு செயல். அதனாலதான் மான்கள்ல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறத அன்னைக்கான மக்களும் தெரிஞ்சு வச்சிருக்கறாங்க. பதார்த்த குண சிந்தாமணி அப்படிங்கிற நூல்ல மான் கொம்புகளை பயன்படுத்தி தயாரிக்கப்படக்கூடிய சிருங்கி பற்பம் அப்படிங்கிறத சாப்பிடுறதுனால தேகத்தில வெப்பம் குறைந்து குளிர்ச்சி உண்டாகும் அப்படின்னும் மார்பு நோய் கண் நோய்கள் எல்லாம் குணமாகும் அப்படின்னும் கூறப்பட்டுள்ளது. கலைமானுடைய இறைச்சியை சாப்பிடுவதுனால தேகத்துடைய வலிமை கூடி அழகுபெறும் அப்படின்னும் வாதம், பித்தம், கபம் போன்ற நோய்கள் குணமாகும் அப்படின்னும் குறிப்புகள்ல காணப்படுகின்றன. அடுத்ததா கணிதவியல் குறித்து பார்க்கலாம். தமிழருடைய கணிதவியல் அறிவு அப்படிங்கிறத தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சோழர் வரலாறு. இதுலெல்லாம் இருக்கக்கூடிய குறிப்புகள் வைத்து பார்க்கலாம். விவசாயம், வானியல், வணிகம், கட்டிடக்கலை போன்ற பல துறைகள்ல் கணித அறிவு தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கு. நீட்டல், நிறுத்தல், முகத்தல் போன்ற மிக துல்லியமான கணிதவியல் அளவீட்டு முறைகளை தமிழர்கள் கையாண்டிருக்காங்க. அதுமட்டுமில்லாம பூஜ்ஜியத்தை குறிக்கக்கூடிய சுழியம் உட்பட பல எண்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தி வந்திருக்காங்க. அடுத்ததா வானவியல். புறநானூறு நற்றினை, சிலப்பதிகாரம் போன்ற நூல்கள்ல வானியல் நிகழ்வுகள் மக்கள் வாழ்வியலோடு இணைந்திருக்கிறத பல குறிப்புகள் பரைசாற்றி நிற்கின்றன. தமிழ் புலவர்கள் கணிதவியலிலும் வானவியலிலும் கற்றுத்ததுறை போய்கியவர்களா இருந்ததற்கான காரணமா வானத்தில் உள்ள கோள்களை கணக்கிட்டு நாள்கள், ஆண்டுகள், பருவ காலங்கள் போன்றவற்றை வரையறை செஞ்சிருக்காங்க. தமிழ் இலக்கிய நூல்கள்ல குரு, சனி, செவ்வாய் போன்ற கோள்களுடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டதோடு அவற்றோட நகர்வுகளும், சூரிய கிரகணம், சந்திர கிரகணம் பற்றிய குறிப்புகளும், அவை நிகழக்கூடிய விதம் பற்றிய விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமில்லாம காற்றினுடைய திசைகள், பருவமலை, மேகங்கள், மின்னல், இடி போன்ற வானிலை நிகழ்வுகளும் அவற்றிற்கான நம்பிக்கைகளும் தமிழ் இலக்கியங்கள்ல் பதிவு செய்யப்பட்டிருக்கு. தமிழ் இலக்கியங்கள்ல் இடம்பெற்றுள்ள வேதியல் கருத்துக்கள் குறித்து பார்க்கலாம். வேதியல் பொருட்களுடைய பயன்பாட்டால மண் மலடாக மாறக்கூடிய சூழல் இன்னைக்கு உருவாகிட்டு இருக்கு. இதை மீட்டு உருவாக்கம் செய்றதுக்காகவும் இயற்கை வேளாண்மை தொடர்பான மரபுசார் செய்திகளை தேடி எடுத்து பயன்படுத்த வேண்டிய ஒரு கட்டாயத்தில நாம இன்னைக்கு இருந்துட்டு இருக்கோம். விவசாயியுடைய நண்பன் மண்புழு அப்படின்னு சொல்றது உண்டு. ஆனா இன்னைக்கு அறிவியல் கண்டுபிடிப்பால நம்மளுடைய வாழ்க்கை ரொம்ப எளிமையானதுனால அதே மண்புழுவை கொண்டு தயாரிக்கப்பட்ட உரமான வெர்மி கம்போஸ்ட் பயன்படுத்தினாதான் வேளாண்மையை சீர் செய்ய முடியும் அப்படிங்கிற ஒரு நிலைக்கு நம்ம தள்ளப்பட்டிருக்கோம். பல தமிழர்கள் பயன்படுத்திய அதே முறைதான். ஆனா நாகரிக மாற்றம் ஏற்பட ஏற்பட நம்மளுடைய வாழ்க்கையை நாம எளிமையாக்கிக்கிறதுக்காக இன்னைக்கு அதை வேற மாதிரி பயன்படுத்திட்டு வரோமே தவிர பல தமிழர்கள் பயன்படுத்திய அதே அறிவியல் கருத்துக்களைதான் நாம இன்னைக்கு பயன்படுத்திட்டு வரோம் அப்படிங்கிறது மறுக்க முடியாத உண்மை. மனித வாழ்வும் அறிவியலும் அப்படிங்கிற இந்த பதிவுல மனித வாழ்க்கை முழுவதுமே அறிவியலால ஆக்கப்பட்டிருந்தாலும் அதுல ஒரு சில கருத்துக்களை மட்டும் இதுல நான் சொல்லி இருக்கேன். இந்த பதிவு இதோட முடிவு பெறுது. மீண்டும் ஒரு தமிழ் உரையாடலுடன் சந்திக்கிறேன். நான் தமிழ் நதி. நன்றி.

Need a transcript for another video?

Get free YouTube transcripts with timestamps, translation, and download options.

Transcript content is sourced from YouTube's auto-generated captions or AI transcription. All video content belongs to the original creators. Terms of Service · DMCA Contact

மனித வாழ்வும் அறிவியலும் | தமிழக வரலாறும் பண்பாடும் | தமி...